வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் சுவாரசியமாக அப்போதைக்கு இல்லாதவை பின்நாளில் மிக சுவாரசியமாக இருக்கும்; சில நேரங்களில் புன்முறுவலையும், வெடிச் சிரிப்பையும், நெகிழ்ச்சியையும் தரும்.
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்கவேண்டாம்
'உலகநீதி'யின் இரண்டாம் செய்யுளில் உள்ள நாண்காவது நீதி 'நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்' என்பதாகும். சிறார்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதமான சிறிய கதை.
நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்
புலவர் உலகநாதர் இயற்றிய 'உலகநீதி' யில் இரண்டாவது செய்யுளில் உள்ள மூன்றாவது நீதி: "நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்"
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
நடக்காது என்பது நன்கு தெரிந்தும் பொறாமையால் முயன்ற வான்கோழி அவமானப்பட்டு நின்றது. இதைத்தான் செய்யுளின் இந்தவரி உணர்த்துகிறது.
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
( ஓவியம்:திரு.கிறிஸ்டி நல்லரத்னம்,மெல்பேர்ன், ஆஸ்திரேலியா ) ஒரு ஊரில் ஒரு பொய்யன் இருந்தான். அவனது வேலையே எப்போதும் பொய் சாட்சி சொல்வதுதான்.உண்மையை மறைத்து தான் பொய் சொல்கிறோம் என்பதைத் தெரிந்தே அவன் பொய் சொல்லும் பழக்கம் உள்ளவன். அந்த ஊரில் எல்லாவித கெட்ட பழக்கங்களையும் உடைய ஒருவன்தான் அவனுக்கு நண்பன். அந்த கெட்டவன் செய்யும் அநியாயங்களில் இருந்து அவனைக் காப்பாற்ற இந்த பொய்யன் தன்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக பொய்சாட்சி சொல்லி அவனைக் காப்பாற்றுவான். உண்மைக்கு மாறாக பல முறை... Continue Reading →
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
முகத்துக்குமுன் கூழைக்கும்பிடு போட்டு,முதுகுக்குப் பின் வாரித் தூற்றுபவரின் கதி என்னவாகும் என்பதனை விளக்கும் சிறுவர் கதை.
போகாத இடந்தனிலே
உலகநீதிபாடலில் அடுத்தது: 'போகாத இடந்தனிலே போக வேண்டாம்' இதை விளக்கும் கதையைப் பார்ப்போம்.
புத்தி வந்தது
'உலகநீதி' செய்யளின் நாண்காவது வரி: 'வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்' இதை விளக்கும் ஒரு கதையைப் பார்ப்போம்'
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
உண்மையான அன்பும், பாசமும், தியாக குணமும் கொண்ட மாதாவை நாமும் மறக்காமல் இருப்போம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
சிறுவர்களுக்கான நீதி கூறும் உலகநீதி புராணத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது வரி 'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்'என்பது. இதை விளக்கும் நீதிக்கதையைப் பார்க்கலாமா.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
'உலகநீதி ' எனும் நீதிநூலை இயற்றியவர் உலகநாதர் என்பவர் ஆவார். பதின்மூன்று ஆசிரியப்பாக்களில் எழுபது 'வேண்டாம் ' என்று விலக்கக் கூடியவற்றை கூறுகிறார். பொருள் விளக்கிக் கூற அவசியமில்லாத, எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் இயற்றியுள்ளார். இவர்காலம் 18ஆம் நூற்றாண்டு எனவும் 16ஆம் நூற்றாண்டு எனவும் கூறுகின்றனர். ஒவ்வொரு வரியையும் ஒரு கதை மூலம் விளக்க முற்படுகிறேன்.
தனியே சென்ற கோழிக்குஞ்சு
நாம் வளர்ந்து அனுபவம் பெற்ற பெரியவர்கள் ஆகும்வரை பெரியவர்களின் சொற்படியே நடக்கவேண்டும்;அவர்களின் அரவணைப்பிலேயே வளரவேண்டும் என்பது இக்கதை வழியாக நாம் அறிந்து கொள்கிறோம்.
