அம்பேத்கார், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை. அவரது கல்வி, சமூக அவமானங்களை கடந்து, அனைவருக்குமான பொதுவான அரசியல் சட்டத்தை உருவாக்கியவர். இந்த புத்தகம் அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் விவரிக்கிறது.
தளபதி
ஆசிரியர் எண்டமூரி வீரேந்திநாத் அவர்களின் கிரவுஞ்ச வதம் நாவல் தமிழ் மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கிறேன். அந்த காதல் நாவல் எழுதியவரா என்பதாகவும் நாவலா ?.அல்லது திரைப்படமா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஒருஅதிரடித் திரைப்படம் பார்ப்பது போல நாவலை வடிமைத்திருக்கிறார் என்றால் மிகையல்ல.
நெஞ்சங் கவரும் வங்காளக் கதைகள்
ஆசிரியர் விபூதிபூஷண் பந்தோ பாத்யாயா பற்றிய குறிப்பில் பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் என்பதைப் படித்ததும் புத்தகத்தை வாங்கிவிட்டேன். பதேர் பாஞ்சாலிக் கதை மிகவும் பேசப்பட்ட கதை என்று மட்டுமே தெரியுமே தவிர வாசித்ததில்லை. அவரது எழுத்தை படிக்க வேண்டி இந்த சிறுகதைத் தொகுப்பையேனும் வாசிப்போமே என வாங்கினேன்.
அழகின் ஆராதனை
ஆசிரியை லெஷ்மி அவர்களின் கதைகளில் பெரும்பாலும் பெண்கள் குடும்ப வாழ்வில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் அதனை அவர்கள் கையாளும் விதமும் பற்றியே அமைந்திருக்கும்.பூக்கள் அ த்தனையுமே அழகுதான் இருப்பினும் சில பூக்கள் மட்டுமே சிறப்பானதாகிறது. பூக்களின் ராஜா எனஅழைக்கப்படும் ரோஜாவை விரும்பாதவர் யாருமில்லை. அதில் முள் இருக்கிறதென யாரும் வெறுப்பதுமில்லை.
பங்குச்சந்தை அனாலிஸிஸ்
இன்றைய வேகமான உலகில் பணம் பணம் என்று பணத்தை துரத்தியே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஒரே பாடலில் மூன்றே நிமிடத்தில் பல வேலைகள் செய்து பணக்காரனாக ஆவதுபோல் நிஜ வாழ்க்கையில் முடியாதென்பதை உணர்ந்திருப்போம் . உண்மையில் பங்குச்சந்தையின் நுட்பம் தெரிந்தவர்க்கு இது சாத்தியமாகலாம்.
நெஞ்சின் அலைகள்
அகிலாண்டம் என்ற தன் பெயரை அகிலன் என மாற்றிக்கொண்டவர். ஞானபீட விருது பெற்றவர். என் அபிமான எழுத்தாளர். ஒவ்வொருமுறை பள்ளி விடுமுறையின் போதும் அப்பா சேகரித்து வைத்திருக்கும் ராணிமுத்து நாவல்கள் தான் என் உலகம். அதனால் ஒவ்வொரு நாவலையும் பலமுறை படித்திருப்பேன். அப்படி படித்ததில் மிகப்பிடித்த நாவல் அகிலனின் நெஞ்சின் அலைகள் . எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது. காலங்கள் மாற இருக்குமிடத்தில் நூலகத்திலிருந்து என்உலகத்தை தொடர்ந்துகொண்டேன். சென்ற ஆண்டு புத்தகத்திருவிழாவில் நாவலை (புதையலைக் கண்டதுபோல்)வாங்கியபின் மூன்று முறை படித்தாகிவிட்டது.
சேரமான் காதலி
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? என்பார்கள் அதன்பொருள் அதன் மணமே காட்டிக் கொடுத்துவிடும் என்பதாகும். அதுபோல இன்றும் தொலைக்காட்சியில் நடத்தும் பாட்டுப் போட்டிகளில் கவிஞரின் பாடல்கள் பாடப்படுவதும் கொண்டாப்படுவதும் அவை வாடாத பூக்களாய் என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருப்பதே சாட்சியாகும்.
