அவனை எழுப்பாதீர்; அமைதியாய் தூங்கட்டும்! ஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்.
ஓவியர் ‘செள’ – ஒரு படைப்பாளியின் கதை!
ஒரு சஞ்சிகைக்கு ஓவியம் வரைபவனின் சவால்களை சித்தரிக்கும் சுவாரசியமான கட்டுரை. ரசித்து எழுதியது.
அலஸ்காவை தந்து விடு!!
ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் அலஸ்கா மாநிலத்தை அமெரிக்கா மீழத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். https://sofrep.com/news/russian-lawmaker-oleg-matveychev-demands-alaska-and-california-fort-as-reparations-for-sanctions/ இதை அடிப்படையாக வைத்து அலஸ்கா பற்றிய ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளேன்.
யார் இந்த பேங்க்ஸி?
உலகின் பிரபல தெருக்கிறுக்கல் கலைஞர் பேங்க்ஸி (Banksy) பற்றி ஒரு கட்டுரை. தெருக் கிறுக்கல்களை கண்டு நாம் முகம் சுளிப்பது சகஜமே. ஆனால் இவர் இக் கலையை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியிருக்கிறார் என்பது உண்மையே. தெருக் கிறுக்கலை புனிதப்படுத்த முயலாமல் உண்மைகளை தொகுத்து எழுதிய கட்டுரை இது.
உயிர்த்தெழும் உயிரினம்!
இவ்வுலகைவிட்டு மறைந்துபோன உயிரினங்களை மீண்டும் விஞ்ஞானத்தின் உதவியுடன் மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது ஒரு உற்சாகமான செய்தி!
கணினியும் கதையெழுதும்!
உலகெங்கும் விஞ்ஞான வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது. விஞ்ஞான வாரத்தை ஒட்டி இக்கட்டுரையை இன்று எழுதினேன். விஞ்ஞானமும் கற்பனையும் சந்திக்கு மையம் பற்றிய கட்டுரை.
நிழலின் நாயகன் : சத்யஜித் ரே
திரையுலக மாமேதை சத்தியஜித் ரேயின் நூறாவது பிறந்த நாளை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் வாழ்ந்த சமகாலத்தில் நாமும் வாழந்தோம் என்ற பெருமையுடன் அவர் படைப்புகளை நுகர்வோம்!
நண்டுகளுக்கும் ஒரு மேம்பாலம்!
செந்நிற நண்டுகளின் வாழ்க்கை வட்டம் விசித்திரமானது..... மர்மங்கள் நிறைந்தது. அவற்றை கடலை நோக்கி நடக்க உந்தும் சக்தி என்ன? திசை காட்டுவது யார்? பிறந்த குஞ்சுகள் காடு நோக்கி பயணிப்பது எப்படி? எப்போது உயர் அலைகள் வரும் என அறிந்ததெப்படி?
அங்கும் இங்கும்
விண்ணையும் மண்ணையும் தொட்டுச்செல்லும் கட்டுரைத் தொடர். இத்தொடர் விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை நிச்சயம் கவர்ந்திடும். இதில் "அங்கு" என்ற தலைப்பில் விண்வெளி / விஞ்ஞானம் சம்மந்தமான நிகழ்வுகளையும் "இங்கு" எனும் தலைப்பின் கீழ் சமகாலத்தில் நிகழும் கலை, இலக்கிய விடயங்களை எழுதுவதே இவரது எண்ணம்.
தேனி மலை மாடுகள்
"தன் தேவையைக்கூட கேட்கமுடியாத வாயில்லா உயிர்களுக்கு நாம்தான் வாயாக இருந்து அவற்றின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அனைவர்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்."
எங்க நாட்டிலே – நான்காம் (இறுதி) பாகம்
ஆஸ்திரேலியாவில் ஒரு ஊழியர் வேலையில் இருந்து இளைப்பாற வயதெல்லை கிடையாது என்றால் நம்புவீர்களா? எழுபது வயதை தாண்டிய பலர் கூட இங்கு வேலைக்கு செல்வது சகஜம்.
