வாசித்தது- எங்கள் ரகுநாதன்
ஆசிரியர்- பொன்னீலன்
வாழ்க்கைவரலாற்று நூல்கள் பெரும்பாலும் கட்டுரை வடிவில் இருக்கும். பொன்னீலன் “எங்கள் ரகுநாதன்” புத்தகத்தின் பெயரிலேயே நம்மை ஈர்த்துவிடுகிறார். நாம் நமக்குப் பிடித்தவர்கள் எந்தத் துறையானாலும் அவர்களின் சாதனைகள் சாகசங்களைப் படமாக பார்த்து புத்தகமாக படித்து உடன் பணியாற்றியவர்களின் பேட்டி எனத் தேடி தேடி அறிந்துகொள்வோம்.
பொன்னீலன், ரகுநாதனைப்பற்றி தனித்தனியே தேடவேண்டிய தேவையில்லாமல் அவருடன் பழகியவர்கள் குடும்பத்தினர் என அனைவரையும் ஒன்றிணைத்து நமக்கு அவரை தெரிய வைத்துவிடுகிறார்.
ரகுநாதனின் அறையில் நூலகத்தில் இருப்பதுபோல் நாற்காலியும் மேஜையும் மட்டுமே இருக்க, முழுக்க முழுக்க அவ்வளவும் புத்தகங்களாய் நிறைந்திருக்குமாம்.
பணியாற்றிய பத்திரிக்கைகள், பதவிகள், வாங்கிய விருதுகள், மொழிபெயர்ப்புகள் அதற்கென தனிப்பதிவு போடுமளவுக்கு தோரணமாய் நீ….ண்டிருக்கிறது. மொழிபெயர்ப்பில் மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவலை மொழி பெயர்த்துள்ளார்.
ரகுநாதனி்ன் பஞ்சமும் பசியும் என்ற நாவல் செக்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு 1957 லேயே 50000
கள் விற்கப்பட்டிருக்கின்றன. அவரின் திறமைக்கான ஒருசோற்றுப் பதம்!!
புதுமைப்பித்தனுக்காக கவியரங்கம் மாணவர்களுக்கான போட்டிகள் விவாதங்கள் எனக் கொண்டாடித் தீர்த்தவர். புதுமைப்பித்தன் கதைகள் – சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் வரலாற்றியல்பூர்வமான இலக்கிய விமர்சனம் அவரின் துணிவை என்னென்பது!
சுந்தர ராமசாமி தனக்கும் ரகுநாதனுக்குமான நட்பை தனிக்கதைபோல சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
ரகுநாதனின் சகோதரி சாவித்திரி தன் அண்ணன் சிறுவயதில்சாமிக்கு படையலிட்ட 3 இலையில் ஒரு இலையை அடம்பிடித்து வாங்கிக்கொண்டது.
அதே அண்ணன் அப்பாவின் இறந்த கிழமை என்ற சடங்கிற்காக செய்த பலகாரங்களை அண்ணன் குழந்தைகளுக்கும் அக்காவின் குழந்தைகளுக்குமாக தனக்குமாக எடுத்துக் கொடுத்ததையும் அக்கா வந்து சத்தம்போட இவர்கள் சாப்பிட்டால் அப்பா மகிழ்ச்சிதான் அடைவார் எனத் தைரியமாகக் கூறியது.
இளைய மகள் மஞ்சுளா தந்தையின் இறுதிக்காலத்தில் தன்னோடு இருந்ததையும் தன்மகன் அவருடன் போட்ட சண்டைகள் பற்றியும் சொல்லியிருப்பது ஊருக்கெல்லாம் ராஜாவானாலும் பேரனுக்கு தாத்தாதானே!
தன்மணைவியிடம் சரியாக பேசியதுகூட இல்லை என்கிறார்கள். கருவில் சுமந்தவளுக்கு குழந்தையின் அசைவை வைத்தே புரிந்துகொள்ளமுடியும். கழுத்தில்(தாலி)சுமந்தவரும்இன்னொரு தாய்தான்! தனக்கு உடல்நலமில்லாத நிலையில் உயில் எழுதும்போது தனக்கு முன்பாக மணைவி போய்விட்டால் ..என்று யோசித்திருக்கிறார்.

