மறைந்து வரும் மரங்கள்

'எங்கேயோ காணக்கூடிய அற்புதங்களைக் கண்டு அதிசயிக்கும் மனிதன் கண்முன் அழியும் இயற்கையைின் அற்புதங்களைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் வாழ்வது கூட உலக  அதிசயமாயுள்ளது அப்படித்தான் மரங்கள் அழிவதும்'

வாடா மலர்(vada malar)

தானப்பனும் குழந்தைவேலும் சிறுவர்களாக இருந்தபோது  கரித்துண்டுகளால் மீசை வரைந்து அதை வீட்டிலுள்ள கண்ணாடியில்  பார்க்க  முயற்சிக்க , அம்மா அப்பாவுக்கு பயந்து  பக்கத்திலுள்ள குட்டையில் பார்க்கின்றனர்.

படகோட்டியின் பயணம்(padagotiyin payanam)- பகுதி – 3

"பாரதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவுக்கானது எனது இந்த பதிவு. 'படகோட்டியின் பயணம்' என்ற நூலில் 'ஆறுஆண்டு காலத் தவிப்பு' என்ற தலைப்பின் கீழ் உள்ளது பாரதியைப் பற்றிய இந்தப்பதிவு."

வாஷிங்டனில் திருமணம்

"அலிபாபாவின் குகையின் கதவு திறக்க 'திறந்திடு சீசேம்' என்று சொல்ல வேண்டும். பல்வேறு அழுத்தங்களால் மூடிக்கிடக்கும் மனதை திறக்கும் சாவி, விசா இன்றி வாஷிங்டனில் திரும(ன)ணம் காண வைத்ததற்கு மீண்டும் நன்றிகள் சா(வி)ர்."

மெய் நிகரி(mei nigari)

"பாரதியார் தன் கவிதையை ஒருவரிடம் படித்துக்காட்டும்போது சரியான ரியாக் ஷன் வர்லனா மறுபடி சத்தம் போட்டு படிப்பாராம் அப்பவும் ரியாக் ஷன் இல்லன்னா எதிராளிய பளார்னு அறைஞ்சிட்டு போவாராம்".

புதுமைப்பித்தனின் ஆற்றங்கரை பிள்ளையார்

"உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது."

வானொலியில் இன்று ஒரு தகவல்(  vanoliyil indru oru thagaval) பாகம்-10

"சிவனுக்கு  பாடம் சொல்லி கந்தன் சாமிநாதனான். கச்சியப்பர் கந்தபுராணம் எழுதினார். தன் பெயரில் இரண்டும் உள்ள தென் கச்சியார் இன்று 'ஒரு' தகவல் சொன்னதனால்.."

கடலுக்கு அப்பால்(kadalukku appal)

"நவரசங்களில் சிருங்கார ரசத்தை அழகான வார்த்தைகளால் அளவாய் சேர்த்து மற்ற சுவையையும்  கலந்து வெளி நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் பண்பு குறையாதவர்கள் என்று சிங்காரமாய் சொல்லியதற்கு சிங்காரம் அவர்களுக்கு நன்றிகள்."

புதிய நீதிக் கதைகள்

"குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இதனை பதிவிடுகிறேன். சிறுவயதில் மனதில் ஆழமாய் பதியும் என்பதற்காகத்தான் கதைகள் வழி நீதியை குழந்தைகளுக்கு உணவுடன் சேர்த்து ஊட்டுகிறோம்."

திருக்குறள் தெளிவுரை

"முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாதிருந்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்."

உரை நடைத் தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள்

ஐம்பெரும் காப்பியங்களை இயற்றியவர்கள் வேறுவேறாயினும்  ஒன்றுபோல  பெண்களின் பெயர்களை அவர்களின் ஆபரணங்களின் பெயரைச் சூட்டியிருப்பது வியப்புக்குரியது!!!

ஒரு புளியமரத்தின் கதை

"புளியமரத்தை வெட்ட நினைப்பவர்கள் ஒருபக்கம். வழக்கமான பாணியில் தடுக்க நினைப்பவர்கள் மற்றொருபுறம். இறுதியில் புளிய மரத்திற்கு நடக்கும் கொடுமையும் அதன்முடிவும் நம்மை உலுக்கிவிடுகிறது..."

வெண்ணிற நினைவுகள்(vennira ninaivugal)

"தீபாவளி என்றாலே பெரியவர்களுக்கு பலவிதமான பலகாரம்  சிறுவர்களுக்கு பட்டாசு இளவயதினருக்கு புத்தாடை எல்லாவயதினருக்கும் எண்ணெய் குளியல். வரும் தலைமுறையில் பள்ளியில் தீபாவளி கட்டுரையில் பலகாரம், பட்டாசு, புத்தாடை, எண்ணெய் குளியலோடு,  திரைப்படம் பார்ப்பது ஐதீகம் என்று சேர்த்து எழுதும் அளவுக்கு நம்மோடு ஒன்றிவிட்ட திரைப்படம் பற்றியதானது எனது இந்தப் பதிவு."

