பாரதரத்னா பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கார்

அம்பேத்கார், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை. அவரது கல்வி, சமூக அவமானங்களை கடந்து, அனைவருக்குமான பொதுவான அரசியல் சட்டத்தை உருவாக்கியவர். இந்த புத்தகம் அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் விவரிக்கிறது.

ஹிட்லர்

வீரனாக இல்லாது நரிபோன்று  தந்திரமாகவே  செயல்பட்டு  இலட்சக் கணக்கானவர்களைக் கொன்று  குவித்தவன். வரலாற்றில் கொடுங்கோலன் என்று பெயரெடுத்தவனின்  எந்தச் செயலை ரசிக்க முடியும்.

படிப்பது சுகமே

எந்த ஒரு மனிதனும் உணவை மட்டுமே போதும் எனச் சொல்வான். வேறு எந்த பொருளையும் போதும் என்று சொல்ல மனம் வருவதில்லை. வீண்பகட்டு,வெற்று ஆடம்பரம் , புகழ் மயக்கம்  போன்றவற்றில்   மனதை  செல்லவிடும் மனிதன்  தன் மனதைக் கட்டுபடுத்தத் தெரியாமல் அதன்போக்கில் செல்லவிடும்போது மனம் செம்மையை இழந்துவிடுகிறது. உடலையும் மனதையும் ஒருசேர  செம்மையாக வைத்திருக்க உதவுவது படிப்பு மட்டுமே.

ஆளண்டாப் பட்சி

எந்த நூலாயினும் முன்னுரை, பதிப்புரை ,மதிப்புரை  படித்தபின்பே  மைய நூலைப் படிப்பேன். அது ஒரு வழிகாட்டியாக  நூலைப் புரிந்து கொள்ள உதவும். அந்த வகையில்  ஆசிரியரின் முன்னுரையால்  ஒருவித பதற்றத்துடன் கதையைப் படிக்கத் துவங்க ....

அக்னிச் சிறகுகள்

திரு ஏ.பி.ஜெ. அப்துல்கலம், இந்தியாவின் முன்னணி ஏவுகணை விஞ்ஞானியாக, தனது சுயசரிதையில் தனது வாழ்க்கை மற்றும் சாதனைகளை விவரிக்கின்றார். பெற்றோரின் வாழ்வியல், நண்பர்களின் உதவிகள், தோல்விகளை எதிர்கொண்டு வெற்றிக்கு அணுகுமுறைகளை வகுப்பது போன்ற அனுபவங்களில் கல்வி மற்றும் நம்பிக்கையின் விருதுகளை அடைகிறார்.

தளபதி

ஆசிரியர் எண்டமூரி வீரேந்திநாத் அவர்களின் கிரவுஞ்ச வதம்   நாவல் தமிழ் மொழிபெயர்ப்பில்  வாசித்திருக்கிறேன்.  அந்த காதல் நாவல்  எழுதியவரா என்பதாகவும் நாவலா ?.அல்லது திரைப்படமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒருஅதிரடித் திரைப்படம் பார்ப்பது போல நாவலை வடிமைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல.

முல்லா கதைகள்

முல்லா கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பில் 69 கதைகள் உள்ளன. முல்லா, புகழ்பெற்ற வாத்களுக்காக செல்வாக்குள்ளவர், ஏற்படும் சிக்கல்களில் புத்திசாலித்தனம் காட்டுகிறான். இந்த கதைகள் விவகாரங்களை நகைச்சுவையுடன் விவாதிக்கின்றன, மகிழ்ச்சி தருகின்றன, மற்றும் முல்லாவின் அறிவை பற்றிய பல்வேறு காட்சிகளை வழங்குகின்றன.

