ஆசிரியர்:- பேரறிஞர் அண்ணா
வெளியீடு:- பாவை பப்ளிகேஷன்
பள்ளிபாடத்தில் செவ்வாழை படித்திருக்கிறேன்.
‘திராவிட நாடு ‘ இதழில் வெளியான 11 கதைகளை தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதில் ‘பித்தளை அல்ல, பொன்னேதான்!’ கதையின் பதிவு இது.
அப்பாசாமியின்(இறந்த) முதல் மனைவியின் மகன் முத்து. 2வது மனைவியின் மகள் பட்டு மட்டுமே முத்துவிடம் பாசமாக இருக்க அவனும் அதே பாசத்தோடு இருக்கிறான்.
அப்பாசாமிக்கு மகனை கவனிக்க!, நேரமில்லாமல் வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கிறார். சிறு வயதில் வளைக்காததால் படிப்பில் நாட்டமில்லாத முத்து, தச்சு, அச்சு, பூச்சுவேலை என எங்கு சென்றாலும் எதற்கெடுத்தாலும் ஏச்சை, ஏளனப் பேச்சை, அடி, உதையை வாங்குகிறான். முதலில் வருத்தம், கோபம் வருகிறது.
பிறகு வெறுப்பு இறுதியில் யாரும் தன்னை எதுவும் செய்ய முடியாதென்ற துணிவு வர ஊர்சுற்றும் போக்கரியாகிறான்.
தன்னை பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் எனச் சொல்லும் அப்பா தன்னை விட வயதில் குறைவான முதலாளி எம்பெருமாளிடம் திட்டு வாங்குவது பொறுக்காமல் 8வயதிலேயே முதலாளியே திருப்பி திட்ட அப்பாவிடம் அடிவாங்குகிறான்,
சிறுவயதில் சீட்டாட்டத்தை வேடிக்கை பார்த்தற்கே அடிக்கிறார். முதலாளி தன்நண்பர்களுடன் சீட்டாட தன் வயதேயுள்ள அவரின் மகன் அதைப்போடு, இதைப்போடாதே, எனச் சொல்ல அதை முதலாளி மெச்சுவதைப் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. நியாயம் பொதுவானதுதானே என யோசிக்கிறான். பெரியவனாக வளர்ந்த பிறகுதான் அவனுக்கு நீதி, நியாயத்தை எடுத்துச்சொல்வதற்கு எம்பெருமாளும் அதன்படி கேட்டு நடப்பதற்கு அப்பாசாமியும் என்பதான புரிதல் வருகிறது.
எம்பெருமாள் வீட்டில் வேலை செய்யும் குட்டியம்மாள் முத்துவை விரும்புகிறாள். அவளை சந்திக்கச் செல்லும்போது யாரோ வரும் சத்தம் கேட்டு ஔிந்துகொள்ள வரும் இடம் எம்பெருமாளின் படுக்கையறை. முத்து பதற அதேநேரம் அறைக் கதவு திறக்க, பயந்து கட்டிலடியில் கட்டையாய் கிடக்கிறான். பதுங்கி பதுங்கி உள்ளே வரும் உருவம் பெட்டியிலிருந்து 4 தங்க வளையல்களை எடுத்துக்கொண்டு தன் மேலிருந்த துண்டு தரையில் விழுவது கூட தெரியாமல் செல்வது தன் அப்பா என்பதை பார்த்து திடுக்கிடுகிறான்.
சிறிதுநேரத்தில் நாற்காலியை உருட்டி ஓசையெழுப்பிட, அவனை திருடனென்று துரத்துகின்றனர்.
அவனோ வீட்டிற்கு வந்து அப்பாவிடம் துண்டை தூக்கிப்போட்டு வளையல்களை வலிந்து வாங்கி ஊருக்கும், உறவுக்கும் உண்மைக்கு மாறாக திருடனாகிறான்.
