
அனாதை மரங்கள்
வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .

உன் கண்ணில் நீர் வழிந்தால்!
“வாசிப்பனுபவத்தை இன்றைய சமுதாயத்தினுள் விதைப்பதும் இன்றைய எழுத்தாளனின் கடமை. இக்கதையில் வரும் முதலாளி ஒரு “கதை சொல்லியாக” வருகிறார். இக்கதையை வாசிக்கும் வாசகன் இதில் வரும் கதைகளையும் தேடி வாசிக்க முனைந்தால் அதுவே வெற்றி என்பேன்.”

பாரம்பரியம்
“தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்.”

கண்களருகே இமையிருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை
“இந்த பாட்டிகளுக்கு பேரனோ,பேத்தியோ வந்துவிட்டால் உலகமே அவர்கள்தான்; அவர்களுக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம் என்றாகி விடுகிறது.”

வெற்றிடம்
ஒரு நீண்ட அமைதி. அவர் நினைவுகள் இங்கில்லை. விக்டருடன் கதை பேசி இருவரும் பொருத்தமான ஜிக்சோ துண்டுகளை தேடும் அந்த காட்சி அவர் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் விக்டருடன் வாழ்ந்த இனிய நினைவுகள்…..

எம்மதமும்…..
” செபாஸ்டி, உன்னட சமயம் சாதி பாக்காம படுக்க இடம் தாறன்…. ஆனா விடிய எழும்பி கோவிலடியையும் மடப்பள்ளியையும் கூட்டி பெருக்கி தண்ணி தெளிக்க வேணும் கண்டியோ?….. அதுதான் வாடக “


பேக் கிறவுண்ட் மியூசிக்
“என் கதைகளுக்கு ஒவியம் வரைந்திடும் ஆஸ்திரேலிய அன்பு நண்பர் கிரிஸ் நல்லரத்னம் அவர்களின் படைப்பு. வாழ்க்கையின் முரண் கதையின் கரு. தேர்ந்த எழுத்தாளரைப்போல் எழுதியது கண்டு நான் வியந்தது போல் நீங்களும் வியந்திட விரும்புகிறேன்.”

என் இனிய புளிய மரம்
“புளிய மரமே, புளிய மரமே எனக்கு ஒரு புளியம் பழம் போடு ” என்று மரத்தை அண்ணாந்து பார்த்து பாட்டாக சத்தம் போட்டு கேட்பார்கள்; என்ன ஆச்சரியம், சில புளியம் பழங்கள் விழும். அதே நேரம் ஒரு காக்காவோ, நார்த்தம்பிள்ளை குருவியோ ஒரு கிளையிலிருந்து பறந்து போகும். அல்லது வாலைத் தூக்கிக் கொண்டு ஒரு அணில் கத்தியபடியே கிளையில் ஓடும்.”

அரும்பு
“காதலிக்கும் பெண்கள் சாதியைப்பற்றி யெல்லாம் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அம்மா, அப்பா, ஆச்சாரம் என்றுதான் பின் வாங்கிடறாங்க. உள்ளும் புறமும் நல்லா தெரிஞ்ச ஒருத்தனை கரம் பிடிக்க தவறிடராங்க. “
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.
Follow My Blog
Get new content delivered directly to your inbox.