மருதம் திணை
மருதம் என்பது பண்டைத் தமிழகத்தில் ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் என அழைக்கப்பட்டது. மருத நிலத்தில் வாழ்ந்தோர் உழவுத் தொழில் புரிவோராவர். மருத நிலத்தலைவர்கள் வேந்தன் மள்ளர் மகிழ்னன் ஊரன் கிழவன் என்றும் வேளாண்மை செய்யும் பொருட்டு வேளாளர் என்றும். அழைக்கப்பட்டனர்
தொல்காப்பியம் மருதநில கடவுளாக வேந்தனை கூறுகிறது. ஆனால் பிற்கால நூல்கள் இந்திரனை மருதநிலக் கடவுளாக கூறுகின்றன வேந்தனே ஆரிய கலப்பினால் இந்திரனாக மாறியிருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.. திராவிட ஆரிய கலாசாரக் கலப்பு ஏற்பட்ட பிற்காலத்தில் ஆரிய இந்திரன், திராவிட வேந்தன் என்னும் தெய்வத்துடன் இணைக்கப்பட்டான்.
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதுகளும் மருத நிலத்துக்குரிய பொழுதுகளாகும்
- தெய்வம்: வேந்தன்( (இந்திரன்)
- மக்கள்: மள்ளர், உழவர், உழத்தியர், கடையர், ஊரான், கடைசியர், வினைஞர், சிலதர்
- பறவைகள்: கொக்கு, நாரை, குருகு, வாத்து, அன்றில்
- விலங்குகள்: எருமை, நீர்நாய், பசு, காளை, ஆடு
- மலர்கள்: தாமரை, கழுநீர், குவளை, அல்லி
- மரங்கள்: காஞ்சி, மருதம்
- உணவு: செந்நெல், வெண்நெல், அரிசி
- பண்: மருத யாழ்
- பறை : நெல்லரி
- தொழில்: களைகட்டல், களை பறித்தல், நாற்று நற்றல், ஏறுதழுவுதல், நெல்லரிதல், கடாவிடல்
- நீர் நிலை : பொய்கை, ஆறு, ஏரி, குளம்
- அக ஒழுக்கம்
:ஊடல் - புற ஒழுக்கம் : ஊழிஞை
மருத நில மக்கள் உணவு
மருத நில மக்கள் கரும்பும் அவலும் பண்டமாற்று முறையில் குறிஞ்சி நில மக்களுக்கு கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர்.
ஓய்மானாட்டு மருத நிலத்தார் வெண்சோறு, நண்டு, பீர்க்கங்காய் கலந்த கலவையை உண்டனர். தொண்டை நாட்டு மருத நில பிள்ளைகள் பழைய சோற்றை உண்டனர்; அவலை இடித்து உண்டனர். தொண்டை நாட்டு மருத நில மக்கள் நெற்சோற்றை பெட்டைக்கோழிப் பொரியலோடு உண்டனர். தொண்டைநாட்டு குடில்களில் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு, சோறு முதலியவற்றை உண்டனர்.
செந்நெல்,/Lagerstroemia reginae