எங்க நாட்டிலே!(மூன்றாம் பாகம்)
ஸ்டீப் எர்வின் ஒரு ‘முதலை ஜல்லிக்கட்டு’ வீரன்! எந்தப் பெரிய முதலையையும் அதன் முதுகில் பாய்ந்து ஏறி அடக்கி கட்டிப் போட்டு விடுவார்
ஆஸ்திரேலியா: தேசம் வளர்ந்த கதை! பகுதி 2
ஒரு நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்வதன் மூலம் அந்நாட்டின் நிகழ்கால பாரம்பரியம், அரசியல், கலாச்சாரம் மற்றும் அதன் சமூக மாற்றங்கள் எப்படி அதன் எதிர்கால சந்ததியை வழிநடத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
ஆஸ்திரேலியா: தேசம் பிறந்த கதை! – பகுதி-1
"ஆஸ்திரேலியா தேசம் பிறந்த கதை.. கல்கியில் வெளியான என் முதல் கட்டுரை.. இது முதல் பாகம்.. இன்னும் 3 பாகங்கள் உள்ளன அனைத்தையும் படியுங்கள் ஆஸ்திரேலியாவை அறிந்திடுங்கள்."
பத்மஸ்ரீ பழ வியாபாரி(Harekala Hajabba)
'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'
தரங்கம்பாடி கோட்டை(Fort Dansborg)
"டேனிஷ்காரர்களின் இரண்டாவது பெரிய கோட்டை இதுவேயாகும். முதலாவது கோட்டை ' ஹேம்லெட் ' நாடகம் எழுத ஷேக்ஸ்பியருக்கு ஊக்கமளித்த 'க்ரோன்போர்க்' கோட்டையாகும்.
சதுரங்கப் பட்டினம்(Sadras)
"கல்லறைகளின் வெளிப்புறம் உள்ள அறைகளில் ஒன்றின் தரையில் 'ஆடு-புலி ஆட்டம்' என்ற பெயருடன் செதுக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களடமிருந்து டச்சுக்காரர்கள் விரும்பி கற்றுக் கொண்ட ஆட்டம்."
காமிக்ஸ் பிறந்த கதை
"காதல், திதில், மர்மம், நையாண்டி நிறைந்த கதைகளை உள்ளடக்கிய காமிக்ஸ்கள் வெளிவந்து நிரம்பத்தொடங்கின. இவற்றிற்கு பலத்த வரவேற்பும் இருந்தது. அப்போது வால்ட் டிஸ்னி வேறு தன் படைப்புக்களான மிக்கி மவுஸ், மினி மவுஸ் போன்ற கதாபாத்திரங்கள் அடங்கிய காமிக்ஸ்களை வெளியிட்டு லாபம் தேடிக்கொண்டார். "
இமயம் தொடும் ஷெர்ப்பாணிகள்!
"ஷெர்ப்பாக்களுக்கு அவர்களின் உடல் கட்டமைப்பு இயற்கை யாகவே ஆக்ஸிஜன் கம்மியான சூழலில் வாழ திரிபடைந்துள்ளது. ஒரு சாதாரண மனிதனின் இரத்தத்தில் உள்ள செங்குருதி அணுக்களின் எண்ணிக்கையையும் விட ஷெர்ப்பாக்களின் குருதியில் இவை குறைவாகவே காணப்படும்."
குவாட் (QUAD)எனும் சதுரங்க விளையாட்டு!
"சர்வதேச அரசியலில் சதுரங்கக் காய்களாய் நகர்த்தப்படும் முன்னெடுப்புகள் மனித மேம்பாட்டிற்கு உதவுமேயானால் அதை வரவேற்பது எம் கடமையே!"
ஆட்டுக்கல் மழைமானி Ancient Tamil ‘Rain Gauge’
"ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது.."