நெஞ்சங் கவரும் வங்காளக் கதைகள்

 ஆசிரியர்  விபூதிபூஷண் பந்தோ பாத்யாயா பற்றிய குறிப்பில் பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் என்பதைப் படித்ததும் புத்தகத்தை வாங்கிவிட்டேன். பதேர் பாஞ்சாலிக் கதை மிகவும் பேசப்பட்ட கதை என்று மட்டுமே தெரியுமே தவிர வாசித்ததில்லை.  அவரது எழுத்தை படிக்க வேண்டி இந்த சிறுகதைத் தொகுப்பையேனும் வாசிப்போமே என வாங்கினேன்.

அழகின் ஆராதனை

ஆசிரியை  லெஷ்மி அவர்களின்  கதைகளில் பெரும்பாலும் பெண்கள் குடும்ப  வாழ்வில்  எதிர் கொள்ளும் பிரச்சனைகளும்  அதனை அவர்கள்  கையாளும் விதமும் பற்றியே  அமைந்திருக்கும்.பூக்கள்  அ த்தனையுமே  அழகுதான்    இருப்பினும்  சில பூக்கள் மட்டுமே சிறப்பானதாகிறது.    பூக்களின்   ராஜா எனஅழைக்கப்படும் ரோஜாவை  விரும்பாதவர் யாருமில்லை. அதில் முள் இருக்கிறதென யாரும்  வெறுப்பதுமில்லை.

பங்குச்சந்தை அனாலிஸிஸ்

இன்றைய வேகமான உலகில் பணம் பணம்  என்று பணத்தை துரத்தியே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஒரே பாடலில்  மூன்றே நிமிடத்தில்  பல வேலைகள் செய்து பணக்காரனாக  ஆவதுபோல் நிஜ வாழ்க்கையில்  முடியாதென்பதை  உணர்ந்திருப்போம் . உண்மையில் பங்குச்சந்தையின் நுட்பம் தெரிந்தவர்க்கு  இது சாத்தியமாகலாம்.

நெஞ்சின் அலைகள்

அகிலாண்டம் என்ற தன் பெயரை அகிலன் என மாற்றிக்கொண்டவர். ஞானபீட விருது பெற்றவர். என் அபிமான எழுத்தாளர்.   ஒவ்வொருமுறை பள்ளி விடுமுறையின் போதும் அப்பா சேகரித்து வைத்திருக்கும்  ராணிமுத்து நாவல்கள் தான் என் உலகம். அதனால் ஒவ்வொரு நாவலையும் பலமுறை படித்திருப்பேன். அப்படி படித்ததில் மிகப்பிடித்த நாவல் அகிலனின் நெஞ்சின் அலைகள் . எத்தனை முறை படித்திருப்பேன்  என்று தெரியாது. காலங்கள் மாற இருக்குமிடத்தில்  நூலகத்திலிருந்து  என்உலகத்தை தொடர்ந்துகொண்டேன். சென்ற ஆண்டு புத்தகத்திருவிழாவில்  நாவலை (புதையலைக் கண்டதுபோல்)வாங்கியபின் மூன்று முறை படித்தாகிவிட்டது.

சேரமான் காதலி

பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? என்பார்கள் அதன்பொருள்  அதன் மணமே காட்டிக் கொடுத்துவிடும் என்பதாகும். அதுபோல இன்றும் தொலைக்காட்சியில்  நடத்தும்  பாட்டுப் போட்டிகளில்   கவிஞரின்   பாடல்கள் பாடப்படுவதும் கொண்டாப்படுவதும்  அவை வாடாத பூக்களாய்  என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருப்பதே சாட்சியாகும்.

தொல்காப்பியப் பூங்கா

ஆசிரியரைப்பற்றி ஒரேவரியில் சொல்வதானால் இலக்கியத்திலிருந்து இலக்கணம் என்பார்கள் அதுபோல  முத்தமிழறிஞர்  என்ற அவருடைய பெயரே   அவரின் சிறப்பை  சொல்லி நிற்கிறது.  

