தம்பையா பிள்ளை

வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள்  சுவாரசியமாக அப்போதைக்கு இல்லாதவை பின்நாளில்  மிக சுவாரசியமாக இருக்கும்; சில நேரங்களில் புன்முறுவலையும், வெடிச் சிரிப்பையும், நெகிழ்ச்சியையும் தரும்.

இறையன்புவின் சிந்தனை  வானம்

பொறமை , எளிமை ,சுயநலம்,தேடல், நம்பிக்கை ,பிறப்பு  ,மாணவர்கள் போன்ற பல தலைப்புகளில் உள்ள  விளக்கங்கள் ,கருத்துகளும்  சிறப்பாக உள்ளன. முடிவெடுக்க முடியாது தடுமாறுவர்க்கு  இந்த புத்தகத்தை படிப்பது  சிறப்பாக  உதவும்.

போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

முகத்துக்குமுன் கூழைக்கும்பிடு போட்டு,முதுகுக்குப் பின் வாரித் தூற்றுபவரின் கதி என்னவாகும் என்பதனை விளக்கும் சிறுவர் கதை.

டான்டூனின் கேமரா

புத்தகத்தின் அட்டையிலும் உள்ளேயும் எறும்பின் உடலமைப்பைப் போன்றே படங்களை வரைந்தளித்த கே.ஜி.நரேந்திரபாபுக்கு  நன்றிகள். வயதில் சிறியவர்களாக நவீன தொழில் நுட்பத்தினை எளிதில் புரிந்து கையாளக் கூடியவர்களாக வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு சொல்லித்தரும் சாமிநாத, சாமிநாதிகள்(பேரன் பேத்திகள்) குழந்தைகள் தின பதிவாக இந்த புத்தக விமர்சனத்தைப் பதிவிடுகிறேன்.

அனாதை மரங்கள்

வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .

ஓவியர் ‘செள’ – ஒரு படைப்பாளியின் கதை!

ஒரு சஞ்சிகைக்கு ஓவியம் வரைபவனின் சவால்களை சித்தரிக்கும் சுவாரசியமான கட்டுரை. ரசித்து எழுதியது.

குறிஞ்சி மலர்

வறுமை விரட்டிய நிலையிலும் பண்பு நிறைந்தவனான அரவிந்தனே என் மனதுக்கு குறிஞ்சிமலராகிறான்.  மலரில் ஆண்மலரும் உண்டுதானே!!!

முத்தயுத்தம்(muttha yuttham)

"முத்தயுத்தம் இந்த கதையில் காட்டை, அதன்  ஆச்சரியங்களை, அழகை ,அதன் ஆபத்தை என ரசிக்க ரசிக்க சொல்லி ஆசிரியர் சொல்வது போல இரவில் நிலவொளியில் காட்டின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று  நமக்கும் ஆவலை ஏற்படுத்தும் ஆசிரியர் ஷங்கர நாராயணனுக்கு பாரட்டுக்கள்."

பாரம்பரியம்

"தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்."

அப்படியே நில்

"அன்னை தெரசா மாதிரி வேண்டாம். சுயமரியாதைச் சுடர் மணியம்மை மாதிரி சேவை செய்ய விரும்புகிறேன்" "நீ சுற்றி வளைத்துப் பேச வேண்டாம். எனக்கோ வயது நாற்பத்தைந்து; உனக்கு இருபத்தேழு. என் மகளை விட ஐந்து வயதுதான் நீ மூத்தவள். இது பொருந்தாக் காமம். என் மனம் இதற்கு ஒருநாளும் ஒப்பாது"

தக்காளிச் சட்னியும், இரத்தமும்

"இன்னும் ஒருத்தன் மட்டும் வந்து மாட்டவில்லையே என்று எதிர் பாரத்துக் கொண்டிருக்கும் போதே ஆடு தானே வந்து தலை கொடுத்தாற் போல வந்து மாட்டிக் கொண்டான். வண்ணம் பூசப்படாதவனாக ஃப்ரெஷ்ஷாக வந்தவனை வண்ணத்தில் குளிப்பாட்டி விட்டார்கள். பாவம் நிராயுதபாணியாக வந்து மாட்டிக் கொண்டான்"

மதுவும் கொரானாதான்

"உயிரைக் குடிப்பது என்றானபின் மதுவென்ன? கொரானாவென்ன? இரண்டும் ஒன்றுதான்" "அரசாங்கமே இப்போதைக்கு இப்போதையை மீணடும் திறந்து விட்டிடாதே! நிறைய குடும்பங்களில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்கட்டும்."