தண்ணீர்

"தண்ணீர் (பம்ப்)அடிக்கும் நேரத்தில் 'பகவானே வந்தாலும் இப்படி கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கள்' என்று சொல்வோம்.."

இரண்டுபடி

"ஒருநாள் நள்ளிரவு கோரன் வரும்போது  தாய்மையோடு இருப்பவளை சீரழிக்க முயல்பவனை கொன்றுவிட சிறைப்படுகிறான். நினைவற்று கடந்தவளை சாத்தன்தான்  முழுமையாக  கவனித்துக்கொள்கிறான். கோரன் கேட்டுக்கொண்டதால் வந்ததாக கூறுகிறான்."

கூரை

"தான் வாழ்ந்து வயதாகிவிட்டவள்  அவர்கள் வாழவேண்டியவர்கள்  என்ற எசக்கியின் நினைப்பு. தாயின்  பாசத்திற்குமுன் பசித்தவயிறு தோற்றுப்போகிறது."

வசந்தகால மேகம்

"வாழ்க்கையில் நடந்து போனதை நினைத்து வேதனைப்பட வேண்டும் என்றிருந்தால்  நமக்கு கண்கள் முதுகிலிருக்க வேண்டும்.."

கிழவனும் கடலும்

"கிளைமாக்ஸ் காட்சி அதியற்புதம். மீனைப்பிடித்ததும் எதிர்பார்த்த வண்ணம் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நெஞ்சம் எகிற...."

படகோட்டியின் பயணம் பகுதி .2

"ஒருமுறை தேசாய்க்கு ஒருவர் விளையாடுவதற்கு பார்சலில்  பொம்மைகளை வாங்கி அனுப்புகிறார். அவை வெளிநாட்டு பொம்மைகளாக இருப்பதால்  கொடுக்காமல் காந்தி  அலமாரிக்குள் வைத்துவிடுகிறார். இதுதேசாய்க்கு தெரியவர..."

பேரறிஞர்அண்ணாவின் சிறுகதைகள்

"எம்பெருமாள் வீட்டில்  வேலை செய்யும்  குட்டியம்மாள் முத்துவை விரும்புகிறாள்.  அவளை சந்திக்கச் செல்லும்போது  யாரோ வரும் சத்தம் கேட்டு ஔிந்துகொள்ள வரும்  இடம் எம்பெருமாளின்  படுக்கையறை."

படகோட்டியின் பயணம் பகுதி. 1

"இன்னும் ஒருமுறை ஏறத் தொடங்கி விட்டது எறும்பு, ஒன்றுமே சொல்லவில்லை மரம்"

பாடுக பாட்டே

"இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை தூண்டிய தமிழாசிரியருக்கு, உயர்தனிச் செம்மொழி என ஊட்டி வளர்த்த தந்தைக்கு (அவரும்ஆசிரியர்), தன் புத்தகங்களை படிக்கக் கொடுத்த அண்ணனுக்கும்(ஆசிரியர்) ஆசிரியர் தினத்தில் இந்த பதிவை சமர்பித்து வணங்குகிறேன்!"

எங்கள் ரகுநாதன்(engal ragunathan)

"பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்த நீதிபதி புத்தகத்தை கேட்க  அதற்கு ரகுநாதனின் பதில்  புத்தகம் ஓஸியில் கொடுப்பதில்லை."

வாழ்க்கை அழைக்கிறது (Vazhkai Azhaikkirathu)

"தாய்மாமன் தன்னை தாரமாக்க நினைக்க, தங்கம் தனக்கு பிடித்தவனுடன் ஓடிவர, அவனோ அவளை விட்டு ஓடிவிடுகிறான். அவள் சத்திரத்திற்கு...."

த.ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு-1 (T.Jeyagandhan Sirukathaikal thoguppu-1)

மகள் சாப்பிட்ட இலையை ஜாங்கிரியுடன் வெளியில் போட, சுப்பு சோணையை சீண்டும் நோக்கில் இனிப்பு எடுத்துக்கொள்ளேண்டா என்று இலையைக் காட்ட, சோணை அதை எடுத்து....

சமுதாய வீதி (samuthaya veethi)

"வெளிநாட்டில் நாடகம் போடுவதற்காக ஹோட்டலில் தங்கியிருக்கும் மலாய் அப்துல்லா என்ற பணக்காரரை விருந்துக்கு  அழைப்பதற்கு மாதவியிடம் "நீ மட்டும் தனியே சென்று அழைத்து வா" என்கிறான் கோபால்..."

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு

கண்களைத் தூக்கம் .வ...ரு...ட  விடாப்பிடியாக கடைசிவரியைப் படிக்கவும் திடுக்கிட்டு நாம் படித்த கதைதானா, தூக்க கலக்கத்தில் பக்கத்தை மாற்றினோமா, வரிகளை வார்த்தைகளை விட்டுவிட்டோமா, என...

மணிமொழி நீ என்னை மறந்துவிடு

"சக பயணியாக கைக்குழந்தையுடன் இருக்கும்பெண் தன் பெயரை மணிமொழி என்று சொல்ல கதைநாயகி மணிமொழியைப் போல நாமும் விழிகள் விரிய..."

