இசை

திரு.கிறிஸ்டி நல்லரத்னம் அவர்களின் படைப்பான 'இசை' சிறுகதை சொல்வனம் மின்னிதழில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதை நாமும் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். https://www.youtube.com/watch?v=2Kh5gXwd7Jw இடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க…. யோவ், பஸ்ஸை நிறுத்தய்யா!….. கவனம் சார் … மெதுவா… மெதுவா… அம்பிட்டு தூரம் இல்லீங்க…. நேரா போய் அங்கிட்டு தெரியிற ஆலமரத்தடியில சோத்துக் கை பக்கம் திரும்பி நேரா போனா நம்ம வீடு சார்…அஞ்சாம் நம்பர் வீடுங்க ….. பக்கத்திலதான் சார் நா சொன்ன விஜயா... Continue Reading →

வாய்ப்பாடு

தனக்கு வராத கணக்கை ஒரு அளவுகோலாய் பாவிக்கும் ஒரு மனிதனின் கதை இது. நம் வாழ்விலும் நமக்கு சவாலான விடயங்கள் ஒரு அளவுகோலாய் மாறிவிடுவது எத்தனை உண்மை? இக்கதையின் கடைசி வரிகளை படித்ததும் வாசகன் மனதில் தோன்றும் கேள்விகள் பல: விடை பிழை என்று தெரிந்தும் 'என்னைப்போல் ஒருவன்' எனும் கண்டெடுத்தலின் கொண்டாட்டமா இது?, விடை தெரியாமல் தான் அனுபவித்த வேதனையில் இருந்து மீழ இது ஒரு பிராயச்சித்தமா? "ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது" என்பதின் மறு வடிவமா?

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்….

எனது மகளின் வளர்ப்பு கிளிக்கு எற்பட்ட ஒரு மனோதத்துவ தாக்கத்தை அடிப்படையாக வைத்து (உண்மை சம்பவம்) இக்கதையை புனைந்தேன். பறவைகளின் மத்தியில் நிலவும் சமுதாய அடுக்குகளை புரியவைக்கும் கதை இது.

எங்கிருந்தோ வந்தான்!

அவனை எழுப்பாதீர்; அமைதியாய் தூங்கட்டும்! ஆழ்ந்த துயிலினிலே அமைதியினை காணட்டும்.

அனாதை மரங்கள்

வாழ்க்கையில் அவ்வப்போது தொட்டுக்கொள்ள ஒரு சோகமோ ஒரு தவிப்போ தேவை. அவற்றின் உறைப்புத்தான் மானுடனின் நாட்களை ருசியுடன் நகர்த்த உதவுகின்றன என்பது உண்மை. அம்மாவிற்கு வெண்ணைப் பழ மரக்கண்டுகளின் மறுதலிப்பே அந்த உறைப்பு .

ஓவியர் ‘செள’ – ஒரு படைப்பாளியின் கதை!

ஒரு சஞ்சிகைக்கு ஓவியம் வரைபவனின் சவால்களை சித்தரிக்கும் சுவாரசியமான கட்டுரை. ரசித்து எழுதியது.

அலஸ்காவை தந்து விடு!!

ரஷ்ய பாராளுமன்ற உறுப்பினர் அலஸ்கா மாநிலத்தை அமெரிக்கா மீழத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். https://sofrep.com/news/russian-lawmaker-oleg-matveychev-demands-alaska-and-california-fort-as-reparations-for-sanctions/ இதை அடிப்படையாக வைத்து அலஸ்கா பற்றிய ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளேன்.

யார் இந்த பேங்க்ஸி?

உலகின் பிரபல தெருக்கிறுக்கல் கலைஞர் பேங்க்ஸி (Banksy) பற்றி ஒரு கட்டுரை. தெருக் கிறுக்கல்களை கண்டு நாம் முகம் சுளிப்பது சகஜமே. ஆனால் இவர் இக் கலையை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்தியிருக்கிறார் என்பது உண்மையே. தெருக் கிறுக்கலை புனிதப்படுத்த முயலாமல் உண்மைகளை தொகுத்து எழுதிய கட்டுரை இது.

உயிர்த்தெழும் உயிரினம்!

இவ்வுலகைவிட்டு மறைந்துபோன உயிரினங்களை மீண்டும் விஞ்ஞானத்தின் உதவியுடன் மீட்டுருவாக்கம் செய்ய முயற்சிகள் நடைபெறுகின்றன என்பது ஒரு உற்சாகமான செய்தி!

