புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.
யாம் சில அரிசி வேண்டினோம்
வானொலியில் அழகிய பெரியவன் பேட்டி ஒன்று கேட்டு அவரின் நூல்களைப் படிக்க ஆர்வம் வந்தது. நூலுக்கு முன்னுரை திருவள்ளுவர், ஆம் உலகப் பொதுமறையிலிருந்து கதைக்குப்பொருத்தமான ஒருகுறளை இணைத்திருப்பது இந்தநூலுக்கு கூடுதல் சிறப்பு.
சிநேகிதி
மேனிலைப் பள்ளி இறுதித் தேர்வில் "பிடித்த எழுத்தாளர்" தலைப்பில் கட்டுரை வரைக என்றகேள்விக்கு ராணிமுத்து வரிசையில் வாசித்த அகிலனின் நாவல்களால் அவரின் ரசிகையான நான் சந்தோஷத்துடன் அகிலனைப் பற்றியும் அவரின் 'துணைவி ' நாவலைப்பற்றியும் எழுதினேன்.
அனாதை மரங்கள்
வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .
தெனாலிராமன் கதைகள் | Tenali Raman Stories
விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்ற விகடகவிராஜன் எல்லோருக்கும் தெரிந்த தெனாலிராமன். புத்தகத்தில் 27 கதைகள் உள்ளன. தனக்கு வந்த ஆபத்தோ, உடனிருப்பவர்க்கு வரும் சங்கடமோ தன்னுடைய சமயோசித அறிவினால் அழகாக திருப்பிவிட்டு ஒவ்வொருமுறையும் "சபாஷ்" போடவைக்கிறான்
ஓவியர் ‘செள’ – ஒரு படைப்பாளியின் கதை!
ஒரு சஞ்சிகைக்கு ஓவியம் வரைபவனின் சவால்களை சித்தரிக்கும் சுவாரசியமான கட்டுரை. ரசித்து எழுதியது.
அலஸ்காவை தந்து விடு!!
ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் அலஸ்கா மாநிலத்தை அமெரிக்கா மீழத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். https://sofrep.com/news/russian-lawmaker-oleg-matveychev-demands-alaska-and-california-fort-as-reparations-for-sanctions/ இதை அடிப்படையாக வைத்து அலஸ்கா பற்றிய ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளேன்.
யார் இந்த பேங்க்ஸி?
உலகின் பிரபல தெருக்கிறுக்கல் கலைஞர் பேங்க்ஸி (Banksy) பற்றி ஒரு கட்டுரை. தெருக் கிறுக்கல்களை கண்டு நாம் முகம் சுளிப்பது சகஜமே. ஆனால் இவர் இக் கலையை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியிருக்கிறார் என்பது உண்மையே. தெருக் கிறுக்கலை புனிதப்படுத்த முயலாமல் உண்மைகளை தொகுத்து எழுதிய கட்டுரை இது.
உயிர்த்தெழும் உயிரினம்!
இவ்வுலகைவிட்டு மறைந்துபோன உயிரினங்களை மீண்டும் விஞ்ஞானத்தின் உதவியுடன் மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது ஒரு உற்சாகமான செய்தி!
கணினியும் கதையெழுதும்!
உலகெங்கும் விஞ்ஞான வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது. விஞ்ஞான வாரத்தை ஒட்டி இக்கட்டுரையை இன்று எழுதினேன். விஞ்ஞானமும் கற்பனையும் சந்திக்கு மையம் பற்றிய கட்டுரை.
அறிவியல் விளையாட்டு
ஆன்மீகமோ,அறிவியலோ, கருத்துகளோ ,கணிதமோ, கதையாக, பாட்டாக, விளையாட்டாக குழந்தைகளிடம் கற்றலை விதைத்தால் அது அவர்களை அறியாமலே மனதில் ஆழப்பதிந்துவிடும்.
சாயாவனம்(sayavanam)
சிதம்பரம் குழந்தையாக இருக்கும்போதே அவன் அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுச் சென்று விடுகிறாள். உருவத்திலும் செல்வத்திலும் வளர்ந்தவனாக திரும்பிவரும் சிதம்பரம், சாம்ப சிவத்திற்கு சொந்தமான சாயாவனத்தை விலைக்கு வாங்கி கரும்பாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று எண்ணத்துடன் வருகிறான்.