வீரத் தமிழச்சி 2 (BRAVE TAMIL WOMEN) – தீரமிகு தில்லையாடி வள்ளியம்மை
"சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா.? என்றார் ஆங்கிலேய அதிகாரி, உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை ‘இதுதான் எங்கள் தேசியக் கொடி’ என்றார்.."
மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!( Titanic Once Again)
"டைட்டானிக் கப்பல் மூழ்கி 109 ஆண்டுகளாகி விட்டன. ஆனால் அண்மை நாட்களில் மீண்டும் இதைப் போல் ஒரு மாதிரி கப்பலை கட்டும் முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத மையச் செய்தியாக வைத்து நான் இக்கட்டுரையை எழுதியுள்னேன்."
குமிழித் தூம்பு
"தமிழ்நாடு அரசு இத்தகைய குமிழித் தூம்புகளை வரலாற்றுச் சின்னங்களாக அறிவித்துக் காப்பாற்ற வேண்டும். இதைக் காப்பது நமது கடமையாகும். "
திகில் நாயகன் நைட் ஷியாமளன்!
எம் கதைகளின் ஓவியர் கிரிஸ் நல்லரத்னம், மெல்போன்,ஆஸ்திரேலியா அவர்களின் சிலிர்க்கும் கட்டுரை.
ஆதித்த கரிகாலன் மரண மர்மம்.(Chola Dynasty Prince Adhiththa Karikalan’s Mysterious Murder)
"விண்ணுலகு செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் , கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளை போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகும்படி குடிமக்கள் வேண்டினர். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதால் அவன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருள்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்..."
தீவுக்கோட்டை (DEVI COTTAH )
"இன்று மனித நடமாட்டமே இல்லாத ஊர் ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்தது என்பதறிய வியப்பாக உள்ளது..."
தமிழர் கட்டட விந்தை – 3 (TAMIL ARCHITECTURE)
"தமிழர்கள் எல்லா துறைகளிலும் அபரிமிதமான அறிவோடு இருந்திருக்கிறார்கள். அவ்வாறே தேர்ந்த பொறியியல் நுட்பத்தோடு கட்டடக் கலையிலும் பிரம்மாண்டங்களை நிர்மானித் திருக்கிறார்கள். அவற்றை யெல்லாம் அறிகிற போது நாமும் தமிழன் என்றஎண்ணம் எழுந்து நம்மை இரும்பூது கொள்ளச் செய்கிறது. தமிர் கட்டட விந்தை பகுதி 3 இல் சற்றே சிலவற்றைக் காண்போம்."
தமிழக நாட்டுப் புறக்கலைகள்4(TAMIL TRADITIONAL FOLK ARTS) – பகுதி…4
"துர்க்கையை கொல்ல அவளின் எதிரிகளானவர்கள் கொடிய விஷமிகு பாம்பாகவும், தேளாகவும் உருமாறி வந்த போது, அவர்களை அழிக்க தன் கால்களில் மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடியதாகவும், அந்த கணமான கட்டையினால் தாக்கப்பட்டு அந்த நச்சு உயிர்கள் உயிர் இழந்ததாகவும் புராண கதைகள் வழங்கப்படுகின்றன. "
சங்க கால மகளிர் தொழில் முனைவோர்
"பழந்தமிழக மகளிர் தொழில் முனைவோர் தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்து சுற்றத்தைக் காத்ததோடு , சமூகப் பொருளாதாரத்தை காப்பதிலும் முக்கியப் பங்காற்றியமை தெளிவு."
