இதுவரை ஒரு டஜன் பிள்ளை வீட்டார் வந்து பார்த்துப் போய்விட்டார்கள். எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டது போல ஒரே பாட்டுதான் பாடினார்கள். என்ன ஒவ்வொருத்தருக்கும் ராகம் வேண்டுமானால் மாறியிருக்கும்; சாகித்யம் அதேதான். "பெண் குள்ளம்" "உயரம் பொருத்தமில்லை" இன்றைக்கும் ஒரு கோஷ்டி மாலை ஆறு மணிக்கு பெண் பார்க்க வரப் போகிறது.
முதிர் கன்னி
"உன் பாரம்தான் இறங்கிடிச்சே. இப்பவாவது வரன் தேடலா மில்லியோ" "அம்மா,கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல கேள்வி. கட்டிக்க யார் வருவாரென்பது தான்.. என் வயசு இப்போ முப்பத்தேழு. சமவயசுன்னு பார்த்தாலும் வரனுக்கு இரண்டாம் தாரமாத்தான் வாழ்க்கைப் படவேண்டியிருக்கும்"
பேச்சாயி(ரத்னராஜு)
அம்மா வென்று அழைக்க அனைத்துத் தகுதியும் உள்ளது. அதைவிட சிறுவயதிலிருந்து பேச்சாயி என நான் கூப்பிடுவதையே செவி கொள்ளாமல் சந்தோஷமாகக் கேட்கும்.அம்மா வென்றுதான் கூப்பிடவில்லை "வாங்க போங்க" என்று மரியாதையாகவாவது கூப்பிடலாமில்லையோ ? அதுவும் இல்லை. "போ " "வா "; என ஒருமையில் தான் கூப்பிடுவேன். எனக்கென்னமோ பேச்சாயிக்காகவே என்னைப் பெற்றதாய் விட்டுச் சென்றது போலத் தோன்றுகிறது. கோவில் சுவற்றில் ஆலமரம் முளைக்கும் ரகசியம் போன்றது இது.