தமிழர்கள் எல்லா துறைகளிலும் அபரிமிதமான அறிவோடு இருந்திருக்கிறார்கள். அவ்வாறே தேர்ந்த பொறியியல் நுட்பத்தோடு கட்டடக் கலையிலும் பிரம்மாண்டங்களை நிர்மானித் திருக்கிறார்கள். அவற்றை யெல்லாம் அறிகிற போது நாமும் தமிழன் என்றஎண்ணம் எழுந்து நம்மை இரும்பூது கொள்ளச் செய்கிறது. தமிழர் கட்டட விந்தை பகுதி 3 இல் சற்றே சிலவற்றைக் காண்போம்.
கல்லணை (Grand Anai kat)

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டினான். கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் ஒருவித ஒட்டும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.
பிரிட்டிஷ் பாசனப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன்அணைக் கட்டின் அடித்தளத்தில் 12 அடி ஆழம் வரை குழி தோண்டிப் பார்த்திருக்கிறார். அணையின் ரகசியம் அங்கு அவருக்கு தெரிந்திருக்கிறது. அணை கட்டின் 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டு இருக்கிறது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அவர் கல்லணையை ‘மகத்தான அணை’ என குறிப்பிட்டு இருக்கிறார்.
மாமல்லபுரம் (Mamallapuram Cave Temples)

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் நரசிம்ம பல்லவ மன்னனால் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.
அங்கோர்வாட் கோயில் (Angorwat Temple)

உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது. திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்
கடல் நடுவே ராமேசுவரம் (Rameswaram Temple)

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது. 1212 எ பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற்கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பது வியப்பை தருகிறது.
தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில் (Tanjore Big Temple)

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.
பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.நன்றி: இரா.சுந்தரமூர்த்தி (தெரிந்துகொள்வோம்)
தாமிரபரணி சங்குகல் மண்டபம் (Thamiraparani Sangu kal Mandapam)

ஆற்றின் நடுவே மண்டபங்கள் கட்டியது ஏன்? தமிழனின் அறிவியல் அறிவை உணர்த்தும் பதிவு…!
இன்றைக்கு விஞ்ஞானம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து விட்டது. சுனாமியையும், புயலையும் முன்கூட்டி கணிக்கும் தொழில்நுட்பம் எல்லாம் இன்று வந்து விட்டது. ஆனால் நம் முன்னோர்கள் கூட இதையெல்லாம் அறிவியல் பூர்வமாக கணித்து இருந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதற்கு தாமிரபரணி ஆற்றின் மண்டபமே சாட்சி! தாமிரபரணி ஆற்றின் மையப் பகுதியில் இந்த சங்குகல் மண்டபம் கம்பீரமாக இருக்கும். மூன்று பக்கமும் திறந்த வெளியில், தண்ணீர் வரும் எதிர்திசையில் மட்டும் கல்வைத்து அடைக்கப்பட்டு இருக்கும். அதன் உச்சியில் கோபுரம் போன்ற அமைப்பில் சங்கு போல் தோற்றம் அளிக்கும். அதனாலேயே இதற்கு சங்குகல் மண்டபம் எனப் பெயர் வந்தது.
ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் மட்டம் உயரும் போது, அதில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் உயர்ந்தால் வெள்ளத்தின் அழுத்தத்தால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு சப்தம் எழுப்பும். இது சுற்றுவட்டார மக்களுக்கான எச்சரிக்கை. இதனை குறிப்பால் உணர்ந்து ஆற்றை சுற்றி உள்ள மக்கள் உயரமான இடங்களுக்கு சென்று விடுவார்கள். அதேபோல் த்ண்ணீர் மிக அதிகமானால் இந்த சங்கு அமைப்பையே மூழ்கடித்து விடும். இது உச்சபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் தண்ணீர் கொஞ்சம் வடிந்ததும் மீண்டும் சப்தம் கேட்கும்.
அந்த சப்தம் தண்ணீர் குறைய, குறைய குறையும். இன்று இந்த சங்கு கல் மண்டபங்கள் பல கவனிப்பும், பராமரிப்பும் இன்றி காட்சிப் பொருளாக கிடக்கிறது. இதன் பலன் இன்றைய தலைமுறைக்கு தெரியவே இல்லை. ஆயிரம் சொன்னாலும் நம் தமிழனின் பாரம்பர்யத்தை ஆற்றின் குறுக்கே இருக்கும் இந்த மண்டபங்கள் உணர்த்திக் கொண்டு தான் இருக்கின்றன.
Leave a Reply