இன்பநினைவு
அகிலன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து வரிசையில் வாழ்வு எங்கே? நெஞ்சின் அலைகள், துணைவி, சிநேகிதி பால்மரக் கட்டினிலே இந்தகதைகள் எல்லாம் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை.
இன்பமயமான தமிழகவரலாறு
சூழலியல் சீர்கேடு எப்படியெல்லாம் உருவாகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதுடன் நம் சந்ததியினரை எச்சரிக்கவும் இந்த நூலை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும்.
நல்லதோர் வீணை
உடற் பிணியைப் போக்கும் ஓயாத மருத்துவ பணி. அதற்கு இணையாக மகளிரின் உள்ளத்திற்கு உரமூட்டும் வகையில் எழுத்துப் பணி இரண்டையும் சிறப்புறச் செய்த லெஷ்மி அவர்களுக்கு என் வணக்கங்கள்.
நிழலின் நாயகன் : சத்யஜித் ரே
திரையுலக மாமேதை சத்தியஜித் ரேயின் நூறாவது பிறந்த நாளை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் வாழ்ந்த சமகாலத்தில் நாமும் வாழந்தோம் என்ற பெருமையுடன் அவர் படைப்புகளை நுகர்வோம்!
ரெட் பலூன்(Red Balloon)
"ரெட் பலூன்" சிறார் வகை நாவல். இது படமாக்கப்பட்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் தங்கப்பதக்கம் விருதையும், ஆஸ்கார் விருதையும், பிரிட்டிஷ் அகாதெமி விருதையும் பெற்றிருக்கிறது.
நண்டுகளுக்கும் ஒரு மேம்பாலம்!
செந்நிற நண்டுகளின் வாழ்க்கை வட்டம் விசித்திரமானது..... மர்மங்கள் நிறைந்தது. அவற்றை கடலை நோக்கி நடக்க உந்தும் சக்தி என்ன? திசை காட்டுவது யார்? பிறந்த குஞ்சுகள் காடு நோக்கி பயணிப்பது எப்படி? எப்போது உயர் அலைகள் வரும் என அறிந்ததெப்படி?
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
வயதானபின்பு நிதானமாய் யோசிக்கும் போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு நாட்கள் பயனற்றதை செய்திருக்கிறோம் என்று.
கான்ஃபிடன்ஸ் கார்னர்
"மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள் தற்போதைய தேவையான வாழ்வதற்கான நம்பிக்கை, வெற்றி பெறுவதற்கான உறுதி, அதற்கான முயற்சி என 'கான்பிடன்ஸ் கார்னர்' புத்தகத்தில் 100 கார்னர்கள் கொடுத்திருக்கிறார். அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறு எடுத்துப் பயன்பெறலாம். அவரின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்."
குறிஞ்சி மலர்
வறுமை விரட்டிய நிலையிலும் பண்பு நிறைந்தவனான அரவிந்தனே என் மனதுக்கு குறிஞ்சிமலராகிறான். மலரில் ஆண்மலரும் உண்டுதானே!!!
உன் கண்ணில் நீர் வழிந்தால்!
"வாசிப்பனுபவத்தை இன்றைய சமுதாயத்தினுள் விதைப்பதும் இன்றைய எழுத்தாளனின் கடமை. இக்கதையில் வரும் முதலாளி ஒரு "கதை சொல்லியாக" வருகிறார். இக்கதையை வாசிக்கும் வாசகன் இதில் வரும் கதைகளையும் தேடி வாசிக்க முனைந்தால் அதுவே வெற்றி என்பேன்."
முத்தயுத்தம்(muttha yuttham)
"முத்தயுத்தம் இந்த கதையில் காட்டை, அதன் ஆச்சரியங்களை, அழகை ,அதன் ஆபத்தை என ரசிக்க ரசிக்க சொல்லி ஆசிரியர் சொல்வது போல இரவில் நிலவொளியில் காட்டின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று நமக்கும் ஆவலை ஏற்படுத்தும் ஆசிரியர் ஷங்கர நாராயணனுக்கு பாரட்டுக்கள்."
பாரம்பரியம்
"தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்."
