மெரீனா என்ற பெயர் + அட்டைப்படத்தை பார்த்ததும் (எஸ்.ஜானகி சிரித்த முகமும் கண்டு என்ற பாடலை குழந்தைகுரலில் ஒருகுழந்தை பாடி பயிற்சி செய்வதுபோன்று பாடத்தொடங்கிகொஞ்சம் கொஞ்சமாக சுருதிமாறி கடைசியில் சிரித்தமுகம் கண்டு என்பது அழுத முகம் என குழந்தை பாடுவது போன்று பாடியிருப்பார் .) நகைச்சுவை கதைஎனநினைத்து வாங்கிவிட்டேன்.
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
உண்மையான அன்பும், பாசமும், தியாக குணமும் கொண்ட மாதாவை நாமும் மறக்காமல் இருப்போம்.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
சிறுவர்களுக்கான நீதி கூறும் உலகநீதி புராணத்தில் இடம் பெற்றுள்ள இரண்டாவது வரி 'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்'என்பது. இதை விளக்கும் நீதிக்கதையைப் பார்க்கலாமா.
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
'உலகநீதி ' எனும் நீதிநூலை இயற்றியவர் உலகநாதர் என்பவர் ஆவார். பதின்மூன்று ஆசிரியப்பாக்களில் எழுபது 'வேண்டாம் ' என்று விலக்கக் கூடியவற்றை கூறுகிறார். பொருள் விளக்கிக் கூற அவசியமில்லாத, எளிதில் விளங்கிக் கொள்ளும் வகையில் இயற்றியுள்ளார். இவர்காலம் 18ஆம் நூற்றாண்டு எனவும் 16ஆம் நூற்றாண்டு எனவும் கூறுகின்றனர். ஒவ்வொரு வரியையும் ஒரு கதை மூலம் விளக்க முற்படுகிறேன்.
கண்ணுக்குத் தெரியாத மனிதன்
ஹெச் .ஜி.வெல்ஸ் தன் வீட்டினரால் பெர்ட்டி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். மூன்றுவயதிலேயே தன் அம்மாவால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டவர். ஏழாம் வயதில் காலொடிந்து மாதக்கணக்கில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலையில் அவனின் அப்பா அவருக்கு தாவரவியல், உயிரியல் , விண்வெளியியல் ஆகிய புதத்தகங்களை அறிமுகப்படுத்த பின்னாளில் இதனை குறிப்பிட்டு வாழ்வில் முக்கியமான தருணம் என்று சொல்லியிருக்கிறார்.