பாரம்பரியம்
"தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்."
தேனி மலை மாடுகள்
"தன் தேவையைக்கூட கேட்கமுடியாத வாயில்லா உயிர்களுக்கு நாம்தான் வாயாக இருந்து அவற்றின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்."
கண்களருகே இமையிருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை
"இந்த பாட்டிகளுக்கு பேரனோ,பேத்தியோ வந்துவிட்டால் உலகமே அவர்கள்தான்; அவர்களுக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம் என்றாகி விடுகிறது."
மான் செய்த தந்திரம்
"ஆபத்தான நேரங்களில் தப்பிக்க வேறு வழியே இல்லை என்கிறபோது, நாம் புத்திசாலியாக திட்டமிட்டு நாம் நம் சக்திக்கும் அதிகமான துணிச்சலுடன் செயல் பட்டால்தான் தப்பிக்க முடியும் என்று மான் முடிவு செய்தது."
காணாமல் போனவர்கள்
"அடுத்த நாள் கட்டட தொழிலாளிகள் ஒருவருக்குப் பதில் ஐந்து பேர் காணவில்லை. எல்லாரும் கட்டடம் அருகிலேயே ஷெட் அடித்து தங்கி இருந்தார்கள்; "
புதிய நீதிக் கதைகள் | சுஜாதா | உயிர்மை பதிப்பகம்| Moral stories in Tamil | Tamil Stories for Kids |
சுஜாதாவின் புதிய நீதிக் கதைகள் வாழ்வின் சில உண்மைகளை அங்கதத்தடன் முன்வைக்கின்றன.
பத்மஸ்ரீ பழ வியாபாரி(Harekala Hajabba)
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
ஆகாயப் பூக்கள்
"மகிழ்ச்சியோ,துக்கமோ இரண்டும் வெளிப்படும் போது இந்த கண்ணீர் வருகிறதே அது எப்படி வேறுபட்ட உணர்வுக்கு ஒரே மெய்ப்பாடு."
புறா சொல்லும் பாடம்
ஆறறிவு மனிதனுக்கு ஐந்தறிவு பறவையான புறா கற்றுத்தரும் பாடம். நல்லனவற்றை யாரிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாமல்லவா!
காவல் தெய்வங்கள்
'நாங்க எல்லாரும் வெயிலுகந்தவங்க. கட்டடம் கட்டி எங்கள ஒங்ககிட்ட இருந்து பிரிச்சு தனிமையாக்கிடாதீங்க. எங்களுக்கு தனி பூசாரியும் வைக்கக் கூடாது; அவுங்க அவுங்களேதான் பூசை செஞ்சுக்கனும்'
தரங்கம்பாடி கோட்டை(Fort Dansborg)
"டேனிஷ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டை இதுவேயாகும். முதலாவது கோட்டை ' ஹேம்லெட் ' நாடகம் எழுத ஷேக்ஸ்பியருக்கு ஊக்கமளித்த 'க்ரோன்போர்க்' கோட்டையாகும்.
‘புத்திசாலி பூனையும், அலட்சிய நரியும்’
"முன்கூட்டியே திட்டமிடாதவர் வாழ்க்கை நரியின் நிலைதான். எனவே நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கடைசி நேரத்தில் எதுவுமே தோன்றாது."
சதுரங்கப் பட்டினம்(Sadras)
"கல்லறைகளின் வெளிப்புறம் உள்ள அறைகளில் ஒன்றின் தரையில் 'ஆடு-புலி ஆட்டம்' என்ற பெயருடன் செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களடமிருந்து டச்சுக்காரர்கள் விரும்பி கற்றுக் கொண்ட ஆட்டம்."
சந்தோசம்
"அந்த நேரத்தில் குப்பை சேகரிப்பவரிடம் குப்பைகளை போட்டுவிட்டு வந்த தம்பி இந்த உரையாடல்களைக் கேட்டு தயங்கியபடி வந்தான்."
