"அடுத்த நாள் கட்டட தொழிலாளிகள் ஒருவருக்குப் பதில் ஐந்து பேர் காணவில்லை. எல்லாரும் கட்டடம் அருகிலேயே ஷெட் அடித்து தங்கி இருந்தார்கள்; "
ஆகாயப் பூக்கள்
"மகிழ்ச்சியோ,துக்கமோ இரண்டும் வெளிப்படும் போது இந்த கண்ணீர் வருகிறதே அது எப்படி வேறுபட்ட உணர்வுக்கு ஒரே மெய்ப்பாடு."
காவல் தெய்வங்கள்
'நாங்க எல்லாரும் வெயிலுகந்தவங்க. கட்டடம் கட்டி எங்கள ஒங்ககிட்ட இருந்து பிரிச்சு தனிமையாக்கிடாதீங்க. எங்களுக்கு தனி பூசாரியும் வைக்கக் கூடாது; அவுங்க அவுங்களேதான் பூசை செஞ்சுக்கனும்'
சந்தோசம்
"அந்த நேரத்தில் குப்பை சேகரிப்பவரிடம் குப்பைகளை போட்டுவிட்டு வந்த தம்பி இந்த உரையாடல்களைக் கேட்டு தயங்கியபடி வந்தான்."
இருள் குகை சாமி
"மணி பதினொன்றைத் தொட்டது; இருள்குகையிலிருந்து பூசை மணியோசை கேட்டது; சாம்பிராணியுடன் வேறுசில பச்சிலை போன்றவற்றையும் சேர்த்து புகைத்தார்கள். புகையும், நறுமணமும் மயக்கத்தைக் கொடுத்தது."
அவள் மனம்
"அம்மா அப்பா இல்லாத என்னை ஒரு மாமி(aunty) அனாதைன்னு திட்டினாங்க. அப்ப குழந்தை இல்லாத அம்மா அப்பாவை என்னான்னு சொல்றது". குழந்தை குமுதாவின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது."
காவலன்
"பானு இடத்தில் நிலா உட்கார்ந்து புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தாள். மூன்று பேர் தள்ளாடியபடி வந்தார்கள்."
பொது
'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல் இவர்கள் எல்லாமும் எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினார்கள்'
மயில் தீவு
"வரும்படி வரவேண்டும் என்பதற்காக பிணத்தை எதிர்பார்த்திருக்கும் சுடுகாட்டு வேலையாளுக்கும் தனக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றெண்ணினான்."
குற்றால அருவி
"இவர்கள் ஒருவர்மேல் ஒருவர் காட்டிடும் பாசம் எந்த உவமையிலும் அடங்காது. மொழியில்லாமல் பறவைகளும் விலங்குகளுமே அன்பு பாசம் காட்டிடும் போது இவர்கள் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்திக் கொள்வதில் வியப்பேது."
காதல் அழிவதில்லை(கானல்)
"என்னதான் அவள் பேரழகியாக இருந்தாலும், பிறவி நடிகையாக இருந்தாலும், லட்சோப லட்சம் ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், அவள் மனம் என்கிற மந்தி அந்த நடிகனின் மீதே தாவத்துடித்தது.."
உதவிக்கு கூலியா
"மாமா சொன்னதுல தப்பில்லை என்றே கருதினார்கள். எதுவானாலும் உழைச்சி திங்கனும்; ஓசியில திங்க ஆசைப்படக் கூடாது. இது இந்த ஜென்மத்துல மறக்காது"
கிடா
"யோவ் என்னா பேசுற? வாயக்கழுவு. சீக்கு வந்து போனா வீட்டு தோட்டத்துல பொதைச்சி, மண்டபம் கட்டுவேன்"
ராஜ ஜாதகக்காரன்
" தங்கராஜு இது ஒனக்கான உத்தரவு; அதான் ஒன்ன தனியா கூப்புட்டு சொல்றேன்; மொத்த புதையலும் ஒனக்குத்தான், உன் கவலையெல்லாம் இனிமே தீர்ந்திடுச்சு" .
பொருத்தம்
"எனக் கென்னமோ உன் கல்யாணம் சொர்கத்துல நிச்சயிக்கப் படுறதுக்கு பதிலா அந்த ஜோதிடர் வீட்டில நிச்சயமாகுதுன்னு தோனுது"
வரைவிடை வைத்து
"தமிழர் வாழ்வியலில் 'வரைவிடை வைத்து பொருள் வயிற் பிரிதல்' என்பது தலைவன் திருமணத்திற்கு முன் பொருள் தேடிச் செல்வது. அதன் உள்ளடக்கம் ஒரு கதையாகப் புனைந்திருக்கிறேன்"
உயிர் நீர் ஊற்று
கிணற்றில் மெல்ல எட்டிப் பார்த்தால் வாளி எங்கிருக்கிறதென்பதே தெரியாது; அவ்வளவு ஆழம். குடிகார, நோயாளி குடும்பத் தலைவர்களைக் கொண்ட குடும்பம் ஒருவேளையாவது சாப்பிட்டது என்றால் இதில் ஊறிய உயிர் நீரால்தான்.
புதிய பாரி
"தம்பிகளா, ஆண்கள் மட்டுமே சமுதாயம் இல்லை; அது போல மரங்கள் மட்டுமே காடு இல்லை; இந்த செடி, கொடிகள், இங்கு வாழும் ஜீவராசிகள் எல்லாமும் சேர்ந்ததுதான் காடு"
அதிசய மரம்
" ஏ.. செம்பூ மரமே, புராணக் கதைகளில் வரும் பேசும் மரமாக நீ இருக்கக் கூடாதா? அப்படி இருந்தால் உன்னோடு மனம் விட்டு பேசிக் கொண்டிருப்பேனே" "இப்போது மட்டும் என்னவாம் தேவி, நீங்கள் பேசலாம்"
தீபாவளி மந்திரம்
"வெளியில் ஸ்ரீமதி பாட்டியின் மடியில் அமர்ந்து தன் ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தாள். தாத்தாவோ அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்தார்."
பலே காவல்
"பாலத்தின் பக்கவாட்டில் படுத்து தூங்கும் ஊர்க்காரர்களுடன் ராமனின் ஆட்கள் போய் படுத்துக் கொண்டார்கள்."
அனுபவம் புதுமை
பெண்ணின் அழுகுரல் நின்றது; ஆர்ப்பரிக்கும் ஆணின் சிரிப்பொலி கேட்டது. சசிக்கு வாய் உலர்ந்து உதடு ஒட்டிக் கொண்டு பேச வரவில்லை.
நோன்பு
"நல்லவிதமாகவன்றி வேறு விதமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்று அசோசியேசனில் அன்று இரவு காலிங்பெல் அடித்துப் பார்த்து விடுவதென்று ஒரு முடிவுக்கு வந்தார்கள்"
சாணமாவு
பள்ளியிலிருந்து திரும்பியவன் போல பை மாட்டிய சிறுவன் ஒருவன் வந்தான். கொலைகார்களைத் தெரியும் என்றான். எல்லாரும் காக்கி நிறத்தில் யூனிபாரம் அணிந்திருந்தார்கள் என்றான்.