வாசித்தது:மீண்டும் ஜீனோ
ஆசிரியர்:சுஜாதா
பக்கங்கள்: 328
விலை: 160ரூபாய்
பதிப்பகம்:விசா பப்ளிகேஷன்
வகை: நாவல்
முதல் பதிப்பு1986.என்னிடம் இருப்பது 8-ஆம்பதிப்பு 2014. பத்து வருடங்கள் கடந்த நிலையில் இப்போது இ்ன்னும் எத்தனைபதிப்பு வந்துள்ளதோ தெரியவில்லை.
இயந்திரமனிதன் (ரோபோட்) மெல்ல மெல்ல மருத்துவம், விளையாட்டு, உணவகம் என உள்நுழைந்து கொண்டிருக்க, அதன் அடுத்த கட்ட தொழில் நுட்பமாக (சாட்Gஜிபிடி) செயற்கை நுண்ணறிவு . வருங்காலத்தில் மக்கள் இயந்திரமாக செயற்கை முறையில் மாற்றப்பட்டு, கருத்து சுதந்திரம் தடுக்கப்பட்டு , அடிமைகளாக ஆளப்பட்டு, இயந்திரங்களே ஆளும் நிலைவந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததன் விளைவே இந்தக் கதை.
ஒருமாற்றமாக திரைப்படம் போல் இந்த விமர்சனத்தை பார்ப்போமே!
டீசர் :
கதைத்தொடக்கத்தில் இதற்குமுன் ‘இனிய இயந்திரா ‘கதையில் அறிமுகமாகும் ஜீனோ அபாரமான படிப்பினால், ஞாபகசக்தியினால், சிந்திக்கத்தொடங்குகிறது. ரவி ,மனோ மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அரசிநிலாவிடம் சொல்லி அவளுக்கு உதவிசெய்ய முற்படுமுன் ,இனிநாய் தேவையில்லை என அக்கக்காப் பிரித்துப் போட்டு விடுகிறான். என்பதாக சுஜாதாவின் முன்னோட்டம்.
பின் மீண்டும் ஜீனோ ….? பொறுங்கள். பிளாஷ்பேக்கில் பார்ப்போம்.
பாத்திரங்கள்:
கதாநாயகன் :ஜீனோ (இயந்திர நாய் )
கதாநாயகி:ராணி நிலா
துணை நாயகன் :சிபி (நிலாவின் கணவன்)
வில்லன்கள்:மனோ,ரவி
டாக்டர்கள் : 1.ரா 2. பாசு
டாக்டர் ராவின் உதவியாளன்: உதவி
(பெயரே உதவிதான்)
சேவகன் :காமா
கதாநாயகன் அறிமுகம் :மீண்டும் ஜீனோ எப்படி?:
இதோ இப்படி.
நிலாவின் அறையில் மேஜையின் மீது அவ்வப்போது வாலாட்டிக்கொண்டு வவ் வவ் என (நம்ஜீனோ) குரைத்துக்கொண்டு இருக்க,
ரவியும் மனோவும் வந்து’ உன்புதுநாய் எப்படி என்று கேட்க? ‘.
‘ ஜீனோபோல் வராது இதுசும்மா பிசாத்து’ என்கிறாள்.
அது புத்திசாலியாகத் சிந்திக்க தொடங்கியது அதனால் அதை பிரித்துப்போட்டேன். சிந்திப்பது தவறு என்று சட்டம் போட கையெழுத்து போடுகிறாயா? என்று ரவி கேட்க,
நீங்கள்தான் நாட்டுக்கு நல்லது
செய்கிறீர்கள் .நீங்கள் சொல்லியபடிக் கேட்கிறேன் என்று சொல்கிறாள்.
அவர்கள் வெளியில் சென்றதும்,
“நாய் பட்டபாடு என்பார்களே, இதுதான்.
மடநாயாக நடிப்பது ரொம்ப கஷ்டம்” என்கிறது ஜீனோ. உண்மைதானே!
பிளாஷ்பேக் :
ரவி, மனோ எவ்வளவு பெரியசக்தி இவரகள் பொய்யான பிம்பம், டெக்னாலஜி,குரல்கள் இவற்றை வைத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள்
இதை எப்படி எதிர்ப்பேன் என்று அரசி நிலா கலங்கும் நேரத்தில் ஜீனோ வருகிறது.