மகன் திருடனாகிவிட்டான் என குத்திகாட்டும் முதலாளியிடம் செல்லாத சினத்தை அதேபோல் சொல்லும் மனைவியின் கன்னத்தில் கை வன்மையினால் …
யாரிடமும் ஏதும் சொல்ல முடியாத துன்பம் கண்ணீராக கரைகிறார்.
மற்ற கதைகள்:-
‘பிரசங்க பூஷணம்’, ‘சொல்வதை எழுதேண்டா’ 2ம் வலிதெரியாத ஊசிகளாக _ நகைச்சுவையோடு மருந்து வேலை செய்வதுபோல் _ சுருக் நறுக் என்று கருத்துக்களை சொல்லி நல்ல இதய டாக்டராகிறார் அண்ணா.
‘புதிய நாயனார் புதியவகை குறு(சு)ம்பு’
குழந்தைகளுடன் குழந்தையாக இனிமையாக வளர்ந்த செவ்வாழை முடிவில் கரிக்கவைக்கிறது !
செங்கரும்பு அதன் தோகையில் (தொடக்கத்தில்) சுவை குறைந்து கணுவில் (இடையில்) கசந்து வேரில் (முடிவில்) இனிக்கிறது!
‘முகம் வெளுத்தது’ , ‘இருவர்’ 2ம் முகத்தில் அறைவதான வகையில் ஏழை, பணக்காரன், ஜாதி பற்றியதாக எழுதியிருககிறார்.
‘பக்த ‘பாக்தாத் திருடன்’ தற்போதும் காணக்கூடியதான நிகழ்வை பார்வையாளர் பார்வையில் பதிவிட்டிருக்கிறார்.
‘தனபாலச் செட்டியார் கம்பெனி’ “உணவு சுழற்சிமுறை” என்பதுபோல் பணசுழற்சிமுறையை அவரவர் வீட்டுக்கணக்கை கொண்டு அமைத்திருப்பது தனிச் சிறப்பு!
‘சமூகசேவகி சாருபாலா ‘இதில் பணக்கார பெண் தன் சுயத்திற்காக (சேவை) செய்வது 101டிகரி சுரம் பெரிதுபடுத்த படுவதும் அவளின் செயலால் ஏழை குழந்தை உயிரிழப்பதும் கொடுமை!
எல்லா கதைகளிலும் எதை நம்மிடம் கொண்டு சேர்க்கவேண்டுமோ அதனை மூக்குப்பொடியின் அளவாக கச்சிதமாக சேர்த்திருக்கிறார்! அண்ணாவின் பிறந்த நாளில் அவரின் கதைகளைப் பற்றிய பதிவிடுதிலில் பெருமையடைகிறேன்!
ரசித்தது:- நடந்தவை ஏதுமறியாமல் அப்பாசாமியிடம் “நாம் இவ்வளவு நாட்களும் பித்தளை என்று நினைத்திருந்த தட்டு, தங்கம்” என்று நகைக் கடையில் வேலைசெய்யும் தன் அண்ணன் உரசிப்பார்த்து சொன்னதாக மனைவி வள்ளி கூறுகிறாள்.
அவரும் உருக்கமாய் “ஆமாம் இவ்வளவு நாளாய் பித்தளை என தவறாக நினைத்தோம் தங்கம்தான்” என்கிறார்.
தந்தைமீது பாசம், மதிப்பும் கொண்டவனாக, பழியை ஏற்று சிறைக்குச்செல்கிறான்.
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி வெளியில் அப்பா பெயர் கெடாமல் காப்பதும் சிறப்பான முத்(தா)து செயல் தானே!
சிறை (சிப்பி) யிலிருந்து வெளிவரும் முத்துக்காக காத்திருக்கும் அப்பா (சாமி) !!!
மூக்குப்பொடி பிரமாதம்
LikeLiked by 1 person
நன்றி தணிகை அவர்களே
LikeLike