நிழலின் நாயகன் : சத்யஜித் ரே
"தன் மனைவியின் நகையும் நண்பர்களின் கடனையும் மூலதனமாக்கி ஆரம்பித்த படத்தை தொடர்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனிலும் சில அரசியல் பிரமுகர்களாலும், ரேயின் விடா முயற்சியாலும் “பதேர் பாஞ்சாலி” 1955ல் திரையில் வந்து விழுந்தாள். "
சங்கத்-தமிழர்-உணவு-பகுதி-4
"நண்பர் அரசு, தமிழ் பேராசிரியர் கொடுத்த ஊக்கத்தாலும் , உள்ளுக்குள் தோன்றிய உந்துதலாலும் இயன்றவரை இயம்பி விட்டேன். இதுவே தமிழ் கற்றறிந்தவர் எனில் இன்னும் சிறப்பாக படைத்திருப்பார். எப்படி இருப்பினும் என்பால் அன்பு கொண்ட நல் உள்ளங்கள் தந்த ஊக்கமும், எழுதிய பின்னூட்டமும் எனக்கு மகிழ்வை தந்தது என்பது உண்மை.. மீண்டும் தமிழர் பெருமை பேசும் செய்தி ஒன்றுடன் செய்திச் சாரலில் சந்திப்போம் ; வணக்கம்."
சங்கத்-தமிழர்-உணவு-பகுதி-3
"வெளி நாட்டு ரசாயன உற்பத்தியாளர்களின் சதியை முறியடித்து நாம்தான் அவற்றை வாங்கி உண்டு நலம் பெற்றிட வேண்டும் "
சங்கத் தமிழர் உணவு ( பகுதி 2)
"காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது."
சங்கத் தமிழர் உணவு ( பகுதி 1)
"எந்த பெரிய மருத்துவமனைகளும், மருத்துவர்களும்,மருந்துகளும், பரிசோதைக் கூடங்களும் இல்லாத அக்காலத்தில் தமிழர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அவர்கள் உண்ட உணவே காரணமாகும்."
சங்க இலக்கியத்தில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE- பகுதி 4
"சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பகுதி 3.(23.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 4 இப்பொழுது பதிவிடப்படுகிறது. இத்துடன் குறிஞ்சி பாட்டில் உள்ள 99 மலர்களையும் கண்டுவிட்டோம்."
தமிழக நாட்டுப் புறக்கலைகள்3 TAMIL TRADITIONAL FOLK ARTS பகுதி…3
"இத்தலைப்பில் கும்மியாட்டம், ஒயிலாட்டம்,பறையாட்டம் பற்றி பேசியுள்ளோம். இப்போது சேவையாட்டம் பற்றி பேசுவோம். ஒன்று மட்டும் உறுதி.; கலைமகளே இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறாளாம்."
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …3 ( 25 மலர்கள்)
சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 3 இன்று பதிவிடப்படுகிறது. அன்பர்கள் சுவைத்து இன்புறுக.
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …2 ( 25 மலர்கள்)
"சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்களை முதலில் பார்ப்போம். தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்து விளையாடினார்களாம்."
சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE : பகுதி …1 ( 25 மலர்கள்)
சங்க இலக்கிய மலர்களில் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்களை முதலில் பார்ப்போம். தலைவியும் தோழியும் இம்மலர்களைக் குவித்து விளையாடினார்களாம்.
தமிழக நாட்டுப் புறக் கலைகள்2 TAMIL TRADITIONAL FOLK ARTS: பறை ஆட்டம்
சிம்பு குச்சி 'த' என்றும் அடிக்குச்சி 'கு' என்றும் ஒலிக்கும். இந்த 'த'வும்'கு' வும் வெவ்வேறாக சேர்ந்து சொற்கட்டுகளை உருவாக்குகிறது. 'கட்ட வண்டி' என்ற ஒரு சினிமா பாடலில் "தய்....த த கு... த த கு..த த கு..த த கு...த த த" என்ற சொற்கட்டை கேட்கலாம்
தமிழக நாட்டுப் புறக் கலைகள் 1 TAMIL TRADITIONAL FOLK ARTS
கலைகள் மக்களின் உணர்ச்சியை வெளிக்காட்டப் பிறந்தன. அவை பாடல்களாகவும் ஆடல்களாகவும் விளங்கின. ஆட்டங்கள் ஏராளமாக உள்ளன. தேடத் தேட நிறைய கிடைக்கின்றன; கிடைத்த சில இதோ...
