"வெண்ணிற இரவுகள் " முகநூல் தளத்தில் இந்த கதையைப் பற்றி பதிவு எழுதாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நாயகி நாஸ்தென்காவைப் பற்றியும் அவ்வளவு பதிவுகள். அப்படி என்ன இந்தக் கதையில் இருக்கிறது என்ற ஆர்வம் இந்தக் கதையைப் படிக்க காரணமானது.
தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
தூக்குதண்டனை பெற்றவர்களின் கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி லீவரை அழுத்தியதும் பாதாளத்தில் சென்றதும் அந்த நபரின் கடைசி நிமிட.... அதனால் ஒவ்வொரு முறையும் ஜனார்த்தனன் மனம் பட்டபாடு. இந்த வேலையை அவர் எந்த சூழ்நிலையில் ஒப்புக்கொண்டார் என்பதையும் இப்படிப்பட்டவரின் குடும்பத்திற்கு சமூகம் கொடுக்கும் (மரியாதை அல்ல) இடம், அவரின் தாய், தந்தை ,சகோதரர்கள் , தன் மனைவி குழந்தைகள் குறிப்பாக தன் பெண்ணுக்கு மணமகன் தேடுவது என குடும்பம் சார்ந்த குறிப்புகள் ஒருபுறம்.
புத்தி வந்தது
'உலகநீதி' செய்யளின் நாண்காவது வரி: 'வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்' இதை விளக்கும் ஒரு கதையைப் பார்ப்போம்'
The Secret
இரகசியம் என்பது பொதுவாக வெளியில் சொல்லாது ஒருவரின் ஆழ்மனதில் இருக்கும் கனவு ,ஆசை ,கோபம், காதல், இன்னபிற என்று சொல்லலாம். இந்த புத்தகத்தில் உள்ள ரகசியம் , ஒருவர் தன் இலக்கு நோக்கிச் செல்லும் வழியில் எதிர்ப்படும் பூட்டிய கதவு, எழும்பி நிற்கும் சுவர், தடுக்கி விட காத்திருக்கும் கல், திறந்திருக்கும் சன்னலையும் சாத்திவிடும் உள்நுழையும் பெருங்காற்று, இன்னும் இன்னும் இதுபோன்ற எத்தனையோ தடைகளை, அவற்றின் தன்மைக்கு ஏற்ப, இலகுவாக அல்லது தன் முழு வலிமையினால் ,திறந்தோ, உடைத்தோ, நகர்த்தியோ, தள்ளியோ, சுற்றிக்கொண்டோ, ஏறிநின்று (வெற்றிபெற்ற அல்ல) சாதனை படைத்தவர்களை உங்களால் எப்படி சாத்தியமாயிற்று? என விழிவிரிந்து ,வியந்து பார்த்து, கேட்கும் கேள்விக்கு பதிலே இந்த இரகசியம்.தமிழில் 'கதாநாயகன்' என்ற பெயரில் P.S.V.குமாரசாமி அவர்களின் மொழிபெயர்ப்பில் அருமையாக இருக்கிறது.