இறையன்புவின் சிந்தனை  வானம்

பொறமை , எளிமை ,சுயநலம்,தேடல், நம்பிக்கை ,பிறப்பு  ,மாணவர்கள் போன்ற பல தலைப்புகளில் உள்ள  விளக்கங்கள் ,கருத்துகளும்  சிறப்பாக உள்ளன. முடிவெடுக்க முடியாது தடுமாறுவர்க்கு  இந்த புத்தகத்தை படிப்பது  சிறப்பாக  உதவும்.

மீண்டும் ஜீனோ

முதல் பதிப்பு1986.என்னிடம் இருப்பது  8-ஆம்பதிப்பு 2014. பத்து வருடங்கள்  கடந்த நிலையில் இப்போது  இ்ன்னும் எத்தனைபதிப்பு வந்துள்ளதோ  தெரியவில்லை. இயந்திரமனிதன்  (ரோபோட்) மெல்ல மெல்ல மருத்துவம், விளையாட்டு, உணவகம் என உள்நுழைந்து கொண்டிருக்க, அதன் அடுத்த கட்ட தொழில் நுட்பமாக (சாட்Gஜிபிடி) செயற்கை நுண்ணறிவு .  வருங்காலத்தில் மக்கள்   இயந்திரமாக செயற்கை முறையில்  மாற்றப்பட்டு,   கருத்து சுதந்திரம் தடுக்கப்பட்டு , அடிமைகளாக ஆளப்பட்டு, இயந்திரங்களே ஆளும் நிலைவந்தால் எப்படி இருக்கும் என்று  கற்பனை செய்ததன்  விளைவே இந்தக் கதை. ஒருமாற்றமாக திரைப்படம் போல்  இந்த விமர்சனத்தை பார்ப்போமே!

ஏழாம் சுவை

வாசித்தது:ஏழாம் சுவைஆசிரியர்:மருத்தவர் கு.சிவராமன்பக்கங்கள்:104பதிப்பகம்: விகடன் பிரசுரம்விலை:  80ரூபாய்வகை: மருத்துவக் கட்டுரைகள் மருத்துவர் சிவராமனைப் பற்றி தனியே சொல்லத்தேவையில்லை.பராம்பரிய உணவுகளுக்குத் திரும்பச் சொல்லும் அவரின் ஏதாவது ஒரு பேச்சையாவது  நாம் நிச்சயம் கேட்டிருப்போம்.  ஒருசிலர் அதனை செயல்படுத்தியும் இருப்போம்.இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையின்  தலைப்பு  'வாதம், பித்தம் கபம்- திரிதோட உணவு'.நம் உடலில் அடிப்படையாக உள்ளவை பற்றியது.புத்தகத்தின் கடைசித் தலைப்பு 'காதல் தரும் உணவு'. நம் மனதோடு தொடர்புடையது.உடலும் மனமும் ஒருங்கே ஒழுங்காக அமைந்துவிட்டால்  வியாதி விடையாற்றிச் சென்றுவிடும்.உடல்... Continue Reading →

நெஞ்சே எழு

ஒவ்வொருவர் வாழ்விலும்  குழந்தைப்பருவ கதைகேட்கும், படிக்கும்  பருவத்தில்  நிச்சயம் ஆரம்ப வாசிப்பாக சித்திரக்கதைகள்  படித்து மகிழ்ந்திருப்போம். ஒற்றைக்கை மாயாவி கதை படிக்காத குழந்தைப் பருவம் இருக்க முடியுமா?.

காசே கடவுள்

ஜாவர் சீதாராமன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து நாவல் வரிசையில் அவரின் 'நானே நான்'  படித்திருக்கிறேன் மர்மக்கதை போன்று  அருமையாக இருக்கும். ஏழை படும்பாடு எனும் திரைப்படத்தில் ஜாவர் என்ற பாத்திரத்தில்  நடித்ததால் சீதாராமனுடன்  ஜாவர் என்பது ஒட்டிக்கொண்டது.

