
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.. எம்முடைய கதை சொல்கிறேன் வலைப்பக்கத்திற்கு உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.. 🙏
நஞ்சை நிறைந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தவன்.
கல்வியோடு அன்பும் பாசமும் கற்றவன். குடந்தைக் கல்லூரியில் இளங்கலை படிப்போடு போதுமென்று பொருள் தேடப் புறப்பட்டவன். இயல்புக்கு மாறான பணிகளில் முழு வெற்றி கிட்டவில்லை.
அடுப்பு ஊதிய புல்லாங்குழல், ஏற்றம் இறைத்த சல்லடை கதையானேன்.
இலக்கிய தாகமும், எழுத்து வேட்கையும் தணித்துக் கொள்ள மகளும், மருகனும் ஏற்படுத்தித் தந்த உபாயம் இது.
இலக்கியம் என்பது ஒரு கால கண்ணாடி.. அவை படைக்கப்பட்ட காலத்தின் மக்களின் நிலம், கலை, நாகரிகம், இதர பழக்கவழக்கங்கள் போன்றவற்றை காட்டும் என்பதற்கேற்ப என் படைப்புகளை வழங்க விரும்புகிறேன்.
அன்பு உள்ளங்கள் ஆக்கமும் ஊக்கமும் தந்திட வேண்டுகிறேன்.. 💐