"ஆத்திகம் நாத்திகம் பேசாதீர்கள் அப்டீன்னு ஒரு போர்டை வச்சிடு ராமா" என்றான் பிச்சாண்டி. "வச்சிட்டா மட்டும் அப்டிய கேட்டுடப் போறீங்களாக்கும்" என்றான் ராமன். நேற்றைக்கு நடந்தத மனசில வச்சிதான் ராமன் பேசுறான்னு நல்லாவே தெரியுது. அது விசயமா மேல் பஞ்சாயத்து பண்ண பிச்சாண்டி வந்திருப்பதையும் ராமன் யூகித்து விட்டான்.
ஓகே மாப்பிள்ளை
அந்த ஊரிலேயே சேகர்தான் முதல் பட்டதாரி; அவனுக்கு கடிதம் எழுதுபவர்கள் கே.சேகர் என எழுதி அவமதிக்கக் கூடாதாம். கே.பிஏ என்று எழுதினால் கடிதம் கதறிக் கொண்டு அவன் வீட்டில் வந்து விழுமாம்!
தமிழர் கட்டட விந்தை Tamil Architecture (தொடர்) – பகுதி 1
தமிழ் மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் அநேக கோவில்களை எழுப்பி, அதன் வழி எண்ணற்ற அறப்பணிகளை ஆற்றி வந்தார்கள். கோயில்கள் தமிழருடைய கட்டடக்கலையின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்தன. பிரசித்தி பெற்ற கோயில்களைத்தான் நாமறிவோம். அதிகம் பேசப்படாத கோயில்களின் கட்டடக் கலையின் சிறப்பை இயன்றவரை பகிர்ந்திட முனைகிறேன்.
ஒரே காதல் ஊரில் இல்லையடா
"உன்னோட கதைகள்ள வருகிற கற்பனைப் பெண்ணோட கண் அதப் பேசிச்சு, மூக்கு இதப் பேசிச்சு அப்படின்னு எழுதரியே, நிஜத்தில உள்ள பெண்ணோட கண் பேசுறது உனக்கு தெரியாதா".. காவியா.
இரண்டாம் பென்னி குயிக்
'ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்'னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.
பிடிவாதக்காரி
நட்பாக இருந்த வரையில் உரிமையாக இருந்தது, உறவென்று ஆன பின் பகையாக மாறிவிட்டது. பார்க்கவும் பேசவும் இல்லாமலே ஒன்பதாண்டுகள் ஓடிவிட்டன. இப்போதும் வந்திருக்க மாட்டேன், கேள்விப்பட்டவைகள் என்னை கட்டாயமாக வரவைத்து விட்டது.
கிராமிய விழாக்கள் – பகுதி 2 : பாரதக் கதை
திண்பன்டமாக முறுக்கு, கடலை மிட்டாய், வறுத்த சோளம், பயறு, பொரியரிசி, பட்டாணி, உப்புக்கடலை, நிலக்கடலை இன்னும் பல உண்டு. உட்கார்ந்திருப்பவர்கள் நேரம் செல்லச் செல்ல சாய்ந்து உட்கார்ந்து, சரிந்து படுத்து, தூங்கி விடுவார்கள்.
தோல் பூக்கள்
" எங்கிட்ட இருபதுதான் இருக்கு; ஒன்னு மட்டும் போதும் " " வேலைய ஒழுங்கா செய்ஞ்ச திருப்தி வேணாமா. பத்து ரூபா நாளைக்கு குடுங்க" இரண்டு காலணிகளையும் சிறப்பாக சரி செய்து கொடுத்து இருபது ரூபாய்களை வாங்கிக் கொண்டான்.
ஆணவம்
அந்தப் பெண் எல்லாவற்றையும் தெளிவாக வாக்குமூலம் கொடுத்து விட்டு இரண்டு நாளில் இறந்து போய் விட்டாள். வழக்கு நடந்தது. சம்பந்தம் சாட்சி சொன்னான். கூலிப்படை ஆட்களை அடையாளம் காட்டினான். மாவட்ட நீதிமன்றம் பண்ணையார், அவர் மனைவி, மைத்துனன், மேலும் கூலிப்படை ஆறுபேர் என எல்லாரும் குற்றவாளி என்று தீர்ப்பளித்து தனித்தனியே தண்டனையும் அளித்து விட்டது. உயர்நீதி மன்ற மேல் முறையீட்டில் போதிய ஆதாரமில்லை, குற்றம் சான்றுகளுடன் நிரூபிக்கப் படவில்லை என கூலிப்படை சேர்ந்தவர்களைத் தவிர அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.
நாற்று நடவு
நாற்று முடி தூக்கிப் போடுபவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையேல் அவரை நடுவில் வைத்து சுற்றிலும் வட்டமாக நாற்று நட்டு விடுவார்கள். நாற்றைத் தாண்டி வரக்கூடாது என்பதால் அவர் அப்பெண்களுக்கு பணம் கொடுத்தாலே நட்ட நாற்றை எடுத்து வழி விடுவார்கள்.
கிடை மாடுகள் CATTLE HERD
மனுநீதி என்ற திரைப்படத்தில் வடிவேலுவை துரத்தும் கூட்டத்தை குறித்து ” இது என்ன கிடை மாடுகள போல இந்த ஓட்டம் ஓடுறானுக” என்ற வசனம் பேசுவார்.