வானம்பாடிக்கு ஒரு விலங்கு

குடும்ப நாவல்கள் எழுதுவதில் லஷ்மி தனித்துவம் பெற்றவர். குடும்பத்தின் ஆணிவேரான பெண்ணுக்கு குடும்ப உறவுகளே  கொடுக்கும் குடைச்சல்கள்  அதை ஒட்டிய பெண்ணின் போராட்டங்கள், அதிலிருந்து விடுபட உதவும் சில நல்ல இதயங்கள் இதை அடிப்படையாக வைக்கப்பட்ட கதைகள். 

பத்தாயிரம் மைல் பயணம்

படித்தது  : பத்தாயிரம் மைல் பயணம்ஆசிரியர்: வெ.இறையன்புபக்கங்கள்: 301பதிப்பகம்: நியூசெஞ்சுரி புக்ஹவுஸ்விலை:  300 ரூபாய்வகை: கட்டுரை ஆசிரியரைப் பற்றி:அரசுத்துறையில் பணி ஆற்றும் ஒருசிலர்,பணிசார்ந்தும் ,பணி சாராதும் பணி ஓய்வு பெற்ற போதும் தன்னால்  இயன்ற அளவு மக்களுக்கும் , சமூகத்திற்கும் ஏதேனும் ஒருவகையில்  விழிப்புணர்வு   ஏற்படுத்துவது முன்னேற்றுவது  என்பதை தன்பணியாகவே கருதி தொடர்கின்றர். அந்த வகையில்   அவர்கள் வகிக்கும் பதவிக்கும் பெருமை சேர்ப்பவர்களாக ,  முன்னுதாரணமாக  இருப்பவர்களாக , மக்கள் மனதில் உண்மையான  நாயகர்களாகிறார்கள். பெயரிலேயே இறை... Continue Reading →

பாவை

மு.வ. என அவர் பெயரைச் சுருக்கலாம். அவரின் தமிழறிவை, தமிழுக்கு அவர் ஆற்றிய பணிகளை  சுருக்கிடமுடியாது. உலகம் சுற்றிய முதல் தமிழ் பேராசிரியர். அமெரிக்க பல்கலைக்கழத்தின் பிலிட் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர்.  இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

சீனிவாச ராமானுஜம் (Srinivasa Ramanujan)

அகராதியில் சீனிவாச ராமானுஜம்  = கணிதம் என்றே பொருள் கொள்ளக்கூடிய  அளவுக்கு  அவரின்  கணித அறிவு திறமை. அறிவியல் கண்டுபிடிப்புகள்  கருவிகள் கருத்துகள் மாறிக்கொண்டே ( இருக்கும்) இருக்கிறது.  இன்றளவும் அவரின் கணக்கு குறியீடுகள் பின்பற்றப்படுவதும், அவர் விட்டுச் சென்ற கணித தீர்வுகளுக்கு வழி  தேடுவது இன்றும் தொடர்கிறதெனில்   அவரின் கணித அறிவை எந்த கணித குறீயீட்டால் அளப்பது?

பிசிராந்தையார்

புரட்சிக் கவிஞர் தன்' புரட்சிக் கவி ' கதையில் அருமையாக தன் சிந்தனைகளை  வெளிப்படுத்தியிருப்பார் .'குடும்ப விளக்கு' கவிதையில் ஒரு சிறப்பான குடும்பம் எப்படி இருக்க வேண்டுமென காட்டியிருப்பார் .'அழகின் சிரிப்பு' இயற்கை,  அழகான  காடு, மலை ,அருவி கடல் , பறவைகள் ஒவ்வொன்றிலும் தன் சிந்தனைகளைப் புகுத்தி  வர்ணித்திருப்பார்.

குறிஞ்சித்தேன்

மலைவாழ் மக்களின் அன்புறவான வாழ்வில் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றாக வர, வாழ்வியல் மாற,  மூன்று தலைமுறையிலும் நடக்கும் மாற்றங்களை, மூன்று குடும்பங்களின் உறவு முறையில்  நடக்கும்  நிகழ்வுகள், மலைவாழ் மக்களின்  பழக்க வழக்கங்கள் என்று கதையை அருமையாக  படைத்துள்ளார்.