தனிமரம்

"பறவைகளுக்கிடையே வர்ணபேதம் இல்லை; அதனால் அவை மரத்தின் மேலே தங்குகின்றன. ஆனால் மனிதர்க்குள் வர்ணபேதம் உண்டு; அதனால் அவர்கள் மரத்தின் கீழே இருக்கிறார்கள். இந்த வர்ணபேதம் ஒழிய எத்தனை தலைமுறை ஆகுமோ. மரத்தின்மீது பறவைகள் சமத்துவமாக இருப்பதைப்போல, மண்ணில் மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதெப்போ?"

ரமாவின் கணா

இதுவரை ஒரு டஜன் பிள்ளை வீட்டார் வந்து பார்த்துப் போய்விட்டார்கள். எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டது போல ஒரே பாட்டுதான் பாடினார்கள். என்ன ஒவ்வொருத்தருக்கும் ராகம் வேண்டுமானால் மாறியிருக்கும்; சாகித்யம் அதேதான். "பெண் குள்ளம்" "உயரம் பொருத்தமில்லை" இன்றைக்கும் ஒரு கோஷ்டி மாலை ஆறு மணிக்கு பெண் பார்க்க வரப் போகிறது.

முதிர் கன்னி

"உன் பாரம்தான் இறங்கிடிச்சே. இப்பவாவது வரன் தேடலா மில்லியோ" "அம்மா,கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல கேள்வி. கட்டிக்க யார் வருவாரென்பது தான்.. என் வயசு இப்போ முப்பத்தேழு. சமவயசுன்னு பார்த்தாலும் வரனுக்கு இரண்டாம் தாரமாத்தான் வாழ்க்கைப் படவேண்டியிருக்கும்"

பேச்சாயி(ரத்னராஜு)

அம்மா வென்று அழைக்க அனைத்துத் தகுதியும் உள்ளது. அதைவிட சிறுவயதிலிருந்து பேச்சாயி என நான் கூப்பிடுவதையே செவி கொள்ளாமல் சந்தோஷமாகக் கேட்கும்.அம்மா வென்றுதான் கூப்பிடவில்லை "வாங்க போங்க" என்று மரியாதையாகவாவது கூப்பிடலாமில்லையோ ? அதுவும் இல்லை. "போ " "வா "; என ஒருமையில் தான் கூப்பிடுவேன். எனக்கென்னமோ பேச்சாயிக்காகவே என்னைப் பெற்றதாய் விட்டுச் சென்றது போலத் தோன்றுகிறது. கோவில் சுவற்றில் ஆலமரம் முளைக்கும் ரகசியம் போன்றது இது.

என் மூச்சுக் காற்று (ரத்னராஜூ)

அம்மா கொடுத்த மூக்கைத் துளைக்கும் அரோமா காஃபியை டம்ளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டபராவில் ஊற்றி ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு இடப்புறம் கொஞ்சம் தள்ளி மரப்பெஞ்சில் நான். அம்மாவோ அடுப்படியில், ஆனால் காதுகள் மட்டும் இங்கே. ஓசை யெழுப்பாமல் டிபன் வேலை நடக்கிறது. ஓசை வந்தால் நாங்கள் பேசுவது தெளிவாகக் காதில் விழாதல்லவா. சிறு சப்தம் கேட்டாலும் வேலையை நிறுத்திவிட்டு பேசுவதைக் கவனிப்பாள். ***** அன்று நான் , இன்று என் மகன். .

மானமிகு மணி (ரத்னராஜூ)

ஒரு நாயின் மனக் குமுறல்

Create a website or blog at WordPress.com

Up ↑