ஜீவனாம்சம்
"'ஜீவனாம்சம்' சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' இதழில் 1959-60 இல் வெளிவந்துள்ளது. முன்னுரையில் ஆசிரியர் இந்த படைப்பிற்கான நடப்பு ஆதாரம் உண்டு என்பதோடு அது என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதை அப்படியே தராமல் கதைக்கு ஜீவனாக ஒரு இழையை மட்டும் எடுத்து அழகாக முழுக்க முழுக்க சாவி்த்திரி என்ற நாயகியின் மன போராட்டம் வழியே கதையை கொண்டு சென்று...."
அங்கும் இங்கும்
விண்ணையும் மண்ணையும் தொட்டுச்செல்லும் கட்டுரைத் தொடர். இத்தொடர் விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை நிச்சயம் கவர்ந்திடும். இதில் "அங்கு" என்ற தலைப்பில் விண்வெளி / விஞ்ஞானம் சம்மந்தமான நிகழ்வுகளையும் "இங்கு" எனும் தலைப்பின் கீழ் சமகாலத்தில் நிகழும் கலை, இலக்கிய விடயங்களை எழுதுவதே இவரது எண்ணம்.
தேனி மலை மாடுகள்
"தன் தேவையைக்கூட கேட்கமுடியாத வாயில்லா உயிர்களுக்கு நாம்தான் வாயாக இருந்து அவற்றின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்."
வாடி வாசல்(Vaadi vaasal)
"மாடு என்றால் செல்வம் அப்படிப்பட்ட செல்வத்தை, அதன் தொடர்பான பாரம்பரியமிக்க வீர விளையாட்டை வாடி வாசல் என்ற அழியாத கால்நடை சுவட்டை பதிப்பித்த 'காலச் சுவடு'க்கு நன்றிகள்."
எங்க நாட்டிலே – நான்காம் (இறுதி) பாகம்
ஆஸ்திரேலியாவில் ஒரு ஊழியர் வேலையில் இருந்து இளைப்பாற வயதெல்லை கிடையாது என்றால் நம்புவீர்களா? எழுபது வயதை தாண்டிய பலர் கூட இங்கு வேலைக்கு செல்வது சகஜம்.
கல்கியின் சிறுகதைகள்
"தந்தைக்கு தன் புதல்வியின் சங்கீத ஞானத்தைப் பற்றி மகா பெருமை. தன் வண்டியின் ஹாரன் சத்தத்திற்கு அடுத்து பெண்ணின் குரல்தான் அவருக்கு மிகப் பிடிக்கும்."
உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்
வெள்ளத்தனைய மலர் நீட்டமாக உள்ளத்தனைய உயர்வு பெற்று வாழ அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!!
எங்க நாட்டிலே!(மூன்றாம் பாகம்)
ஸ்டீப் எர்வின் ஒரு ‘முதலை ஜல்லிக்கட்டு’ வீரன்! எந்தப் பெரிய முதலையையும் அதன் முதுகில் பாய்ந்து ஏறி அடக்கி கட்டிப் போட்டு விடுவார்
மறைந்து வரும் மரங்கள்
'எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையைின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக அதிசயமாயுள்ளது அப்படித்தான் மரங்கள் அழிவதும்'
வாடா மலர்(vada malar)
தானப்பனும் குழந்தைவேலும் சிறுவர்களாக இருந்தபோது கரித்துண்டுகளால் மீசை வரைந்து அதை வீட்டிலுள்ள கண்ணாடியில் பார்க்க முயற்சிக்க , அம்மா அப்பாவுக்கு பயந்து பக்கத்திலுள்ள குட்டையில் பார்க்கின்றனர்.
கண்களருகே இமையிருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை
"இந்த பாட்டிகளுக்கு பேரனோ,பேத்தியோ வந்துவிட்டால் உலகமே அவர்கள்தான்; அவர்களுக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம் என்றாகி விடுகிறது."
ஆஸ்திரேலியா: தேசம் வளர்ந்த கதை! பகுதி 2
ஒரு நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்வதன் மூலம் அந்நாட்டின் நிகழ்கால பாரம்பரியம், அரசியல், கலாச்சாரம் மற்றும் அதன் சமூக மாற்றங்கள் எப்படி அதன் எதிர்கால சந்ததியை வழிநடத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மான் செய்த தந்திரம்
"ஆபத்தான நேரங்களில் தப்பிக்க வேறு வழியே இல்லை என்கிறபோது, நாம் புத்திசாலியாக திட்டமிட்டு நாம் நம் சக்திக்கும் அதிகமான துணிச்சலுடன் செயல் பட்டால்தான் தப்பிக்க முடியும் என்று மான் முடிவு செய்தது."