ஏழாம் சுவை
வாசித்தது:ஏழாம் சுவைஆசிரியர்:மருத்தவர் கு.சிவராமன்பக்கங்கள்:104பதிப்பகம்: விகடன் பிரசுரம்விலை: 80ரூபாய்வகை: மருத்துவக் கட்டுரைகள் மருத்துவர் சிவராமனைப் பற்றி தனியே சொல்லத்தேவையில்லை.பராம்பரிய உணவுகளுக்குத் திரும்பச் சொல்லும் அவரின் ஏதாவது ஒரு பேச்சையாவது நாம் நிச்சயம் கேட்டிருப்போம். ஒருசிலர் அதனை செயல்படுத்தியும் இருப்போம்.இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையின் தலைப்பு 'வாதம், பித்தம் கபம்- திரிதோட உணவு'.நம் உடலில் அடிப்படையாக உள்ளவை பற்றியது.புத்தகத்தின் கடைசித் தலைப்பு 'காதல் தரும் உணவு'. நம் மனதோடு தொடர்புடையது.உடலும் மனமும் ஒருங்கே ஒழுங்காக அமைந்துவிட்டால் வியாதி விடையாற்றிச் சென்றுவிடும்.உடல்... Continue Reading →
தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
தூக்குதண்டனை பெற்றவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி லீவரை அழுத்தியதும் பாதாளத்தில் சென்றதும் அந்த நபரின் கடைசி நிமிட.... அதனால் ஒவ்வொரு முறையும் ஜனார்த்தனன் மனம் பட்டபாடு. இந்த வேலையை அவர் எந்த சூழ்நிலையில் ஒப்புக்கொண்டார் என்பதையும் இப்படிப்பட்டவரின் குடும்பத்திற்கு சமூகம் கொடுக்கும் (மரியாதை அல்ல) இடம், அவரின் தாய், தந்தை ,சகோதரர்கள் , தன் மனைவி குழந்தைகள் குறிப்பாக தன் பெண்ணுக்கு மணமகன் தேடுவது என குடும்பம் சார்ந்த குறிப்புகள் ஒருபுறம்.
எங்கிருந்தோ வந்தான்!
அவனை எழுப்பாதீர்; அமைதியாய் தூங்கட்டும்! ஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்.
கிடை
சிறுவயதில் கிடை மாடுகள் சாலையில் செல்வதைப் பார்த்திருக்கிறேன். தொலைவிலிருந்தே கேட்க தொடங்கும் மாட்டின் கழுத்திலிருக்கும் மணியின் டிங் டிடிங்டாங் சத்தமும் டக்டக் குளம்படிச் சத்தமும் சாலையின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்கு செல்லும் வரையிலும் குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் வரையிலும் தாளம் தப்பாத இசையாக கேட்கும்.
தனியே சென்ற கோழிக்குஞ்சு
நாம் வளர்ந்து அனுபவம் பெற்ற பெரியவர்கள் ஆகும்வரை பெரியவர்களின் சொற்படியே நடக்கவேண்டும்;அவர்களின் அரவணைப்பிலேயே வளரவேண்டும் என்பது இக்கதை வழியாக நாம் அறிந்து கொள்கிறோம்.
டான்டூனின் கேமரா
புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.
யாம் சில அரிசி வேண்டினோம்
வானொலியில் அழகிய பெரியவன் பேட்டி ஒன்று கேட்டு அவரின் நூல்களைப் படிக்க ஆர்வம் வந்தது. நூலுக்கு முன்னுரை திருவள்ளுவர், ஆம் உலகப் பொதுமறையிலிருந்து கதைக்குப்பொருத்தமான ஒருகுறளை இணைத்திருப்பது இந்தநூலுக்கு கூடுதல் சிறப்பு.
அனாதை மரங்கள்
வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .
தெனாலிராமன் கதைகள் | Tenali Raman Stories
விஜயநகர பேரரசின் கிருஷ்ணதேவராயரின் அவையில் இடம்பெற்ற விகடகவிராஜன் எல்லோருக்கும் தெரிந்த தெனாலிராமன். புத்தகத்தில் 27 கதைகள் உள்ளன. தனக்கு வந்த ஆபத்தோ, உடனிருப்பவர்க்கு வரும் சங்கடமோ தன்னுடைய சமயோசித அறிவினால் அழகாக திருப்பிவிட்டு ஒவ்வொருமுறையும் "சபாஷ்" போடவைக்கிறான்
ஓவியர் ‘செள’ – ஒரு படைப்பாளியின் கதை!
ஒரு சஞ்சிகைக்கு ஓவியம் வரைபவனின் சவால்களை சித்தரிக்கும் சுவாரசியமான கட்டுரை. ரசித்து எழுதியது.
உயிர்த்தெழும் உயிரினம்!
இவ்வுலகைவிட்டு மறைந்துபோன உயிரினங்களை மீண்டும் விஞ்ஞானத்தின் உதவியுடன் மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது ஒரு உற்சாகமான செய்தி!
அறிவியல் விளையாட்டு
ஆன்மீகமோ,அறிவியலோ, கருத்துகளோ ,கணிதமோ, கதையாக, பாட்டாக, விளையாட்டாக குழந்தைகளிடம் கற்றலை விதைத்தால் அது அவர்களை அறியாமலே மனதில் ஆழப்பதிந்துவிடும்.