செந்நெல் வளர்ச்சி மிக நீண்டு வளரக்கூடிய அமைப்பு உடையது. இந்நெல்லினைச் சுற்றி வேலி போல் வளரும் கரும்பினை யானை ஒடித்து உண்டாலும் தெரியாத அளவிற்கான மிக அதிக உயரம் வளரக்கூடியது என சீவக சிந்தாமணி பதிவிட்டுள்ளது.
வெண்ணெல் அரிசிச் சோறு தமிழர் உணவில் உயர்ந்த உணவாக மதிக்கப்படுகிறது. ஆற்றுப் பாசனத்தில் விளையும் நெல்லை ‘சாளி’ என்று அழைத்தனர். இந்த நெல்லின் பெயரில் ‘சாளியூர்’ என்னும் ஊர் இருந்ததை மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.
மருத நிலத்தில் விளைந்த நெல் ‘முடந்தை’. இதன் தாள், மூங்கில் போல நீண்டும், பருத்தும் இருக்கும் என்கிறது பதிற்றுப்பத்து.
மேட்டு நிலத்தில் விளைகிற நெல் ‘தோகை நெல்’ என்றழைக்கப்படுகிறது. குளத்துப் பாசனத்தில் விளைகிற ‘வெண்ணெல்’ பற்றி அகம், புறம், குறுந்தொகை நூல்கள் குறிப்பிடுகின்றன.
செந்நெல் மற்றும் செஞ்சாலிநெல்
மருதத்தில் பயிரிடப்பட்ட நெல் செந்நெல் அல்லது செஞ்சாலி நெல் எனப்பட்டது. இந்த சிவப்பரிசி நெல் இப்போது மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.
நன்னீரில் வளரும் ஒரு வகை மீனுக்கும் செந்நெல் என்று பெயர் உண்டு.
சிவப்பு அரிசியின் – மருத்துவ நன்மைகள்.
செந்நெல் – சிவப்பு நெல், செஞ்சம்பா’ என்பதும், செஞ்சாலி என்பதும் இதுவே.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்… சிவப்பு அரிசிக்கு உண்டு.
சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. ‘மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.
சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, ‘காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.
கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் – ‘மட்ட அரிசி’. அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.
பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு
வெளியே இருக்கும் உமி (Husk);
உள்ளே இருக்கும் தவிடு (Bran),
கரு (EMbryo);
கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன.
சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.
எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் – எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து – சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம்,பாஸ்பரஸ் போன்ற கனிமங்கள் – மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித்திருக்கின்றன…
சிவப்பு அரிசியில் மானோகோலின் – கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாசு(ஸ்)டேடின்’ (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.
செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.
‘சிவப்பு பூஞ்சண அரிசி’ (Red yeast rice) என்று இதற்குப் பெயர்.
சர்க்கரை நோய்,
ரத்தக்கொதிப்பு,
ஈரல் வியாதிகள்,
பித்தப்பை கற்கள்,
ஆஸ்துமா மற்றும்
பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து.
இவ்வளவு பெருமைகள் வாய்ந்தது சிவப்பு அரிசி..
நம் ஊர் மக்கள் வெள்ளை அரிசியின் நிறத்திலும், மணத்திலும் சுவையிலும் மயங்கி, சிவப்பு நெல் விவசாயத்தை 1930-க்குப் பிறகு பெருமளவில் கைவிட்டனர்.
தண்ணீர் அதிகம் தேவையில்லாத, ரசாயன உரம் தேவையில்லாத, பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையில்லாத, பல்வேறு அற்புத மருத்துவ குணங்களை உடைய, ருசியான, மலிவான சிவப்பு அரிசிக்கு நாம் ஏன் மாறக்கூடாது?
நாம் இழந்த பொக்கிஷ விதைகள்
வெண்நெல், ஐவனநெல் போன்றன அண்மைக்காலம் வரை இருந்தன. யானையை மறைக்கும் அளவுக்கு வளர்ந்த நெற்பயிர் கற்பனை அல்ல. 5 அடி உயரத்திற்கு மேல் வளரும் இயல்புடைய அரிக்கிராவி, குடைவாழை 1950ஆண்டுகளில் கூட பயிரிடப் பட்டிருக்கின்றன.
சம்பாவும் வகைகளும்
சம்பா என்ற நெல்வகை பயிரிடும் பருவமே சம்பாப் பட்டம் (ஆகஸ்ட்) எனப்பட்டது. இந்த நெல்லைப் புழுதியிலும் விதைக்கலாம். நாற்றங்காலிலும் நடலாம்… சீரகச் சம்பா விதைக்கும் முன் கருவேப்பிலை தழையைப் பொடியாக வெட்டி வயலில் போடுவர். இதன் அரிசிச் சாதத்தில் கருவேப்பிலை மணம் கமழும். இது சம்பார், ரசம் குழம்பு ஊறிச் சாப்பிட மிகவும் ஏற்றது.
குறுவை
குறுவை என்ற நெல்லை ஜீன் மாதம் பயிரிடுவர். இதன் வைக்கோல் முதல் தரமானது. குறுகிய நாட்களில் இது பயிராகி விடும்
அரிக்கிராவி
5 அடி உயரம் வரை வளரும் நெற்பயிர். வைக்கோல் அதிக அளவில் கிடைக்கும். இதை நம்பிக் கால்நடைகள் வளர்க்கலாம். இது மிகப் பழைய நெல் ரகம்
நெல் ஜெயராமன் அரிய முயற்சி.
திருத்துறைப்பூண்டி பக்கத்தில் உள்ள கட்டிமேடு கிராமத்தில் திரு ஜெயராமன் அவர்களின் விதைப் பண்ணையில் மீட்டெடுக்கப்பட்ட விதைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வருடமும் இங்கு வந்து விதையை பண்ட மாற்று முறையில் கைமாற்றிக்கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் இருக்கிறது
மருத்துவக் குணம்.
காட்டுயானம் கூடுதல் மருத்துவக் குணம் கொண்டது. இதன் அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலத்துக்கு (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால், எவ்வகை நோய்க்கும், மற்றும் நீரிழிவு நோய்க்கும் நல்ல பலன் அளிக்கக்கூடியது..
இந்தக் காட்டுயானம் பச்சரிசிக் கஞ்சியுடன் (Rice Porridge), கறிவேம்பு இலையை கொத்தாகப் போட்டு மூடிவைத்து மறுநாள் காலை உணவுக்கு முன் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டப் புண் ஆறுவதாக கூறப்படுகிறது. மேலும் காட்டுயானத்தின் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மை உள்ளது தொடர்பாக, ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நெல் ரகம் 7 அடி வரை உயரம் வளரக்கூடியது. ஒவ்வொரு கதிரிலும் நெல் மணிகள் கொத்துக் கொத்தாக வளரும்.
7 அடி உயரம் வளர்ந்த காட்டு யாணம் நெற்ப்பயிர்.

உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்.. பாரம்பரிய நெல் அரிசி கொண்டிருக்கும் நற்குணங்களையும் தரும் நண்மைகளையும் பார்ப்போம்.
பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் அதன் பயன்கள்
நம் மண்ணில் விளைந்த எண்ணற்ற பாரம்பரிய நெல் வகைகள் அமெரிக்காவுக்கும், பிலிப்பைன்ஸுக்கும் கொண்டு போகப்பட்டதாக கூறுகிறார்கள்.
ஒவ்வொரு அரிசியின் மருத்துவ குணங்களும் வேவ்வேறு தளங்களில் இருந்தது திரட்டப்பட்டவை.
கருப்பு கவுணி அரிசி:

மன்னர்கள் சாப்பிட்டது. புற்று நோயை தடுக்கவும், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கவும், ஆண்மை குறைபாடு களையவும் பயன்படுகிறது. இன்சுலின் சுரக்க வைக்கும். இரத்தக் குழாய்களை விரிவடைய செய்து இதயத்தைக் காக்கும்.
மாப்பிள்ளை சம்பா:

இந்த அரிசி சாதத்தின் நீராகாரத்தை ஒரு மண்டலம் குடித்து வந்தால் ஆண்மை பலம் அதிகரிக்கும். நரம்பு, உடல் வலுப்பெறும். சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. இவ்வரிசியை களைந்த நீரே வாய்ப்புண்,வயிற்றுப்புண் ஆற்றும்.
காட்டு யாணம் அரிசி:

நீரிழிவை கட்டுக்குள் வைக்கும். மலச்சிக்கலை போக்கும். புற்று நோயயை தவிர்க்கும்.
பூங்கார் அரிசி:

மகளிர்க்கு சுகப்பிரசவம் ஆகும். தாய்ப் பால் ஊறும்.
கருத்தாக்கர் அரிசி:

மூல நோயை குணப்படுத்தும். மலச்சிக்கலை போக்கும்.
காலா நமக் அரிசி:.

புத்தர் சாப்பிட்ட அரிசி என்பார்கள். நரம்பு, சிறுநீரகம் நலம் பெறும். இரத்தம் சுத்தமாகும்.
அறுபதாம் குருவை அரிசி:

எலும்புகள் பலம் பெரும். வலிமையுடன் இருக்கும்.
இலுப்பைப்பூ சாம்பார் அரிசி:

கால் வலியை குணமாக்கும். பக்கவாதத்தை குணப்படுத்தக்கூடியது என்கிறார்கள்.
தங்கச் சம்பா:

பற்களை வலுவாக்கி நலம் காக்கும். இதயத்தை வலுப்படுத்தம்.
Image Credits: thaaimann.com
கருங்குறுவை அரிசி:

இழந்த உடல் சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தக் கூடியது.
Image Credits: thaaimann.com
கருடன் சம்பா அரிசி:

இரத்தத்தை சுத்தமாக்கும். உடலையும் மனதையும் சுத்தமாக்கி ஆரோக்கியமாக வைக்கும்..
கார் அரிசி:
தோல் நோய்களை குணமாக்கும்.
குடை வாழை அரிசி:

குடலை சுத்த படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கிச்சிலி சம்பா அரிசி:

இரும்பு சத்து அதிகமிருப்பதால் இரத்தம் மேம்படும். சுண்ணாம்பு சத்து அதிகமிருப்பதால் பற்கள்,எலும்புகள் பலம் பெரும்.
நீலம் சம்பா அரிசி:

இரத்த சோகை நீங்கி உடல் நலம் பெருகும்.
சீரக சம்பா அரிசி :

அழகு தரும். எதிப்பு சக்தியை கூட்டி நோயிலிருந்து காக்கும்.
தூய மல்லி அரிசி :

உள் உறுப்புகள் பலம் பெறும். ஆரோக்கியம் கூடும்.
குழியடிச்சான் அரிசி:

குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊறும்.
Image Credits: nammaveedu.co.in
சேலம் சன்னா அரிசி :

தசை வலுவடையும். நரம்புகள் பலம் பெறும். எலும்புகள் உறுதி பெறும்.
பிசினி அரிசி:.

மகளிர்க்கு மாதவிடாய் சுழற்சி சரியாகும். இடுப்பு வலி நீங்கும்.
சூரக் குறுவை அரிசி:
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும் .
வாலான் சம்பா அரிசி:

கருவுற்ற மகளிர்க்கு சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு இடை மெலிந்து அழகு கூடும்; இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்..
வாடன் சம்பா அரிசி :

அமைதியான ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும்.
நல்ல நோய் எதிர்ப்பு சக்தியும், குறைந்த பராமரிப்பும், ரசாயன உரம் வேண்டாது இயற்கை உரம் மட்டுமே போதுமான நம் பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு வருகின்றன.வெளி நாட்டு ரசாயன உற்பத்தியாளர்களின் சதியை முறியடித்து நாம்தான் அவற்றை வாங்கி உண்டு நலம் பெற்றிட வேண்டும் .
நெல் வகைகளை பற்றியே தனியாக ஒரு பதிவு போடவேண்டும் என எண்ணுகிறேன்.
நெய்தல், பாலை நிலங்களை அடுத்து வரும் நாட்களில் காண்போம்.