படகோட்டியின் பயணம்(padagotiyin payanam)- பகுதி – 3
"பாரதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவுக்கானது எனது இந்த பதிவு. 'படகோட்டியின் பயணம்' என்ற நூலில் 'ஆறுஆண்டு காலத் தவிப்பு' என்ற தலைப்பின் கீழ் உள்ளது பாரதியைப் பற்றிய இந்தப்பதிவு."
வாஷிங்டனில் திருமணம்
"அலிபாபாவின் குகையின் கதவு திறக்க 'திறந்திடு சீசேம்' என்று சொல்ல வேண்டும். பல்வேறு அழுத்தங்களால் மூடிக்கிடக்கும் மனதை திறக்கும் சாவி, விசா இன்றி வாஷிங்டனில் திரும(ன)ணம் காண வைத்ததற்கு மீண்டும் நன்றிகள் சா(வி)ர்."
காணாமல் போனவர்கள்
"அடுத்த நாள் கட்டட தொழிலாளிகள் ஒருவருக்குப் பதில் ஐந்து பேர் காணவில்லை. எல்லாரும் கட்டடம் அருகிலேயே ஷெட் அடித்து தங்கி இருந்தார்கள்; "
ஆஸ்திரேலியா: தேசம் பிறந்த கதை! – பகுதி-1
"ஆஸ்திரேலியா தேசம் பிறந்த கதை.. கல்கியில் வெளியான என் முதல் கட்டுரை.. இது முதல் பாகம்.. இன்னும் 3 பாகங்கள் உள்ளன அனைத்தையும் படியுங்கள் ஆஸ்திரேலியாவை அறிந்திடுங்கள்."
மெய் நிகரி(mei nigari)
"பாரதியார் தன் கவிதையை ஒருவரிடம் படித்துக்காட்டும்போது சரியான ரியாக் ஷன் வர்லனா மறுபடி சத்தம் போட்டு படிப்பாராம் அப்பவும் ரியாக் ஷன் இல்லன்னா எதிராளிய பளார்னு அறைஞ்சிட்டு போவாராம்".
புதுமைப்பித்தனின் ஆற்றங்கரை பிள்ளையார்
"உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது."
புதிய நீதிக் கதைகள் | சுஜாதா | உயிர்மை பதிப்பகம்| Moral stories in Tamil | Tamil Stories for Kids |
சுஜாதாவின் புதிய நீதிக் கதைகள் வாழ்வின் சில உண்மைகளை அங்கதத்தடன் முன்வைக்கின்றன.
வானொலியில் இன்று ஒரு தகவல்( vanoliyil indru oru thagaval) பாகம்-10
"சிவனுக்கு பாடம் சொல்லி கந்தன் சாமிநாதனான். கச்சியப்பர் கந்தபுராணம் எழுதினார். தன் பெயரில் இரண்டும் உள்ள தென் கச்சியார் இன்று 'ஒரு' தகவல் சொன்னதனால்.."
கடலுக்கு அப்பால்(kadalukku appal)
"நவரசங்களில் சிருங்கார ரசத்தை அழகான வார்த்தைகளால் அளவாய் சேர்த்து மற்ற சுவையையும் கலந்து வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் பண்பு குறையாதவர்கள் என்று சிங்காரமாய் சொல்லியதற்கு சிங்காரம் அவர்களுக்கு நன்றிகள்."
புதிய நீதிக் கதைகள்
"குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இதனை பதிவிடுகிறேன். சிறுவயதில் மனதில் ஆழமாய் பதியும் என்பதற்காகத்தான் கதைகள் வழி நீதியை குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து ஊட்டுகிறோம்."
பத்மஸ்ரீ பழ வியாபாரி(Harekala Hajabba)
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
ஆகாயப் பூக்கள்
"மகிழ்ச்சியோ,துக்கமோ இரண்டும் வெளிப்படும் போது இந்த கண்ணீர் வருகிறதே அது எப்படி வேறுபட்ட உணர்வுக்கு ஒரே மெய்ப்பாடு."
திருக்குறள் தெளிவுரை
"முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாதிருந்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்."