செந்நிற நண்டுகளின் வாழ்க்கை வட்டம் விசித்திரமானது..... மர்மங்கள் நிறைந்தது. அவற்றை கடலை நோக்கி நடக்க உந்தும் சக்தி என்ன? திசை காட்டுவது யார்? பிறந்த குஞ்சுகள் காடு நோக்கி பயணிப்பது எப்படி? எப்போது உயர் அலைகள் வரும் என அறிந்ததெப்படி?
ஆகாயத்துக்கு அடுத்த வீடு
வயதானபின்பு நிதானமாய் யோசிக்கும் போதுதான் தெரிகிறது நாம் எவ்வளவு நாட்கள் பயனற்றதை செய்திருக்கிறோம் என்று.
கான்ஃபிடன்ஸ் கார்னர்
"மரபின் மைந்தன் முத்தைய்யா அவர்கள் தற்போதைய தேவையான வாழ்வதற்கான நம்பிக்கை, வெற்றி பெறுவதற்கான உறுதி, அதற்கான முயற்சி என 'கான்பிடன்ஸ் கார்னர்' புத்தகத்தில் 100 கார்னர்கள் கொடுத்திருக்கிறார். அவரவர் சூழ்நிலைக்கு தக்கவாறு எடுத்துப் பயன்பெறலாம். அவரின் சீரிய முயற்சிக்கு வாழ்த்துகள்."
குறிஞ்சி மலர்
வறுமை விரட்டிய நிலையிலும் பண்பு நிறைந்தவனான அரவிந்தனே என் மனதுக்கு குறிஞ்சிமலராகிறான். மலரில் ஆண்மலரும் உண்டுதானே!!!
உன் கண்ணில் நீர் வழிந்தால்!
"வாசிப்பனுபவத்தை இன்றைய சமுதாயத்தினுள் விதைப்பதும் இன்றைய எழுத்தாளனின் கடமை. இக்கதையில் வரும் முதலாளி ஒரு "கதை சொல்லியாக" வருகிறார். இக்கதையை வாசிக்கும் வாசகன் இதில் வரும் கதைகளையும் தேடி வாசிக்க முனைந்தால் அதுவே வெற்றி என்பேன்."
முத்தயுத்தம்(muttha yuttham)
"முத்தயுத்தம் இந்த கதையில் காட்டை, அதன் ஆச்சரியங்களை, அழகை ,அதன் ஆபத்தை என ரசிக்க ரசிக்க சொல்லி ஆசிரியர் சொல்வது போல இரவில் நிலவொளியில் காட்டின் உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று நமக்கும் ஆவலை ஏற்படுத்தும் ஆசிரியர் ஷங்கர நாராயணனுக்கு பாரட்டுக்கள்."