சிறு கதைகள்

தம்பையா பிள்ளை

வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள்  சுவாரசியமாக அப்போதைக்கு இல்லாதவை பின்நாளில்  மிக சுவாரசியமாக இருக்கும்; சில நேரங்களில் புன்முறுவலையும், வெடிச் சிரிப்பையும், நெகிழ்ச்சியையும் தரும்.

இசை

திரு.கிறிஸ்டி நல்லரத்னம் அவர்களின் படைப்பான ‘இசை’ சிறுகதை சொல்வனம் மின்னிதழில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை நாமும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க…. யோவ், பஸ்ஸை நிறுத்தய்யா!….. கவனம் சார் … மெதுவா… மெதுவா… அம்பிட்டு தூரம் இல்லீங்க…. நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பி நேரா போனா நம்ம வீடு சார்…அஞ்சாம் நம்பர் வீடுங்க ….. பக்கத்திலதான் சார் நா சொன்ன விஜயா தியேட்டர்.…

வாய்ப்பாடு

தனக்கு வராத கணக்கை ஒரு அளவுகோலாய் பாவிக்கும் ஒரு மனிதனின் கதை இது. நம் வாழ்விலும் நமக்கு சவாலான விடயங்கள் ஒரு அளவுகோலாய் மாறிவிடுவது எத்தனை உண்மை? இக்கதையின் கடைசி வரிகளை படித்ததும் வாசகன் மனதில் தோன்றும் கேள்விகள் பல: விடை பிழை என்று தெரிந்தும் ‘என்னைப்போல் ஒருவன்’ எனும் கண்டெடுத்தலின் கொண்டாட்டமா இது?, விடை தெரியாமல் தான் அனுபவித்த வேதனையில் இருந்து மீழ இது ஒரு பிராயச்சித்தமா? “ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது” என்பதின் மறு வடிவமா?

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்….

எனது மகளின் வளர்ப்பு கிளிக்கு எற்பட்ட ஒரு மனோதத்துவ தாக்கத்தை அடிப்படையாக வைத்து (உண்மை சம்பவம்) இக்கதையை புனைந்தேன். பறவைகளின் மத்தியில் நிலவும் சமுதாய அடுக்குகளை புரியவைக்கும் கதை இது.

அனாதை மரங்கள்

வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .

உன் கண்ணில் நீர் வழிந்தால்!

“வாசிப்பனுபவத்தை இன்றைய சமுதாயத்தினுள் விதைப்பதும் இன்றைய எழுத்தாளனின் கடமை. இக்கதையில் வரும் முதலாளி ஒரு “கதை சொல்லியாக” வருகிறார். இக்கதையை வாசிக்கும் வாசகன் இதில் வரும் கதைகளையும் தேடி வாசிக்க முனைந்தால் அதுவே வெற்றி என்பேன்.”

பாரம்பரியம்

“தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்.”

கண்களருகே இமையிருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை

“இந்த பாட்டிகளுக்கு பேரனோ,பேத்தியோ வந்துவிட்டால் உலகமே அவர்கள்தான்; அவர்களுக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம் என்றாகி விடுகிறது.”

வெற்றிடம்

ஒரு நீண்ட அமைதி. அவர் நினைவுகள் இங்கில்லை. விக்டருடன் கதை பேசி இருவரும் பொருத்தமான ஜிக்சோ துண்டுகளை தேடும் அந்த காட்சி அவர் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் விக்டருடன் வாழ்ந்த இனிய நினைவுகள்…..

எம்மதமும்….. 

” செபாஸ்டி, உன்னட சமயம் சாதி பாக்காம படுக்க இடம் தாறன்…. ஆனா விடிய எழும்பி கோவிலடியையும் மடப்பள்ளியையும் கூட்டி பெருக்கி தண்ணி தெளிக்க வேணும் கண்டியோ?….. அதுதான் வாடக “

Something went wrong. Please refresh the page and/or try again.


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Create a website or blog at WordPress.com

Up ↑