உள்ளுணர்வு உண்மையாகிபோனது!உடைந்துபோகிறார். மனைவி உயிரோடு இருந்தபோது சொல்லியும் கேட்காது தொடர் புகைப்பாளியாக இருந்தவர். அவரின் மறைவுக்குப்பின் முழுமையாகநிறுத்திவிடுகிறார்.
புண்பட்ட மனதை ….என கலோக்கியலாகச் சொல்வார்கள் ரகுநாதன் முரணாகச் செய்து உடன்வாழ்ந்த(இருந்தஅல்ல) மனைவியை நேசித்ததை வெளிப்படுத்தியிருக்கிறார். ரகுநாதனின் கடைசி நிமிடங்களைப் படிக்கும்போது நிச்சயம் கண்கலங்கிவிடுகிறது. சிலபுத்தகங்கள் அப்பாடா முடிந்ததா என்றிருக்கும் சிலபுத்தகங்கள்ஐயோ முடியப்போகிறதே என்றிருக்கும் எங்கள் ரகுநாதன் புத்தகமும் அப்படித்தான் நவில் தொறும் நயமாக பயில்தொறும் ரகுநாதனாக சிறந்த படைப்பு. படைப்பாளியின் கர்வம் குறையாமல் அவரைப்பற்றி சொல்லுகின்ற ஒவ்வொரு உண்மையான தகவலும் இன்னும் அவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலைக் கூட்டிக்கொண்டே செல்வதை மறுக்க முடியாது.
அழகாக தொகுத்த பொன்னீலனுக்கே அந்த பெருமை உரித்தாகும்.நெற்றிக்கண் திறப்பினும் என்ற படைப்பின் செருக்கு நிறைந்த கவிப்பரம்பரையில் வந்தவர்.
ரகுநாதன் கர்வநாதன் என்று சொல்லும் அளவுக்கு கர்வகாரர். படைப்பாளிக்கு அது கம்பீரம் அது தனியழகும் கூட!!!
ரகுநாதன் நேரம் கிடைக்கிற போதெல்லாம் எழுதி அடித்து திருத்தக்கூடியவரல்ல. மாதக்கணக்கில் ஆனலும் மனதில் வைத்து உருவாக்கி பிறகு ஒரே மூச்சாக எவ்வித அடித்தல் திருத்தலின்றி எழுதும் திறமை பெற்றவர்.
ரகுநாதனைப்பற்றிய இந்த பதிவை போடுவதற்காக நாமும் அவ்வாறு முயற்சிக்கலாம் என முயன்றேன். குருவிடம்(ரகுநாதன்) சிஷ்யையாக சந்தோஷமாகத் தோற்றுப்போனேன். ஒருசின்ன முன்னேற்றம் ஒரு பதிவை எழுதி முடிக்க 2,3 நாட்களாகும். 3மணிநேரத்தில் முடித்துவிட்டேன். பூவோடு சேர்ந்ததினால்!!!?
ரசித்தது:- பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு வந்த நீதிபதி புத்தகத்தை கேட்க அதற்கு ரகுநாதனின் பதில் புத்தகம் ஓஸியில் கொடுப்பதில்லை. கவிஞர் ஒருவர் தனது கவிதைத் தொகுப்போடு எலுமிச்சம் பழத்தையும் சேர்த்து ரகுநாதனிடம் கொடுத்திருக்கிறார். அடுத்தநாள் கருத்தை தெரிந்துகொள்ள வந்தவரிடம் பழம் நன்றாயிருக்கிறது என்றிருக்கிறார். இதுபோல் இன்னும் பல இந்த புத்தகத்தில் உள்ளன.
நல்ல பதிவு, சாமி படையல் – சிறிது பின்னோக்கி சென்று வந்தேன், நினைவுகளில்.
LikeLike
நன்றிகள்
LikeLike