வீரத் தமிழச்சி BRAVE TAMIL WOMEN – பகுதி 1: வீரமிகு குயிலி
வீராங்கனைகள் ஆடைக்குள் ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு கோட்டைக்குள் சாமி கும்பிடப் போவது போல நுழைந்தார்கள். குயிலி வெற்றிக்கான திட்டத்தை தீட்டினார். பெண்களெல்லாரும் வழிபடவே வந்திருப்பதாக எண்ணி கவனக்குறைவாக ஆங்கிலேயர் இருந்து விட்டனர்.
தமிழக நாட்டு மாடுகள் TAMIL NATIVE CATTLE BREEDS
வெளிநாட்டு இன மாடுகளுக்கு நோய் சிகிச்சை, தீவணம், பராமரிப்பு என அதிக செலவு பிடிக்கும். உள்நாட்டு இன மாடுகளுக்கு இத்தனை செலவில்லை. உள்நாட்டு இன மாடுகள் வாலினால் கொசுக்களை விரட்டி நோயிலிருந்து காத்துக் கொள்ளும். மடி நோய்கள் வெளிநாட்டு மாடுகளைத்தான் தாக்கும்.
தமிழர் கட்டட விந்தை TAMIL ARCHITECTURE (பகுதி 2) “கோவில்களின் இசைத்தூண்கள்”
இசைத்தூண்கள் - முற்காலத்தில் பூசை நேரத்தில் இசையெழுப்ப பயன்பட்டன. சில தட்டும்போது இசையெழுப்பும்; சில ஊதினால் இசை யெழுப்பும்.
அறுவடை(Harvest)
ஒரு கொத்து நெற்கதிரை வீட்டின் நிலைக்கு கொஞ்சம் மேலே இருக்கும்படி சாணத்தை வைத்து சுவற்றில் ஒட்டி வைப்பார்கள். இதை குருவிகள் வந்து கொத்தித் திண்ணும்.
தமிழக நாட்டு நாய்கள் TAMIL NATIVE DOG BREEDS
இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாடிக் கொல்லும் ஆற்றல் கொண்டவையாகும். இதன் தூரத்து உறவினரான கோம்பை அதே வீரமும், போர்க்குணமும் கொண்டது. நாட்டு நாய்களின் சிறப்பம்சம் அவை நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயை அறிந்து கொண்டால் மணித நடமாட்டமில்லாத இடம் சென்று உயிர்விடும் என்பதே.
தமிழர் கட்டட விந்தை Tamil Architecture (தொடர்) – பகுதி 1
தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அநேக கோவில்களை எழுப்பி, அதன் வழி எண்ணற்ற அறப்பணிகளை ஆற்றி வந்தார்கள். கோயில்கள் தமிழருடைய கட்டடக்கலையின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்தன. பிரசித்தி பெற்ற கோயில்களைத்தான் நாமறிவோம். அதிகம் பேசப்படாத கோயில்களின் கட்டடக் கலையின் சிறப்பை இயன்றவரை பகிர்ந்திட முனைகிறேன்.
இரண்டாம் பென்னி குயிக்
'ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்'னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.
கிராமிய விழாக்கள் – பகுதி 2 : பாரதக் கதை
திண்பன்டமாக முறுக்கு, கடலை மிட்டாய், வறுத்த சோளம், பயறு, பொரியரிசி, பட்டாணி, உப்புக்கடலை, நிலக்கடலை இன்னும் பல உண்டு. உட்கார்ந்திருப்பவர்கள் நேரம் செல்லச் செல்ல சாய்ந்து உட்கார்ந்து, சரிந்து படுத்து, தூங்கி விடுவார்கள்.