ஆட்டுக்கல் மழைமானி Ancient Tamil ‘Rain Gauge’
"ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.."
இருள் குகை சாமி
"மணி பதினொன்றைத் தொட்டது; இருள்குகையிலிருந்து பூசை மணியோசை கேட்டது; சாம்பிராணியுடன் வேறுசில பச்சிலை போன்றவற்றையும் சேர்த்து புகைத்தார்கள். புகையும், நறுமணமும் மயக்கத்தைக் கொடுத்தது."
அவள் மனம்
"அம்மா அப்பா இல்லாத என்னை ஒரு மாமி(aunty) அனாதைன்னு திட்டினாங்க. அப்ப குழந்தை இல்லாத அம்மா அப்பாவை என்னான்னு சொல்றது". குழந்தை குமுதாவின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது."
வீரத் தமிழச்சி 2 (BRAVE TAMIL WOMEN) – தீரமிகு தில்லையாடி வள்ளியம்மை
"சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா.? என்றார் ஆங்கிலேய அதிகாரி, உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றார்.."
காவலன்
"பானு இடத்தில் நிலா உட்கார்ந்து புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தாள். மூன்று பேர் தள்ளாடியபடி வந்தார்கள்."
பொது
'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல் இவர்கள் எல்லாமும் எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினார்கள்'
மயில் தீவு
"வரும்படி வரவேண்டும் என்பதற்காக பிணத்தை எதிர்பார்த்திருக்கும் சுடுகாட்டு வேலையாளுக்கும் தனக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றெண்ணினான்."
குற்றால அருவி
"இவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டிடும் பாசம் எந்த உவமையிலும் அடங்காது. மொழியில்லாமல் பறவைகளும் விலங்குகளுமே அன்பு பாசம் காட்டிடும் போது இவர்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொள்வதில் வியப்பேது."
குமிழித் தூம்பு
"தமிழ்நாடு அரசு இத்தகைய குமிழித் தூம்புகளை வரலாற்றுச் சின்னங்களாக அறிவித்துக் காப்பாற்ற வேண்டும். இதைக் காப்பது நமது கடமையாகும். "
காதல் அழிவதில்லை(கானல்)
"என்னதான் அவள் பேரழகியாக இருந்தாலும், பிறவி நடிகையாக இருந்தாலும், லட்சோப லட்சம் ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், அவள் மனம் என்கிற மந்தி அந்த நடிகனின் மீதே தாவத்துடித்தது.."
எங்கள் ரகுநாதன்(engal ragunathan)
"பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்த நீதிபதி புத்தகத்தை கேட்க அதற்கு ரகுநாதனின் பதில் புத்தகம் ஓஸியில் கொடுப்பதில்லை."
உதவிக்கு கூலியா
"மாமா சொன்னதுல தப்பில்லை என்றே கருதினார்கள். எதுவானாலும் உழைச்சி திங்கனும்; ஓசியில திங்க ஆசைப்படக் கூடாது. இது இந்த ஜென்மத்துல மறக்காது"
கிடா
"யோவ் என்னா பேசுற? வாயக்கழுவு. சீக்கு வந்து போனா வீட்டு தோட்டத்துல பொதைச்சி, மண்டபம் கட்டுவேன்"
ராஜ ஜாதகக்காரன்
" தங்கராஜு இது ஒனக்கான உத்தரவு; அதான் ஒன்ன தனியா கூப்புட்டு சொல்றேன்; மொத்த புதையலும் ஒனக்குத்தான், உன் கவலையெல்லாம் இனிமே தீர்ந்திடுச்சு" .
ஆதித்த கரிகாலன் மரண மர்மம்.(Chola Dynasty Prince Adhiththa Karikalan’s Mysterious Murder)
"விண்ணுலகு செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் , கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளை போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகும்படி குடிமக்கள் வேண்டினர். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதால் அவன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருள்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்..."
தீவுக்கோட்டை (DEVI COTTAH )
"இன்று மனித நடமாட்டமே இல்லாத ஊர் ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்தது என்பதறிய வியப்பாக உள்ளது..."