சாயாவனம்(sayavanam)
சிதம்பரம் குழந்தையாக இருக்கும்போதே அவன் அம்மா அவனைத் தூக்கிக்கொண்டு ஊரைவிட்டுச் சென்று விடுகிறாள். உருவத்திலும் செல்வத்திலும் வளர்ந்தவனாக திரும்பிவரும் சிதம்பரம், சாம்ப சிவத்திற்கு சொந்தமான சாயாவனத்தை விலைக்கு வாங்கி கரும்பாலை ஒன்றை நிறுவ வேண்டும் என்று எண்ணத்துடன் வருகிறான்.
இன்பநினைவு
அகிலன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து வரிசையில் வாழ்வு எங்கே? நெஞ்சின் அலைகள், துணைவி, சிநேகிதி பால்மரக் கட்டினிலே இந்தகதைகள் எல்லாம் ஒவ்வொன்றும் மறக்க இயலாதவை.
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
வயதானபின்பு நிதானமாய் யோசிக்கும் போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு நாட்கள் பயனற்றதை செய்திருக்கிறோம் என்று.
கான்ஃபிடன்ஸ் கார்னர்
"மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள் தற்போதைய தேவையான வாழ்வதற்கான நம்பிக்கை, வெற்றி பெறுவதற்கான உறுதி, அதற்கான முயற்சி என 'கான்பிடன்ஸ் கார்னர்' புத்தகத்தில் 100 கார்னர்கள் கொடுத்திருக்கிறார். அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறு எடுத்துப் பயன்பெறலாம். அவரின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்."
குறிஞ்சி மலர்
வறுமை விரட்டிய நிலையிலும் பண்பு நிறைந்தவனான அரவிந்தனே என் மனதுக்கு குறிஞ்சிமலராகிறான். மலரில் ஆண்மலரும் உண்டுதானே!!!
உன் கண்ணில் நீர் வழிந்தால்!
"வாசிப்பனுபவத்தை இன்றைய சமுதாயத்தினுள் விதைப்பதும் இன்றைய எழுத்தாளனின் கடமை. இக்கதையில் வரும் முதலாளி ஒரு "கதை சொல்லியாக" வருகிறார். இக்கதையை வாசிக்கும் வாசகன் இதில் வரும் கதைகளையும் தேடி வாசிக்க முனைந்தால் அதுவே வெற்றி என்பேன்."
முத்தயுத்தம்(muttha yuttham)
"முத்தயுத்தம் இந்த கதையில் காட்டை, அதன் ஆச்சரியங்களை, அழகை ,அதன் ஆபத்தை என ரசிக்க ரசிக்க சொல்லி ஆசிரியர் சொல்வது போல இரவில் நிலவொளியில் காட்டின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று நமக்கும் ஆவலை ஏற்படுத்தும் ஆசிரியர் ஷங்கர நாராயணனுக்கு பாரட்டுக்கள்."
பாரம்பரியம்
"தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்."
ஜீவனாம்சம்
"'ஜீவனாம்சம்' சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' இதழில் 1959-60 இல் வெளிவந்துள்ளது. முன்னுரையில் ஆசிரியர் இந்த படைப்பிற்கான நடப்பு ஆதாரம் உண்டு என்பதோடு அது என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதை அப்படியே தராமல் கதைக்கு ஜீவனாக ஒரு இழையை மட்டும் எடுத்து அழகாக முழுக்க முழுக்க சாவி்த்திரி என்ற நாயகியின் மன போராட்டம் வழியே கதையை கொண்டு சென்று...."
எங்க நாட்டிலே – நான்காம் (இறுதி) பாகம்
ஆஸ்திரேலியாவில் ஒரு ஊழியர் வேலையில் இருந்து இளைப்பாற வயதெல்லை கிடையாது என்றால் நம்புவீர்களா? எழுபது வயதை தாண்டிய பலர் கூட இங்கு வேலைக்கு செல்வது சகஜம்.
ஆஸ்திரேலியா: தேசம் பிறந்த கதை! – பகுதி-1
"ஆஸ்திரேலியா தேசம் பிறந்த கதை.. கல்கியில் வெளியான என் முதல் கட்டுரை.. இது முதல் பாகம்.. இன்னும் 3 பாகங்கள் உள்ளன அனைத்தையும் படியுங்கள் ஆஸ்திரேலியாவை அறிந்திடுங்கள்."
