"'ஜீவனாம்சம்' சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' இதழில் 1959-60 இல் வெளிவந்துள்ளது. முன்னுரையில் ஆசிரியர் இந்த படைப்பிற்கான நடப்பு ஆதாரம் உண்டு என்பதோடு அது என்ன என்பதையும் கொடுத்துள்ளார். அதை அப்படியே தராமல் கதைக்கு ஜீவனாக ஒரு இழையை மட்டும் எடுத்து அழகாக முழுக்க முழுக்க சாவி்த்திரி என்ற நாயகியின் மன போராட்டம் வழியே கதையை கொண்டு சென்று...."