கணினியும் கதையெழுதும்!

உலகெங்கும் விஞ்ஞான வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது. விஞ்ஞான வாரத்தை ஒட்டி இக்கட்டுரையை இன்று எழுதினேன். விஞ்ஞானமும் கற்பனையும் சந்திக்கு மையம் பற்றிய கட்டுரை.

நிழலின் நாயகன் : சத்யஜித் ரே

திரையுலக மாமேதை சத்தியஜித் ரேயின் நூறாவது பிறந்த நாளை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் வாழ்ந்த சமகாலத்தில் நாமும் வாழந்தோம் என்ற பெருமையுடன் அவர் படைப்புகளை நுகர்வோம்!

நண்டுகளுக்கும் ஒரு மேம்பாலம்!

செந்நிற நண்டுகளின் வாழ்க்கை வட்டம் விசித்திரமானது..... மர்மங்கள் நிறைந்தது. அவற்றை கடலை நோக்கி நடக்க உந்தும் சக்தி என்ன?  திசை காட்டுவது யார்? பிறந்த குஞ்சுகள் காடு நோக்கி பயணிப்பது எப்படி?  எப்போது உயர் அலைகள் வரும் என அறிந்ததெப்படி?

உன் கண்ணில் நீர் வழிந்தால்!

"வாசிப்பனுபவத்தை இன்றைய சமுதாயத்தினுள் விதைப்பதும் இன்றைய எழுத்தாளனின் கடமை. இக்கதையில் வரும் முதலாளி ஒரு "கதை சொல்லியாக" வருகிறார். இக்கதையை வாசிக்கும் வாசகன் இதில் வரும் கதைகளையும் தேடி வாசிக்க முனைந்தால் அதுவே வெற்றி என்பேன்."

அங்கும் இங்கும்

விண்ணையும் மண்ணையும் தொட்டுச்செல்லும் கட்டுரைத் தொடர். இத்தொடர் விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்களை நிச்சயம் கவர்ந்திடும். இதில்  "அங்கு" என்ற தலைப்பில் விண்வெளி / விஞ்ஞானம் சம்மந்தமான நிகழ்வுகளையும் "இங்கு"  எனும் தலைப்பின் கீழ்  சமகாலத்தில் நிகழும் கலை, இலக்கிய விடயங்களை எழுதுவதே இவரது எண்ணம்.

எங்க நாட்டிலே – நான்காம் (இறுதி) பாகம்

ஆஸ்திரேலியாவில் ஒரு ஊழியர் வேலையில் இருந்து இளைப்பாற வயதெல்லை கிடையாது என்றால் நம்புவீர்களா? எழுபது வயதை தாண்டிய பலர் கூட இங்கு வேலைக்கு செல்வது சகஜம். 

 எங்க நாட்டிலே!(மூன்றாம்  பாகம்)

ஸ்டீப் எர்வின் ஒரு ‘முதலை ஜல்லிக்கட்டு’ வீரன்! எந்தப் பெரிய முதலையையும் அதன் முதுகில் பாய்ந்து ஏறி அடக்கி கட்டிப் போட்டு விடுவார்

ஆஸ்திரேலியா: தேசம் வளர்ந்த கதை! பகுதி 2

ஒரு நாட்டின் வரலாற்றை புரிந்து கொள்வதன் மூலம் அந்நாட்டின் நிகழ்கால பாரம்பரியம், அரசியல், கலாச்சாரம் மற்றும் அதன் சமூக மாற்றங்கள் எப்படி அதன் எதிர்கால சந்ததியை வழிநடத்தும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

ஆஸ்திரேலியா: தேசம் பிறந்த கதை! – பகுதி-1

"ஆஸ்திரேலியா தேசம் பிறந்த கதை.. கல்கியில் வெளியான என் முதல் கட்டுரை.. இது முதல் பாகம்.. இன்னும் 3 பாகங்கள் உள்ளன அனைத்தையும் படியுங்கள் ஆஸ்திரேலியாவை அறிந்திடுங்கள்."

புதுமைப்பித்தனின் ஆற்றங்கரை பிள்ளையார்

"உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையார் ஒரு அற்புதமான கனவு காண்கிறார். தான் பெரிதாக வளர்வது போல் தெரிகிறது. முகத்தில் புன் சிரிப்பு தோன்றுகிறது. தும்பிக்கை சற்று அசைகிறது."

