நல்லேர் கட்டுதல்

இந்த ஆண்டு காவிரியில் தாமதமின்றி தண்ணீர் திறப்பு. குருவை சாகுபடிக்கு எட்டாண்டுகளுக்குப் பின்னர் விவசாயிகள் தீவிரம்.
வழக்கமாக வைகாசி மாதம் நிமித்தகர் அல்லது சோதிடர் மூலம் நல்லநாள் பார்ப்பார்கள். அந்த நல்லநாளில் நல்லேர் கட்டுவார்கள். பாரம்பரியமாக ஊரின் குறிப்பிட்ட நிலத்தில்தான் எப்போதும் நல்லேர் கட்டுவார்கள். குறிப்பிட்ட நல்ல நாளில், நல்ல நேரத்தில் ஊரில் உள்ள ஏர்கலப்பையில காளை எல்லாம் பூட்டி தயாராக இருக்கும். வாழை இலையில் பிள்ளையார் பிடித்து வைத்து காப்பரிசி,மஞ்சள்,
குங்குமம்,பழம்,பூ,
வெற்றிலை பாக்கு முதலியவற்றை வைத்து கற்பூரம் காட்டி சூரிய பூசை நடத்திடுவார்கள். பின் வரிசையாக காளை பூட்டிய எல்லா ஏர்களும் வரிசையில் ஒனறன்பின் ஒன்றாக உழுது கொண்டே செல்லும்.
நிலத்தின் ஒரு மூலையில் சிறு பகுதியில் நெல் தெளித்து மேலே தண்ணீர் தெளித்து வருவார்கள்.
அதன் பின்னர் விவசாயிகள் அவரவர்க்கு வசதியான நாட்களில் தத்தம் நாற்றங்கால் நிலத்தில் உழுது விதை நெல் தெளிப்பார்கள்.
காவிரி நீர் வாய்க்கால் வழியே வயலில் பாய்ந்து உழுது தயாராகவும், நாற்று வளர்ந்து நடவுக்கு தயாராகவும் சரியாக இருக்கும்.

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