அப்படியே நில்
"அன்னை தெரசா மாதிரி வேண்டாம். சுயமரியாதைச் சுடர் மணியம்மை மாதிரி சேவை செய்ய விரும்புகிறேன்" "நீ சுற்றி வளைத்துப் பேச வேண்டாம். எனக்கோ வயது நாற்பத்தைந்து; உனக்கு இருபத்தேழு. என் மகளை விட ஐந்து வயதுதான் நீ மூத்தவள். இது பொருந்தாக் காமம். என் மனம் இதற்கு ஒருநாளும் ஒப்பாது"
தக்காளிச் சட்னியும், இரத்தமும்
"இன்னும் ஒருத்தன் மட்டும் வந்து மாட்டவில்லையே என்று எதிர் பாரத்துக் கொண்டிருக்கும் போதே ஆடு தானே வந்து தலை கொடுத்தாற் போல வந்து மாட்டிக் கொண்டான். வண்ணம் பூசப்படாதவனாக ஃப்ரெஷ்ஷாக வந்தவனை வண்ணத்தில் குளிப்பாட்டி விட்டார்கள். பாவம் நிராயுதபாணியாக வந்து மாட்டிக் கொண்டான்"
மதுவும் கொரானாதான்
"உயிரைக் குடிப்பது என்றானபின் மதுவென்ன? கொரானாவென்ன? இரண்டும் ஒன்றுதான்" "அரசாங்கமே இப்போதைக்கு இப்போதையை மீணடும் திறந்து விட்டிடாதே! நிறைய குடும்பங்களில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்கட்டும்."
தனிமரம்
"பறவைகளுக்கிடையே வர்ணபேதம் இல்லை; அதனால் அவை மரத்தின் மேலே தங்குகின்றன. ஆனால் மனிதர்க்குள் வர்ணபேதம் உண்டு; அதனால் அவர்கள் மரத்தின் கீழே இருக்கிறார்கள். இந்த வர்ணபேதம் ஒழிய எத்தனை தலைமுறை ஆகுமோ. மரத்தின்மீது பறவைகள் சமத்துவமாக இருப்பதைப்போல, மண்ணில் மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதெப்போ?"
ரமாவின் கணா
இதுவரை ஒரு டஜன் பிள்ளை வீட்டார் வந்து பார்த்துப் போய்விட்டார்கள். எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டது போல ஒரே பாட்டுதான் பாடினார்கள். என்ன ஒவ்வொருத்தருக்கும் ராகம் வேண்டுமானால் மாறியிருக்கும்; சாகித்யம் அதேதான். "பெண் குள்ளம்" "உயரம் பொருத்தமில்லை" இன்றைக்கும் ஒரு கோஷ்டி மாலை ஆறு மணிக்கு பெண் பார்க்க வரப் போகிறது.
முதிர் கன்னி
"உன் பாரம்தான் இறங்கிடிச்சே. இப்பவாவது வரன் தேடலா மில்லியோ" "அம்மா,கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல கேள்வி. கட்டிக்க யார் வருவாரென்பது தான்.. என் வயசு இப்போ முப்பத்தேழு. சமவயசுன்னு பார்த்தாலும் வரனுக்கு இரண்டாம் தாரமாத்தான் வாழ்க்கைப் படவேண்டியிருக்கும்"
பேச்சாயி(ரத்னராஜு)
அம்மா வென்று அழைக்க அனைத்துத் தகுதியும் உள்ளது. அதைவிட சிறுவயதிலிருந்து பேச்சாயி என நான் கூப்பிடுவதையே செவி கொள்ளாமல் சந்தோஷமாகக் கேட்கும்.அம்மா வென்றுதான் கூப்பிடவில்லை "வாங்க போங்க" என்று மரியாதையாகவாவது கூப்பிடலாமில்லையோ ? அதுவும் இல்லை. "போ " "வா "; என ஒருமையில் தான் கூப்பிடுவேன். எனக்கென்னமோ பேச்சாயிக்காகவே என்னைப் பெற்றதாய் விட்டுச் சென்றது போலத் தோன்றுகிறது. கோவில் சுவற்றில் ஆலமரம் முளைக்கும் ரகசியம் போன்றது இது.
என் மூச்சுக் காற்று (ரத்னராஜூ)
அம்மா கொடுத்த மூக்கைத் துளைக்கும் அரோமா காஃபியை டம்ளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டபராவில் ஊற்றி ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு இடப்புறம் கொஞ்சம் தள்ளி மரப்பெஞ்சில் நான். அம்மாவோ அடுப்படியில், ஆனால் காதுகள் மட்டும் இங்கே. ஓசை யெழுப்பாமல் டிபன் வேலை நடக்கிறது. ஓசை வந்தால் நாங்கள் பேசுவது தெளிவாகக் காதில் விழாதல்லவா. சிறு சப்தம் கேட்டாலும் வேலையை நிறுத்திவிட்டு பேசுவதைக் கவனிப்பாள். ***** அன்று நான் , இன்று என் மகன். .
மானமிகு மணி (ரத்னராஜூ)
ஒரு நாயின் மனக் குமுறல்