தமிழர் கட்டட விந்தை – 3 (TAMIL ARCHITECTURE)
"தமிழர்கள் எல்லா துறைகளிலும் அபரிமிதமான அறிவோடு இருந்திருக்கிறார்கள். அவ்வாறே தேர்ந்த பொறியியல் நுட்பத்தோடு கட்டடக் கலையிலும் பிரம்மாண்டங்களை நிர்மானித் திருக்கிறார்கள். அவற்றை யெல்லாம் அறிகிற போது நாமும் தமிழன் என்றஎண்ணம் எழுந்து நம்மை இரும்பூது கொள்ளச் செய்கிறது. தமிர் கட்டட விந்தை பகுதி 3 இல் சற்றே சிலவற்றைக் காண்போம்."
என் இனிய புளிய மரம்
"புளிய மரமே, புளிய மரமே எனக்கு ஒரு புளியம் பழம் போடு " என்று மரத்தை அண்ணாந்து பார்த்து பாட்டாக சத்தம் போட்டு கேட்பார்கள்; என்ன ஆச்சரியம், சில புளியம் பழங்கள் விழும். அதே நேரம் ஒரு காக்காவோ, நார்த்தம்பிள்ளை குருவியோ ஒரு கிளையிலிருந்து பறந்து போகும். அல்லது வாலைத் தூக்கிக் கொண்டு ஒரு அணில் கத்தியபடியே கிளையில் ஓடும்."
தமிழக நாட்டுப் புறக்கலைகள்4(TAMIL TRADITIONAL FOLK ARTS) – பகுதி…4
"துர்க்கையை கொல்ல அவளின் எதிரிகளானவர்கள் கொடிய விஷமிகு பாம்பாகவும், தேளாகவும் உருமாறி வந்த போது, அவர்களை அழிக்க தன் கால்களில் மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடியதாகவும், அந்த கணமான கட்டையினால் தாக்கப்பட்டு அந்த நச்சு உயிர்கள் உயிர் இழந்ததாகவும் புராண கதைகள் வழங்கப்படுகின்றன. "
சங்க கால மகளிர் தொழில் முனைவோர்
"பழந்தமிழக மகளிர் தொழில் முனைவோர் தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்து சுற்றத்தைக் காத்ததோடு , சமூகப் பொருளாதாரத்தை காப்பதிலும் முக்கியப் பங்காற்றியமை தெளிவு."
அரும்பு
"காதலிக்கும் பெண்கள் சாதியைப்பற்றி யெல்லாம் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அம்மா, அப்பா, ஆச்சாரம் என்றுதான் பின் வாங்கிடறாங்க. உள்ளும் புறமும் நல்லா தெரிஞ்ச ஒருத்தனை கரம் பிடிக்க தவறிடராங்க. "
சங்கத்-தமிழர்-உணவு-பகுதி-4
"நண்பர் அரசு, தமிழ் பேராசிரியர் கொடுத்த ஊக்கத்தாலும் , உள்ளுக்குள் தோன்றிய உந்துதலாலும் இயன்றவரை இயம்பி விட்டேன். இதுவே தமிழ் கற்றறிந்தவர் எனில் இன்னும் சிறப்பாக படைத்திருப்பார். எப்படி இருப்பினும் என்பால் அன்பு கொண்ட நல் உள்ளங்கள் தந்த ஊக்கமும், எழுதிய பின்னூட்டமும் எனக்கு மகிழ்வை தந்தது என்பது உண்மை.. மீண்டும் தமிழர் பெருமை பேசும் செய்தி ஒன்றுடன் செய்திச் சாரலில் சந்திப்போம் ; வணக்கம்."
சங்கத்-தமிழர்-உணவு-பகுதி-3
"வெளி நாட்டு ரசாயன உற்பத்தியாளர்களின் சதியை முறியடித்து நாம்தான் அவற்றை வாங்கி உண்டு நலம் பெற்றிட வேண்டும் "
சங்கத் தமிழர் உணவு ( பகுதி 2)
"காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது."