வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் சுவாரசியமாக அப்போதைக்கு இல்லாதவை பின்நாளில் மிக சுவாரசியமாக இருக்கும்; சில நேரங்களில் புன்முறுவலையும், வெடிச் சிரிப்பையும், நெகிழ்ச்சியையும் தரும்.
இசை
திரு.கிறிஸ்டி நல்லரத்னம் அவர்களின் படைப்பான 'இசை' சிறுகதை சொல்வனம் மின்னிதழில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை நாமும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். https://www.youtube.com/watch?v=2Kh5gXwd7Jw இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க…. யோவ், பஸ்ஸை நிறுத்தய்யா!….. கவனம் சார் … மெதுவா… மெதுவா… அம்பிட்டு தூரம் இல்லீங்க…. நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பி நேரா போனா நம்ம வீடு சார்…அஞ்சாம் நம்பர் வீடுங்க ….. பக்கத்திலதான் சார் நா சொன்ன விஜயா... Continue Reading →
வாய்ப்பாடு
தனக்கு வராத கணக்கை ஒரு அளவுகோலாய் பாவிக்கும் ஒரு மனிதனின் கதை இது. நம் வாழ்விலும் நமக்கு சவாலான விடயங்கள் ஒரு அளவுகோலாய் மாறிவிடுவது எத்தனை உண்மை? இக்கதையின் கடைசி வரிகளை படித்ததும் வாசகன் மனதில் தோன்றும் கேள்விகள் பல: விடை பிழை என்று தெரிந்தும் 'என்னைப்போல் ஒருவன்' எனும் கண்டெடுத்தலின் கொண்டாட்டமா இது?, விடை தெரியாமல் தான் அனுபவித்த வேதனையில் இருந்து மீழ இது ஒரு பிராயச்சித்தமா? "ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்பதின் மறு வடிவமா?
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்….
எனது மகளின் வளர்ப்பு கிளிக்கு எற்பட்ட ஒரு மனோதத்துவ தாக்கத்தை அடிப்படையாக வைத்து (உண்மை சம்பவம்) இக்கதையை புனைந்தேன். பறவைகளின் மத்தியில் நிலவும் சமுதாய அடுக்குகளை புரியவைக்கும் கதை இது.
அனாதை மரங்கள்
வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .
உன் கண்ணில் நீர் வழிந்தால்!
"வாசிப்பனுபவத்தை இன்றைய சமுதாயத்தினுள் விதைப்பதும் இன்றைய எழுத்தாளனின் கடமை. இக்கதையில் வரும் முதலாளி ஒரு "கதை சொல்லியாக" வருகிறார். இக்கதையை வாசிக்கும் வாசகன் இதில் வரும் கதைகளையும் தேடி வாசிக்க முனைந்தால் அதுவே வெற்றி என்பேன்."
பாரம்பரியம்
"தாய் தந்தையை பார்த்து பிள்ளைகள் கற்றுக் கொள்வதோடு மரபுவழி குணங்களும் சேர்ந்து கொள்ளும்.இதுவே குடும்ப பாரம்பரியம் என்பார்கள்."
கண்களருகே இமையிருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை
"இந்த பாட்டிகளுக்கு பேரனோ,பேத்தியோ வந்துவிட்டால் உலகமே அவர்கள்தான்; அவர்களுக்கு பிறகுதான் மற்றவர்களெல்லாம் என்றாகி விடுகிறது."
வெற்றிடம்
ஒரு நீண்ட அமைதி. அவர் நினைவுகள் இங்கில்லை. விக்டருடன் கதை பேசி இருவரும் பொருத்தமான ஜிக்சோ துண்டுகளை தேடும் அந்த காட்சி அவர் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் விக்டருடன் வாழ்ந்த இனிய நினைவுகள்.....
எம்மதமும்…..
" செபாஸ்டி, உன்னட சமயம் சாதி பாக்காம படுக்க இடம் தாறன்.... ஆனா விடிய எழும்பி கோவிலடியையும் மடப்பள்ளியையும் கூட்டி பெருக்கி தண்ணி தெளிக்க வேணும் கண்டியோ?..... அதுதான் வாடக “
அவிழாப் புதிர்!
"ஒரு பெண்ணின் பார்வையில் அவள் அனுபவிக்கும் சுக துக்கங்களை சித்தரிக்கும் கதை."
பேக் கிறவுண்ட் மியூசிக்
"என் கதைகளுக்கு ஒவியம் வரைந்திடும் ஆஸ்திரேலிய அன்பு நண்பர் கிரிஸ் நல்லரத்னம் அவர்களின் படைப்பு. வாழ்க்கையின் முரண் கதையின் கரு. தேர்ந்த எழுத்தாளரைப்போல் எழுதியது கண்டு நான் வியந்தது போல் நீங்களும் வியந்திட விரும்புகிறேன்."
என் இனிய புளிய மரம்
"புளிய மரமே, புளிய மரமே எனக்கு ஒரு புளியம் பழம் போடு " என்று மரத்தை அண்ணாந்து பார்த்து பாட்டாக சத்தம் போட்டு கேட்பார்கள்; என்ன ஆச்சரியம், சில புளியம் பழங்கள் விழும். அதே நேரம் ஒரு காக்காவோ, நார்த்தம்பிள்ளை குருவியோ ஒரு கிளையிலிருந்து பறந்து போகும். அல்லது வாலைத் தூக்கிக் கொண்டு ஒரு அணில் கத்தியபடியே கிளையில் ஓடும்."
அரும்பு
"காதலிக்கும் பெண்கள் சாதியைப்பற்றி யெல்லாம் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அம்மா, அப்பா, ஆச்சாரம் என்றுதான் பின் வாங்கிடறாங்க. உள்ளும் புறமும் நல்லா தெரிஞ்ச ஒருத்தனை கரம் பிடிக்க தவறிடராங்க. "
கம்பளிப்புழு
"ஒன்னாத்தான் இருந்தோம் ஒன்னாத்தான் போவோம்னா பொண்ண பொலம்பவிட்டு கண்ண கலங்கவிட்டு சொல்லாம போய்ட்டியே பொல்லாத அமிர்தா"
என் தம்பி வண்டு
"நான் அழுவுல ; ஆண்டவனை நினைச்சு உள்ளம் உருகி நிற்கையில கண்ணீர் ஊற்றாக வரும்னு வள்ளலார் பாடியிருக்கார் ; அது போலத்தான் இது"
இவன் வேண்டாம்
"ஐயோ எத்தனை பெரிய தப்பு செய்ய இருந்தேன்; நல்லவேளை என் செல்ல மகள் தப்பினாள்' என்று திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தார்"
உமா என் அம்மா
' உ' ஓசை குறைந்து 'மா' ஓசை மட்டும் அதிகமாக ஒலிக்கும். அது அடுத்தவர் காதுகளுக்கு 'அம்மா' என்பது போல் கேட்கும். அக்கம் பக்கத்து ஜனங்களெல்லாம் உமாக்காவிடம் , "உன் தம்பி உன்னை அம்மா என்றுதான் கூப்பிடுவானா" என்று பல தடவை கேட்டிருக்கிறார்கள்.
அப்ரசண்டிகள்
நடிகை லக்ஷ்மி ப்ராம்டிங் செய்யும் சிவாவிடம் வசனத்தை நண்கு கேட்பதற்காக சாய்ந்ததில் சிவாமேலேயே சரிந்துவிட்டாள். அவ்வளவுதான், இளைஞர்களின் விசில் பறந்தது. "அண்ணே பத்திரம்" "சிவா அண்ணன் கற்பைக் காப்பாத்த வாங்கடா" என்று சிலர் மேடை நோக்கி நகர்ந்தார்கள்.
பிள்ளைச் சோறு
அம்மா, சும்மாவே காக்காவுக்கு சாப்பாடு வச்சப்புறம்தான் எங்களுக்கு சாப்பிடக் கொடுப்பே. இப்பத்தான் பசுவுக்கு தண்ணி வச்சிட்டியே, வந்து எனக்கு காபி கொடேன்." என்று சொல்லி என் கழுத்தைக் கட்டியபடியே வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.
திருமகள் உள்ளம்
"எதையும் பெரிசாக நீ எடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கு உள்ள காரணத்தை இருபத்தைந்து வருடங்களா வற்புறுத்தி நான் கேட்டதில்லை; இன்றைக்கு கேட்கிறேன்", என்றான் பசுபதி. திருமகள் மவுனம் காத்தாள். நெடிய பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
இது முறையில்லை
"குளத்துப் படியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். அவனை அறியாமலேயே துக்கம் பீறிட்டு வந்தது. இன்னும் நாண்கு படிகள் இறங்கி தண்ணீரில் நின்றான். குளத்து நீர் கடல் நீர் போல வந்து வந்து காலில் மோதிப் போகவில்லை. அப்படியே கால்களை சூழ்ந்து கொண்டிருக்கிறது சுபத்ராவின் நினைவு போல"
இறுதித் தீர்ப்பு
"ஆத்திகம் நாத்திகம் பேசாதீர்கள் அப்டீன்னு ஒரு போர்டை வச்சிடு ராமா" என்றான் பிச்சாண்டி. "வச்சிட்டா மட்டும் அப்டிய கேட்டுடப் போறீங்களாக்கும்" என்றான் ராமன். நேற்றைக்கு நடந்தத மனசில வச்சிதான் ராமன் பேசுறான்னு நல்லாவே தெரியுது. அது விசயமா மேல் பஞ்சாயத்து பண்ண பிச்சாண்டி வந்திருப்பதையும் ராமன் யூகித்து விட்டான்.
ஓகே மாப்பிள்ளை
அந்த ஊரிலேயே சேகர்தான் முதல் பட்டதாரி; அவனுக்கு கடிதம் எழுதுபவர்கள் கே.சேகர் என எழுதி அவமதிக்கக் கூடாதாம். கே.பிஏ என்று எழுதினால் கடிதம் கதறிக் கொண்டு அவன் வீட்டில் வந்து விழுமாம்!
ஒரே காதல் ஊரில் இல்லையடா
"உன்னோட கதைகள்ள வருகிற கற்பனைப் பெண்ணோட கண் அதப் பேசிச்சு, மூக்கு இதப் பேசிச்சு அப்படின்னு எழுதரியே, நிஜத்தில உள்ள பெண்ணோட கண் பேசுறது உனக்கு தெரியாதா".. காவியா.
பிடிவாதக்காரி
நட்பாக இருந்த வரையில் உரிமையாக இருந்தது, உறவென்று ஆன பின் பகையாக மாறிவிட்டது. பார்க்கவும் பேசவும் இல்லாமலே ஒன்பதாண்டுகள் ஓடிவிட்டன. இப்போதும் வந்திருக்க மாட்டேன், கேள்விப்பட்டவைகள் என்னை கட்டாயமாக வரவைத்து விட்டது.
தோல் பூக்கள்
" எங்கிட்ட இருபதுதான் இருக்கு; ஒன்னு மட்டும் போதும் " " வேலைய ஒழுங்கா செய்ஞ்ச திருப்தி வேணாமா. பத்து ரூபா நாளைக்கு குடுங்க" இரண்டு காலணிகளையும் சிறப்பாக சரி செய்து கொடுத்து இருபது ரூபாய்களை வாங்கிக் கொண்டான்.
ஆணவம்
அந்தப் பெண் எல்லாவற்றையும் தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டு இரண்டு நாளில் இறந்து போய் விட்டாள். வழக்கு நடந்தது. சம்பந்தம் சாட்சி சொன்னான். கூலிப்படை ஆட்களை அடையாளம் காட்டினான். மாவட்ட நீதிமன்றம் பண்ணையார், அவர் மனைவி, மைத்துனன், மேலும் கூலிப்படை ஆறுபேர் என எல்லாரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்து தனித்தனியே தண்டனையும் அளித்து விட்டது. உயர்நீதி மன்ற மேல் முறையீட்டில் போதிய ஆதாரமில்லை, குற்றம் சான்றுகளுடன் நிரூபிக்கப் படவில்லை என கூலிப்படை சேர்ந்தவர்களைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.
அமெச்சூர் நடிகர்கள்
"யாரோ வீட்டைச் சுற்றிவருவது போல் அரவம் கேட்டது. உற்றுக் கேட்டதில் 'ஜல்..ஜல்' என்று ஒரே ரிதத்தில் கொலுசின் ஓசை. சப்தமெழுப்பாமல் தெருப்பக்க ஜன்னல் திரையை லேசாக விலக்கி சிறு இடைவெளி வழியே பார்த்தேன்."
அப்படியே நில்
"அன்னை தெரசா மாதிரி வேண்டாம். சுயமரியாதைச் சுடர் மணியம்மை மாதிரி சேவை செய்ய விரும்புகிறேன்" "நீ சுற்றி வளைத்துப் பேச வேண்டாம். எனக்கோ வயது நாற்பத்தைந்து; உனக்கு இருபத்தேழு. என் மகளை விட ஐந்து வயதுதான் நீ மூத்தவள். இது பொருந்தாக் காமம். என் மனம் இதற்கு ஒருநாளும் ஒப்பாது"
தக்காளிச் சட்னியும், இரத்தமும்
"இன்னும் ஒருத்தன் மட்டும் வந்து மாட்டவில்லையே என்று எதிர் பாரத்துக் கொண்டிருக்கும் போதே ஆடு தானே வந்து தலை கொடுத்தாற் போல வந்து மாட்டிக் கொண்டான். வண்ணம் பூசப்படாதவனாக ஃப்ரெஷ்ஷாக வந்தவனை வண்ணத்தில் குளிப்பாட்டி விட்டார்கள். பாவம் நிராயுதபாணியாக வந்து மாட்டிக் கொண்டான்"
மதுவும் கொரானாதான்
"உயிரைக் குடிப்பது என்றானபின் மதுவென்ன? கொரானாவென்ன? இரண்டும் ஒன்றுதான்" "அரசாங்கமே இப்போதைக்கு இப்போதையை மீணடும் திறந்து விட்டிடாதே! நிறைய குடும்பங்களில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்கட்டும்."
தனிமரம்
"பறவைகளுக்கிடையே வர்ணபேதம் இல்லை; அதனால் அவை மரத்தின் மேலே தங்குகின்றன. ஆனால் மனிதர்க்குள் வர்ணபேதம் உண்டு; அதனால் அவர்கள் மரத்தின் கீழே இருக்கிறார்கள். இந்த வர்ணபேதம் ஒழிய எத்தனை தலைமுறை ஆகுமோ. மரத்தின்மீது பறவைகள் சமத்துவமாக இருப்பதைப்போல, மண்ணில் மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதெப்போ?"
ரமாவின் கணா
இதுவரை ஒரு டஜன் பிள்ளை வீட்டார் வந்து பார்த்துப் போய்விட்டார்கள். எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டது போல ஒரே பாட்டுதான் பாடினார்கள். என்ன ஒவ்வொருத்தருக்கும் ராகம் வேண்டுமானால் மாறியிருக்கும்; சாகித்யம் அதேதான். "பெண் குள்ளம்" "உயரம் பொருத்தமில்லை" இன்றைக்கும் ஒரு கோஷ்டி மாலை ஆறு மணிக்கு பெண் பார்க்க வரப் போகிறது.
முதிர் கன்னி
"உன் பாரம்தான் இறங்கிடிச்சே. இப்பவாவது வரன் தேடலா மில்லியோ" "அம்மா,கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல கேள்வி. கட்டிக்க யார் வருவாரென்பது தான்.. என் வயசு இப்போ முப்பத்தேழு. சமவயசுன்னு பார்த்தாலும் வரனுக்கு இரண்டாம் தாரமாத்தான் வாழ்க்கைப் படவேண்டியிருக்கும்"
பேச்சாயி(ரத்னராஜு)
அம்மா வென்று அழைக்க அனைத்துத் தகுதியும் உள்ளது. அதைவிட சிறுவயதிலிருந்து பேச்சாயி என நான் கூப்பிடுவதையே செவி கொள்ளாமல் சந்தோஷமாகக் கேட்கும்.அம்மா வென்றுதான் கூப்பிடவில்லை "வாங்க போங்க" என்று மரியாதையாகவாவது கூப்பிடலாமில்லையோ ? அதுவும் இல்லை. "போ " "வா "; என ஒருமையில் தான் கூப்பிடுவேன். எனக்கென்னமோ பேச்சாயிக்காகவே என்னைப் பெற்றதாய் விட்டுச் சென்றது போலத் தோன்றுகிறது. கோவில் சுவற்றில் ஆலமரம் முளைக்கும் ரகசியம் போன்றது இது.
என் மூச்சுக் காற்று (ரத்னராஜூ)
அம்மா கொடுத்த மூக்கைத் துளைக்கும் அரோமா காஃபியை டம்ளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டபராவில் ஊற்றி ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு இடப்புறம் கொஞ்சம் தள்ளி மரப்பெஞ்சில் நான். அம்மாவோ அடுப்படியில், ஆனால் காதுகள் மட்டும் இங்கே. ஓசை யெழுப்பாமல் டிபன் வேலை நடக்கிறது. ஓசை வந்தால் நாங்கள் பேசுவது தெளிவாகக் காதில் விழாதல்லவா. சிறு சப்தம் கேட்டாலும் வேலையை நிறுத்திவிட்டு பேசுவதைக் கவனிப்பாள். ***** அன்று நான் , இன்று என் மகன். .
மானமிகு மணி (ரத்னராஜூ)
ஒரு நாயின் மனக் குமுறல்