ஆசிரியர் விபூதிபூஷண் பந்தோ பாத்யாயா பற்றிய குறிப்பில் பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் என்பதைப் படித்ததும் புத்தகத்தை வாங்கிவிட்டேன். பதேர் பாஞ்சாலிக் கதை மிகவும் பேசப்பட்ட கதை என்று மட்டுமே தெரியுமே தவிர வாசித்ததில்லை. அவரது எழுத்தை படிக்க வேண்டி இந்த சிறுகதைத் தொகுப்பையேனும் வாசிப்போமே என வாங்கினேன்.
அழகின் ஆராதனை
ஆசிரியை லெஷ்மி அவர்களின் கதைகளில் பெரும்பாலும் பெண்கள் குடும்ப வாழ்வில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளும் அதனை அவர்கள் கையாளும் விதமும் பற்றியே அமைந்திருக்கும்.பூக்கள் அ த்தனையுமே அழகுதான் இருப்பினும் சில பூக்கள் மட்டுமே சிறப்பானதாகிறது. பூக்களின் ராஜா எனஅழைக்கப்படும் ரோஜாவை விரும்பாதவர் யாருமில்லை. அதில் முள் இருக்கிறதென யாரும் வெறுப்பதுமில்லை.
திருக்குறள்
இலக்கியத்தில் எனக்கு மிகப்பிடித்த திருக்குறளையே முதலாவது பதிவாக பதிவுசெய்கிறேன். மறை என்பதற்கு பொருளாக பல சொற்கள் உண்டு. இருப்பினும் பொதுவாக வேதம், மற்றும் மறைதல் என்ற பொருளிலேயே நேரடியாக நாம் வழக்கமாகப் யன்படுத்துகிறோம். வேதத்தின் பொருளை அனைவராலும் படித்து பொருள் உணர்ந்து கொள்ள முடியாது.