சுவீகாரம்

(வாசித்ததில் ரசித்தவர்:அன்புமொழி)

வாசித்தது:- சுவீகாரம்
எடுத்தவர்:- மெரீனா
பக்கங்கள்:-123
பதிப்பகம்:- அல்லயன்ஸ்
விலை:- 90
வகை:- நாடகம்

மெரீனா என்ற பெயர் + அட்டைப்படத்தை பார்த்ததும் (எஸ்.ஜானகி சிரித்த முகமும் கண்டு என்ற பாடலை குழந்தைகுரலில்  ஒருகுழந்தை பாடி பயிற்சி செய்வதுபோன்று பாடத்தொடங்கிகொஞ்சம் கொஞ்சமாக சுருதிமாறி கடைசியில் சிரித்தமுகம் கண்டு என்பது அழுத முகம் என குழந்தை பாடுவது போன்று பாடியிருப்பார் .) நகைச்சுவை கதைஎனநினைத்து வாங்கிவிட்டேன்.

எந்த புத்தகத்தை எப்போது படிப்பது என்பதற்குத்தான் புத்தகம் நியதி வைத்திருக்கிறது என்று நினைத்தால் பதிவு எழுத முடியாது வைத்திருப்பது, எழுதியதையும் போட முடியாதிருப்பது , இடும்பை கூர் புத்தகமே என்று சொல்லலாம் போல ஹூம்

நீலகண்டன் தன் மனைவி அம்புஜத்தை விட்டு புஷ்பா என்ற வேறெரு பெண்ணுடன் வாழத் தொடங்க, அதனால் அம்புஜம் தன் அண்ணன் ராஜூ சாஸ்திரிகளை வந்து தன்னை கூட்டிச் செல்ல சொல்லி கிராமத்திற்கு வந்துவிடுகிறாள். மோகம் குறைய, புஷ்பா உதிர வைதிக கடமைகளை நிறைவேற்றவே தன்னை தத்துஎடுத்தவரின் ஆசையை நிறைவேற்றவும்   போன மச்சானாய்  அம்புஜத்தை தேடிவருகிறான்.

பெண்களுக்குத் மணம் முடித்து விட்டதாகவும் தன்மகன் புஷ்பா இறந்தபின் கிளம்பிச்சென்று விட்டான் எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை என்றும் சொல்கிறான். மீண்டும் (நீல)கண்டத்தை நம்பி  தங்கையை அனுப்ப அண்ணனுக்கு மனமில்லை. ஆனால் அம்புஜா தன்பாதியுடன் மீ(தி)ந்த வாழ்க்கையை வாழத் தயராகிறாள். புஷ்பாவுடன் வாழ்ந்த வீட்டில் இருப்பதை தவிர்த்து வேறு வீடு தேட, கிராமத்துப் பெரியவரின் உறவுப்பையன் கோபிவீட்டில் சென்னையில் தங்குகிறார்கள்.  கல்கத்தாவில்  கோபியின் பெற்றோர் பெரிய பையன் ஸ்ரீராமுடன்  உறவாலும் தொலைவாக இருக்கிறார்கள்.

தனக்கு பொருட்டில்லை என தூசியாக அலட்சியப்படுத்திய  கோபியை அம்புஜம் அன்பால்  சுவீகரிக்க இருப்பதை அறிந்து, கோபியின் அப்பா மகாலிங்கம் நீலகண்டத்திலிருந்து வரும் காற்று (அன்பு )மாசு நிறைந்ததெனக் கூறி சண்டையிட ,
(தான் முக்கியமாக நினைக்காததை மற்றவர்  கொண்டாடுவதால் வரும் வீம்பு) இதற்கிடையில்  சாஸ்திரப்படி சிறுவனைத்தான் தத்துஎடுக்க முடியுமென தெரியவர, கோபி, ஜப்பானில் பெற்றோர் இருந்தும் அன்புக்கு ஏங்குபவர்கள் இதைப்போல பெரியவர்களை   அழைத்து வந்து வீட்டோடு வைத்துக் கொள்கிறார்கள்.

நானும் அப்படி செய்யப்போகிறேன் என்கிறான். நீலகண்டனோ என்னை என்  பெரியப்பா தத்தெடுத்து போலவே வைதிக கடமைகளை நிறைவேற்றவே  உன்னைத்  தத்தெடுக்க நினைத்தேனே தவிர சுயநலமாக அல்ல என்று கூறி நாங்கள் கிளம்புகிறோம்  என்கிறார்.

அதேநேரம் ஓடிப்போன நீலகண்டனின் மகன் முருகேசன் தேடிவர  உண்மையில் பாசத்திற்கு ஏங்கும் அவனை விட்டு ஓடியது நீலகண்டனே என்பது தெரிகிறது. அம்புஜம் ,கோபி ,முருகேசன் அன்பால் இணைய நீலகண்டனோ தன்னுடைய மறந்துபோன சாஸ்திரத்தை கொண்டாடிக்கொண்டு மகனை ஒதுக்கிவிட்டு மீண்ட வேதாளமாக மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு  நானே வந்து கூப்பிட்டுக்கொள்கிறேன் என்று சென்றுவிடுகிறான்.

மருத்துவ சிகிச்சைக்கு வரும்  கோபியின் அப்பா, முருகேசனோடு பழக பிள்ளையை  விட  மனதால் முருகேசனின் அன்பை சுவீகரித்து  பெயருக்கு ஏற்ப மகாலிங்கமாக   உயர்ந்துவிடுகிறார்.
உண்மையான சுவீகாரம்  !!!
நீலகண்டன் சாஸ்திரபடி மணந்த அம்புஜாவுடனும் வாழவில்லை. புஷ்பாவுடன்….வாழ்ந்திருந்தால் தன்மகனாக முருகேசனை ஏற்றிருப்பான். நீலகண்டன் சாஸ்திரப்படி ஒரு சிறுவனை தத்து எடுக்கிறான். அவனும் இவனைப் போலவே நிச்சயமாக நாளை இன்னொரு நீலகண்டனாகத்தான் இருப்பான் சரிதானே!
மந்திரத்தால் (சாஸ்திரம்) வருபவன் மகன்!!!
மனம் நிறைந்த அன்பினால் வந்த முருகேசன்….?

ரசித்தது:- நீலகண்டனைப்பற்றி பேச வரும் தன் நண்பனிடம் ராஜூ சாஸ்திரிகள் (வேதங்கள்  படித்து சாஸ்திர சம்பிரதாயங்கள்  அறிந்தவர் ) நிரம்ப படித்ததனால் குழப்பம் ஏற்படுகிதோ என்பார். ?!
அட்டைப்படத்தை பார்த்து நகைச்சுவை கதை என நினைத்துவிட்டேன்.
மெரினா சார் மன்னியுங்கள்.
‘பிறர்க்கின்னா முற்பகல் செயின்’என்று கொண்டாலும் சரி
திணை விதைத்தவன் என்று கொண்டாலும் சரி .
உண்மையில் சரியான படிப்பினை!
மெரீனா என்றாலே என்றும் அறிவார்ந்தவர்கள்  உறைந்திருக்கும் இடம்.
நன்றிகள் ஐயா ! 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