வெற்றிடம்

ஒரு நீண்ட அமைதி. அவர் நினைவுகள் இங்கில்லை. விக்டருடன் கதை பேசி இருவரும் பொருத்தமான ஜிக்சோ துண்டுகளை தேடும் அந்த காட்சி அவர் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் விக்டருடன் வாழ்ந்த இனிய நினைவுகள்.....

காமிக்ஸ் பிறந்த கதை

"காதல், திதில், மர்மம், நையாண்டி நிறைந்த கதைகளை உள்ளடக்கிய காமிக்ஸ்கள் வெளிவந்து நிரம்பத்தொடங்கின. இவற்றிற்கு பலத்த வரவேற்பும் இருந்தது. அப்போது வால்ட் டிஸ்னி வேறு தன் படைப்புக்களான மிக்கி மவுஸ், மினி மவுஸ் போன்ற கதாபாத்திரங்கள் அடங்கிய காமிக்ஸ்களை வெளியிட்டு லாபம் தேடிக்கொண்டார். "

இமயம் தொடும் ஷெர்ப்பாணிகள்! 

"ஷெர்ப்பாக்களுக்கு அவர்களின் உடல் கட்டமைப்பு இயற்கை யாகவே ஆக்ஸிஜன் கம்மியான சூழலில் வாழ திரிபடைந்துள்ளது. ஒரு சாதாரண மனிதனின் இரத்தத்தில் உள்ள செங்குருதி அணுக்களின் எண்ணிக்கையையும் விட ஷெர்ப்பாக்களின் குருதியில் இவை குறைவாகவே காணப்படும்."

எம்மதமும்….. 

" செபாஸ்டி, உன்னட சமயம் சாதி பாக்காம படுக்க இடம் தாறன்.... ஆனா விடிய எழும்பி கோவிலடியையும் மடப்பள்ளியையும் கூட்டி பெருக்கி தண்ணி தெளிக்க வேணும் கண்டியோ?..... அதுதான் வாடக “

குவாட் (QUAD)எனும் சதுரங்க விளையாட்டு!

"சர்வதேச அரசியலில் சதுரங்கக் காய்களாய் நகர்த்தப்படும் முன்னெடுப்புகள் மனித மேம்பாட்டிற்கு உதவுமேயானால் அதை வரவேற்பது எம் கடமையே!"

மீண்டும் மிதக்கும் டைட்டானிக்!( Titanic Once Again)

"டைட்டானிக் கப்பல் மூழ்கி 109 ஆண்டுகளாகி விட்டன. ஆனால் அண்மை நாட்களில் மீண்டும் இதைப் போல் ஒரு மாதிரி கப்பலை கட்டும் முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத மையச் செய்தியாக வைத்து நான் இக்கட்டுரையை எழுதியுள்னேன்."

அவிழாப் புதிர்!

"ஒரு பெண்ணின் பார்வையில் அவள் அனுபவிக்கும் சுக துக்கங்களை சித்தரிக்கும் கதை."

திகில் நாயகன் நைட் ஷியாமளன்!

எம் கதைகளின் ஓவியர் கிரிஸ் நல்லரத்னம், மெல்போன்,ஆஸ்திரேலியா அவர்களின் சிலிர்க்கும் கட்டுரை.

பேக் கிறவுண்ட் மியூசிக்

"என் கதைகளுக்கு ஒவியம் வரைந்திடும் ஆஸ்திரேலிய அன்பு நண்பர் கிரிஸ் நல்லரத்னம் அவர்களின் படைப்பு. வாழ்க்கையின் முரண் கதையின் கரு. தேர்ந்த எழுத்தாளரைப்போல் எழுதியது கண்டு நான் வியந்தது போல் நீங்களும் வியந்திட விரும்புகிறேன்."

நிழலின் நாயகன் : சத்யஜித் ரே

"தன் மனைவியின் நகையும் நண்பர்களின் கடனையும் மூலதனமாக்கி ஆரம்பித்த படத்தை தொடர்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனிலும் சில அரசியல் பிரமுகர்களாலும், ரேயின் விடா முயற்சியாலும் “பதேர் பாஞ்சாலி” 1955ல் திரையில் வந்து விழுந்தாள். "

Create a website or blog at WordPress.com

Up ↑