‘ ஜீனோ’ என்று பரவசத்துடன் நிலா கீச்சிடுகிறாள்.
உஷ் … சன்னலையும் கதவையும் சாத்திவிட்டு வா .. என்னைச் சந்தேகிக்கும் ரவியோ மனோவோ என்னை உயிருடன் வைத்திருக்க மாட்டார்கள் என்று எதிர்பார்த்து , தற்காப்புக்காக என்னைப் போன்றிருந்த நாயை அழைத்து வந்து மேஜைக்கடியில் மறைத்து வைத்திருந்தேன்.
ரவிவந்து’ ஜீனோ வெளியே வா’ என்று அதட்டிய போது அந்த முட்டாள் நாயை வெளியே அனுப்பிவிட்டேன்.
மனித சிந்தனையைக் கற்றுக் கொண்டதும் மனித தந்திரங்களும் தானாகவே வந்துவிட்டன.
எப்புடி ?
சதித்திட்டம்:
ரவியும் மனோவும் அரசிநிலாவுக்கு கெட்டபெயரை (எந்தவிதமாக என்பதை புத்தகத்தில் படிக்கவும்) மக்களிடையே ஏற்படுத்தி ,பதவி நீக்கம் செய்துவிட்டு, தேவையெனில் அவளை காலி செய்து தாங்கள் நோக்கம்போல் மக்களை இன்னும் அடிமுட்டாளாக வைத்திருக்க திட்டமிடுகிறார்கள் .
திருப்பம் :
ஜீனோ தன் புத்திசாலித்தனத்தால் எல்லாவற்றையும் திருப்பிவிட , நிலாவின் செயல் மாறுபாடு எல்லாவற்றுக்கும் ஜீனோ தான் காரணமென அறியாது அவள் கணவனான சிபிதான் காரணமென அவனை சித்திரவதை செய்ய,நிலா எட்டப்பியாக ,
ஜீனோ அரிச்சந்திரனாக,
டாக்டர் ரா உதவியுடன் ஜீனோ அக்கு பஞ்சர் ஆக்கப்பட்டு பெட்டியில் பூட்டப்பட
ரவியும் மனோவும் அப்பாடா என்றாக
மீண்ட ஜீனோ:
ஆராய்ச்சியாளரான டாக்டர் ரா சும்மா இருப்பாரா? மீண்டும் அதை இயக்கும் முயற்சியில் உதவியின் உதவியுடன்
மீண்டும் ஜீனோ பீனிக்ஸ் பறவையாக
முன்னிலும் பலமடங்கு புத்திசாலித்தனத்துடன் தன்னை
தகவமைத்துக்கொள்கிறது.
கதையின் சுவாரசியம் ஜெட் வேகத்தில் ஜீனோவின் சகாசங்கள் , சதிகள் ஒவ்வொன்றையும் அது முறியடிப்பதும் நேரத்திற்குத் தக்க அது எடுத்தாளும் தமிழ் ,ஆங்கில தொடர்கள், அட்டகாசம் .ஆகா அப்படிபோடு (விசில் அடிக்கத் தெரியவில்லையே ) என்று வருத்தமாகிறது.
எதிர் திருப்பம்:
அது என்ன என்பதைப் படித்து தெரிந்துகொள்ளவும்.
ரசித்தது:
ரவியை நீ எப்படி சாக விரும்புகிறாய்? என்று ஜீனோ மிரட்டிக்கொண்டிருக்க , மனோ பின்புறமாக வந்து அதன் கழுத்தைப் பிடிக்க முயல ,
ஜீனோ, சட்டெனத் திரும்பி கோபத்துடன் ‘இதுதானே வேணடாங்கறது மரியாதையாக நடத்தினால் அல்பமான மனுஷப் புத்தியைக் காட்டுகிறாயே? .நானூறு தோப்புக்கரணம் போடு என்கிறது.
இயந்திரமானாலும் தன்னை மாற்றி மாற்றி வடிவமைத்துக் கொண்டு தீமைக்கு எதிராக அதன்போராட்ம்.
தன்னைச் சேர்ந்த நல்லவர்களைக் காப்பாற்றுவதுடன் தீமையை அழிக்க கருணைகாட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பது.
அநியாயம் தலைவிரித்தாடினால் (கடவுள் அவதாரம் நம்புவர்க்கு) மீண்டும் ஜீனோ வரும்!!!
Leave a comment