சந்திரகாந்தா

க.நா.சு, இலக்கிய சிந்தனையாளர்கள்  என்ற புத்தகத்தில் ரங்கராஜு பற்றி , (1920 களில்) ஒருதமிழ் வாசகப் பரம்பரையை  உருவாக்க  முயன்ற இருவருள்  ஜே.ஆர்.ரங்கராஜூவையும் வடுவூர் துரைசாமி ஐயங்காரையும்  சொல்லலாம்  என்று குறிப்பிடுகிறார்.

சுந்தர காண்டம்

மனம் ஒரு குரங்கு மனிதமனம் ஒரு குரங்கு அதை தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால்...

வெண்ணிற இரவுகள்

"வெண்ணிற இரவுகள் "  முகநூல் தளத்தில் இந்த கதையைப் பற்றி பதிவு எழுதாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நாயகி நாஸ்தென்காவைப் பற்றியும் அவ்வளவு பதிவுகள். அப்படி என்ன இந்தக் கதையில் இருக்கிறது என்ற ஆர்வம் இந்தக் கதையைப் படிக்க காரணமானது.

தூக்கிலிடுபவரின் குறிப்புகள்

தூக்குதண்டனை  பெற்றவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி லீவரை அழுத்தியதும் பாதாளத்தில் சென்றதும் அந்த நபரின் கடைசி நிமிட.... அதனால் ஒவ்வொரு முறையும்  ஜனார்த்தனன் மனம்  பட்டபாடு.  இந்த வேலையை அவர் எந்த சூழ்நிலையில் ஒப்புக்கொண்டார் என்பதையும் இப்படிப்பட்டவரின்  குடும்பத்திற்கு சமூகம் கொடுக்கும் (மரியாதை அல்ல) இடம், அவரின் தாய், தந்தை ,சகோதரர்கள் , தன் மனைவி குழந்தைகள் குறிப்பாக தன் பெண்ணுக்கு மணமகன் தேடுவது  என குடும்பம் சார்ந்த  குறிப்புகள் ஒருபுறம்.

The Secret

இரகசியம் என்பது பொதுவாக வெளியில் சொல்லாது  ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் கனவு ,ஆசை ,கோபம், காதல், இன்னபிற என்று சொல்லலாம். இந்த புத்தகத்தில் உள்ள ரகசியம் ,  ஒருவர் தன் இலக்கு நோக்கிச் செல்லும் வழியில் எதிர்ப்படும்  பூட்டிய கதவு,  எழும்பி நிற்கும் சுவர்,  தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சன்னலையும் சாத்திவிடும் உள்நுழையும்  பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் ,திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்று  (வெற்றிபெற்ற அல்ல) சாதனை படைத்தவர்களை உங்களால் எப்படி சாத்தியமாயிற்று? என விழிவிரிந்து ,வியந்து பார்த்து, கேட்கும் கேள்விக்கு பதிலே இந்த இரகசியம்.தமிழில் 'கதாநாயகன்' என்ற பெயரில் P.S.V.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையாக இருக்கிறது.

சுவீகாரம்

மெரீனா என்ற பெயர் + அட்டைப்படத்தை பார்த்ததும் (எஸ்.ஜானகி சிரித்த முகமும் கண்டு என்ற பாடலை குழந்தைகுரலில்  ஒருகுழந்தை பாடி பயிற்சி செய்வதுபோன்று பாடத்தொடங்கிகொஞ்சம் கொஞ்சமாக சுருதிமாறி கடைசியில் சிரித்தமுகம் கண்டு என்பது அழுத முகம் என குழந்தை பாடுவது போன்று பாடியிருப்பார் .) நகைச்சுவை கதைஎனநினைத்து வாங்கிவிட்டேன்.