லா.ச.ராமாமிருதம் சிறுகதைகள் (La Sa Ramamirtham)- பகுதி-1

"காலையில் சற்று அதிக நேரம் கண்ணயரும் சேது வெளியில் வரும்போது குன்றின் மீது நிற்கும் கூட்டத்தைப் பார்த்து நெருங்கிவருகிறான், சுனையில் பெண்ணொருத்தி மானத்தை மறைக்கும் சேலை மலையை நோக்கிபறக்க.."

துளசி – Thulasi – By Bhadrakali Maharishi

"காதலன் கால்முறிந்ததால் பழிவாங்க நினைக்கும் துளசி ஞானசம்பந்தத்திற்கு போன் செய்து தந்திரமாகப் பேசி அவனது அறையிலேயே சந்திக்கிறாள். அப்போது...."

நண்பனின் தந்தை [Nanbanin thanthai] – அசோகமித்திரன் [Ashokamitran]

பிளாஷ்பேக்காக சிறுவயதில் ஹார்மோனியம் கற்றுக் கொண்டதாகவோ, பரிசாக கிடைத்ததாகவோ, தன் காதலுடன்  சம்பந்தப்படுத்தியோ இருக்கலாம் என நாம்  நினைத்தால்  ஹா..... என்று சொல்லவைக்கிறார் அசோகமித்திரன்.

சிதைந்த கூடு

"ரவீந்திரநாத் தாகூர் என்ற பெயரைப் பார்த்ததுமே புத்தக கண்காட்சியில்(2020) வாங்கிவிட்டேன். மொழிபெயர்ப்பிலேயே   அருமையாக இருக்கிறது. வங்க மொழியிலேயே படித்திருந்தால் அவரின் நடையை, எழுத்தோவியத்தை நன்கு ரசித்திருக்கலாமே என்ற ஆதங்கம் மனதுக்குள்  தோன்றுகிறது."

சட்டி சுட்டது

"சிறுவயதில் படித்த ராணிமுத்துக்களில் பலமுறை படித்தது ஓரளவு நினைவில், சிலமுறை படித்தது சற்றே மனதில், ஒரிருமுறை மட்டுமே படித்த 'சட்டி சுட்டது' உணர்வில் கலந்து ஜெயராஜின் படங்களோடு மனதின் ஆழத்தில் அமர்ந்துவிட்டது."

மறக்கமுடியுமா? – பகுதி-2

"உடனே விக் ஐக் கழற்றிக் கையில் பிடித்தபடி "ஹலோ மிஸ்டர் வீரபாகு, சந்திரபாபு மாதிரி நடிக்க வேண்டுமென்றால் நீங்கள்  அவரைத்தான் புக் செய்யவேண்டும். என்னை மாதிரி நடிக்க வேண்டுமானால் நாகேஷை புக் பண்ணுங்க, விக் ஐ பிடிங்க" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே......"

மறக்கமுடியுமா? – பகுதி-1

"யாவுமே உண்மை நிகழ்வுகளாய்  இருப்பதனால்   எதைக்கொடுப்பது என சற்று தடுமாறி படிப்பினையாகவும், பயனுடையதாகவும், நெஞ்சை நெகிழ செய்யக்கூடியதுமான நிகழ்வுகளை முடிந்தவரை தொடராக கொடுக்கலாம் என்றிருக்கிறேன்."

கண்ணதாசன் கவிதைகள்.(ஆறாவது தொகுதி) – (kannadasan kavithaigal)

குரோதம் ,பொறாமை, கள்ளத்தனம் என பலர் தன்விழிகளில் வெளிப்படையாகவே காட்டிவிடுகின்றனர். எல்லார் விழிகளும்  அன்பு பாசம் கருணை என்றிருந்தால் வாழ்வில் என்றும் சந்தோஷமே நிறைந்திருக்கும். அப்படி இல்லா விழிகள்  ஊமை விழிகளாகவே  இருக்கலாம். முடியுமா?

கலைஞரின் நகைச்சுவை நயம் (5 ஆம் பாகம்)

தற்போது அவ்வையார்  இருந்தால்  கலைஞர் என்றால் தமிழ் ! தமிழ் என்றால் கலைஞர்!!! என்றுதான் சொல்லியிருப்பார். கலைஞரின் பிறந்த நாளில் இந்த பதிவை பகிர்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.

கு.அழகிரிசாமி கதைகள் (Ku. Azhagirisaami Kadhaigal)

2 தெருக்காரர்களும் பூசாரி யார் பக்கம் என சந்தேகித்து  பூசாரியை  நன்கு கவனிக்க!!! மறுநாள் வர இருக்கிறார்கள். இதை  அறிந்த பூசாரி  ஓடிவிடுகிறான்.

பட்டாம்பூச்சி

கதையின் நாயகன் தன் உடலில் பட்டாம்பூச்சியை பச்சை குத்தியிருப்பான். அதனால் அவனை எல்லோரும் பட்டாம்பூச்சி  என்றே கூப்பிடுகின்றனர். இந்த பெயர் அவனுக்கு பொருத்தமே என்று தோன்ற வைக்கும் அவனது செய்கைகள்.

Create a website or blog at WordPress.com

Up ↑