கண்ணுக்குத் தெரியாத மனிதன்

ஹெச் .ஜி.வெல்ஸ் தன் வீட்டினரால் பெர்ட்டி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். மூன்றுவயதிலேயே தன் அம்மாவால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டவர். ஏழாம் வயதில் காலொடிந்து மாதக்கணக்கில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலையில் அவனின் அப்பா அவருக்கு தாவரவியல், உயிரியல் , விண்வெளியியல் ஆகிய புதத்தகங்களை அறிமுகப்படுத்த பின்னாளில் இதனை  குறிப்பிட்டு வாழ்வில் முக்கியமான தருணம் என்று சொல்லியிருக்கிறார்.

கிடை

சிறுவயதில் கிடை மாடுகள் சாலையில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். தொலைவிலிருந்தே  கேட்க தொடங்கும்  மாட்டின் கழுத்திலிருக்கும் மணியின் டிங் டிடிங்டாங் சத்தமும் டக்டக் குளம்படிச் சத்தமும் சாலையின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு செல்லும் வரையிலும்  குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் வரையிலும் தாளம் தப்பாத இசையாக  கேட்கும்.

டான்டூனின் கேமரா

புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு  நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.

யாம் சில அரிசி வேண்டினோம்

வானொலியில் அழகிய பெரியவன் பேட்டி ஒன்று கேட்டு அவரின்  நூல்களைப் படிக்க ஆர்வம் வந்தது. நூலுக்கு முன்னுரை  திருவள்ளுவர், ஆம் உலகப் பொதுமறையிலிருந்து கதைக்குப்பொருத்தமான ஒருகுறளை இணைத்திருப்பது இந்தநூலுக்கு கூடுதல் சிறப்பு.

சிநேகிதி

மேனிலைப் பள்ளி இறுதித் தேர்வில் "பிடித்த எழுத்தாளர்" தலைப்பில் கட்டுரை வரைக என்றகேள்விக்கு ராணிமுத்து வரிசையில் வாசித்த அகிலனின் நாவல்களால்   அவரின் ரசிகையான நான் சந்தோஷத்துடன் அகிலனைப் பற்றியும் அவரின்  'துணைவி ' நாவலைப்பற்றியும் எழுதினேன்.

தெனாலிராமன் கதைகள் | Tenali Raman Stories

விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்ற விகடகவிராஜன் எல்லோருக்கும் தெரிந்த  தெனாலிராமன். புத்தகத்தில் 27 கதைகள் உள்ளன. தனக்கு வந்த ஆபத்தோ, உடனிருப்பவர்க்கு வரும் சங்கடமோ  தன்னுடைய சமயோசித அறிவினால் அழகாக திருப்பிவிட்டு ஒவ்வொருமுறையும்  "சபாஷ்" போடவைக்கிறான்

அறிவியல் விளையாட்டு

ஆன்மீகமோ,அறிவியலோ, கருத்துகளோ ,கணிதமோ, கதையாக, பாட்டாக, விளையாட்டாக குழந்தைகளிடம்  கற்றலை விதைத்தால் அது அவர்களை அறியாமலே மனதில் ஆழப்பதிந்துவிடும்.

சாயாவனம்(sayavanam)

சிதம்பரம் குழந்தையாக இருக்கும்போதே அவன் அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுச் சென்று விடுகிறாள். உருவத்திலும் செல்வத்திலும் வளர்ந்தவனாக திரும்பிவரும் சிதம்பரம், சாம்ப சிவத்திற்கு சொந்தமான சாயாவனத்தை விலைக்கு வாங்கி கரும்பாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று எண்ணத்துடன் வருகிறான்.

இன்பநினைவு

அகிலன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து வரிசையில் வாழ்வு எங்கே? நெஞ்சின் அலைகள், துணைவி, சிநேகிதி பால்மரக் கட்டினிலே இந்தகதைகள் எல்லாம் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை.

இன்பமயமான தமிழகவரலாறு

சூழலியல் சீர்கேடு எப்படியெல்லாம் உருவாகிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதுடன் நம் சந்ததியினரை எச்சரிக்கவும்  இந்த நூலை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும். 

நல்லதோர் வீணை

உடற் பிணியைப் போக்கும் ஓயாத மருத்துவ பணி. அதற்கு இணையாக மகளிரின் உள்ளத்திற்கு உரமூட்டும் வகையில் எழுத்துப் பணி இரண்டையும் சிறப்புறச் செய்த லெஷ்மி அவர்களுக்கு என் வணக்கங்கள்.

ரெட் பலூன்(Red Balloon)

"ரெட் பலூன்" சிறார் வகை நாவல். இது படமாக்கப்பட்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் தங்கப்பதக்கம் விருதையும், ஆஸ்கார் விருதையும், பிரிட்டிஷ் அகாதெமி விருதையும்  பெற்றிருக்கிறது.

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

வயதானபின்பு நிதானமாய் யோசிக்கும் போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு நாட்கள் பயனற்றதை  செய்திருக்கிறோம் என்று.

கான்ஃபிடன்ஸ் கார்னர்

"மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள் தற்போதைய தேவையான வாழ்வதற்கான நம்பிக்கை, வெற்றி பெறுவதற்கான உறுதி, அதற்கான முயற்சி என 'கான்பிடன்ஸ் கார்னர்'  புத்தகத்தில் 100  கார்னர்கள் கொடுத்திருக்கிறார். அவரவர்  சூழ்நிலைக்கு தக்கவாறு எடுத்துப்  பயன்பெறலாம். அவரின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்."

குறிஞ்சி மலர்

வறுமை விரட்டிய நிலையிலும் பண்பு நிறைந்தவனான அரவிந்தனே என் மனதுக்கு குறிஞ்சிமலராகிறான்.  மலரில் ஆண்மலரும் உண்டுதானே!!!

முத்தயுத்தம்(muttha yuttham)

"முத்தயுத்தம் இந்த கதையில் காட்டை, அதன்  ஆச்சரியங்களை, அழகை ,அதன் ஆபத்தை என ரசிக்க ரசிக்க சொல்லி ஆசிரியர் சொல்வது போல இரவில் நிலவொளியில் காட்டின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று  நமக்கும் ஆவலை ஏற்படுத்தும் ஆசிரியர் ஷங்கர நாராயணனுக்கு பாரட்டுக்கள்."

ஜீவனாம்சம்

"'ஜீவனாம்சம்' சி.சு.செல்லப்பாவின்  'எழுத்து' இதழில் 1959-60 இல் வெளிவந்துள்ளது. முன்னுரையில் ஆசிரியர்  இந்த படைப்பிற்கான நடப்பு ஆதாரம் உண்டு என்பதோடு அது என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதை அப்படியே தராமல் கதைக்கு ஜீவனாக ஒரு இழையை  மட்டும் எடுத்து அழகாக  முழுக்க முழுக்க சாவி்த்திரி என்ற நாயகியின் மன போராட்டம் வழியே கதையை கொண்டு சென்று...."

வாடி வாசல்(Vaadi vaasal)

"மாடு என்றால் செல்வம் அப்படிப்பட்ட செல்வத்தை, அதன் தொடர்பான பாரம்பரியமிக்க  வீர விளையாட்டை  வாடி வாசல்  என்ற  அழியாத கால்நடை சுவட்டை பதிப்பித்த 'காலச் சுவடு'க்கு நன்றிகள்."

கல்கியின் சிறுகதைகள்

"தந்தைக்கு தன் புதல்வியின் சங்கீத ஞானத்தைப் பற்றி மகா பெருமை. தன் வண்டியின் ஹாரன் சத்தத்திற்கு அடுத்து பெண்ணின் குரல்தான் அவருக்கு மிகப் பிடிக்கும்."

உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்

வெள்ளத்தனைய மலர் நீட்டமாக உள்ளத்தனைய உயர்வு பெற்று  வாழ அனைவருக்கும் புத்தாண்டு  வாழ்த்துகள்!!

Create a website or blog at WordPress.com

Up ↑