நல்லேர் கட்டுதல்
வழக்கமாக வைகாசி மாதம் நிமித்தகர் அல்லது சோதிடர் மூலம் நல்லநாள் பார்ப்பார்கள். அந்த நல்லநாளில் நல்லேர் கட்டுவார்கள்.
ஆடிப் பெருக்கு(03.08.21)
ஆடிப் பெருக்கு - காவிரித்தாய்க்கும் மகளிர்க்குமான திருவிழா. காவிரி பாயும் பகுதிகளிலெல்லாம் ஆடி மாதம் பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு வழிபாடு நடைபெறும்.
அமெச்சூர் நடிகர்கள்
"யாரோ வீட்டைச் சுற்றிவருவது போல் அரவம் கேட்டது. உற்றுக் கேட்டதில் 'ஜல்..ஜல்' என்று ஒரே ரிதத்தில் கொலுசின் ஓசை. சப்தமெழுப்பாமல் தெருப்பக்க ஜன்னல் திரையை லேசாக விலக்கி சிறு இடைவெளி வழியே பார்த்தேன்."
அப்படியே நில்
"அன்னை தெரசா மாதிரி வேண்டாம். சுயமரியாதைச் சுடர் மணியம்மை மாதிரி சேவை செய்ய விரும்புகிறேன்" "நீ சுற்றி வளைத்துப் பேச வேண்டாம். எனக்கோ வயது நாற்பத்தைந்து; உனக்கு இருபத்தேழு. என் மகளை விட ஐந்து வயதுதான் நீ மூத்தவள். இது பொருந்தாக் காமம். என் மனம் இதற்கு ஒருநாளும் ஒப்பாது"
தக்காளிச் சட்னியும், இரத்தமும்
"இன்னும் ஒருத்தன் மட்டும் வந்து மாட்டவில்லையே என்று எதிர் பாரத்துக் கொண்டிருக்கும் போதே ஆடு தானே வந்து தலை கொடுத்தாற் போல வந்து மாட்டிக் கொண்டான். வண்ணம் பூசப்படாதவனாக ஃப்ரெஷ்ஷாக வந்தவனை வண்ணத்தில் குளிப்பாட்டி விட்டார்கள். பாவம் நிராயுதபாணியாக வந்து மாட்டிக் கொண்டான்"
மதுவும் கொரானாதான்
"உயிரைக் குடிப்பது என்றானபின் மதுவென்ன? கொரானாவென்ன? இரண்டும் ஒன்றுதான்" "அரசாங்கமே இப்போதைக்கு இப்போதையை மீணடும் திறந்து விட்டிடாதே! நிறைய குடும்பங்களில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைக்கட்டும்."
தனிமரம்
"பறவைகளுக்கிடையே வர்ணபேதம் இல்லை; அதனால் அவை மரத்தின் மேலே தங்குகின்றன. ஆனால் மனிதர்க்குள் வர்ணபேதம் உண்டு; அதனால் அவர்கள் மரத்தின் கீழே இருக்கிறார்கள். இந்த வர்ணபேதம் ஒழிய எத்தனை தலைமுறை ஆகுமோ. மரத்தின்மீது பறவைகள் சமத்துவமாக இருப்பதைப்போல, மண்ணில் மனிதர்கள் சமத்துவமாக வாழ்வதெப்போ?"
ரமாவின் கணா
இதுவரை ஒரு டஜன் பிள்ளை வீட்டார் வந்து பார்த்துப் போய்விட்டார்கள். எல்லாரும் சொல்லி வைத்துக் கொண்டது போல ஒரே பாட்டுதான் பாடினார்கள். என்ன ஒவ்வொருத்தருக்கும் ராகம் வேண்டுமானால் மாறியிருக்கும்; சாகித்யம் அதேதான். "பெண் குள்ளம்" "உயரம் பொருத்தமில்லை" இன்றைக்கும் ஒரு கோஷ்டி மாலை ஆறு மணிக்கு பெண் பார்க்க வரப் போகிறது.
முதிர் கன்னி
"உன் பாரம்தான் இறங்கிடிச்சே. இப்பவாவது வரன் தேடலா மில்லியோ" "அம்மா,கல்யாணம் வேண்டுமா வேண்டாமா என்பதல்ல கேள்வி. கட்டிக்க யார் வருவாரென்பது தான்.. என் வயசு இப்போ முப்பத்தேழு. சமவயசுன்னு பார்த்தாலும் வரனுக்கு இரண்டாம் தாரமாத்தான் வாழ்க்கைப் படவேண்டியிருக்கும்"
பேச்சாயி(ரத்னராஜு)
அம்மா வென்று அழைக்க அனைத்துத் தகுதியும் உள்ளது. அதைவிட சிறுவயதிலிருந்து பேச்சாயி என நான் கூப்பிடுவதையே செவி கொள்ளாமல் சந்தோஷமாகக் கேட்கும்.அம்மா வென்றுதான் கூப்பிடவில்லை "வாங்க போங்க" என்று மரியாதையாகவாவது கூப்பிடலாமில்லையோ ? அதுவும் இல்லை. "போ " "வா "; என ஒருமையில் தான் கூப்பிடுவேன். எனக்கென்னமோ பேச்சாயிக்காகவே என்னைப் பெற்றதாய் விட்டுச் சென்றது போலத் தோன்றுகிறது. கோவில் சுவற்றில் ஆலமரம் முளைக்கும் ரகசியம் போன்றது இது.
என் மூச்சுக் காற்று (ரத்னராஜூ)
அம்மா கொடுத்த மூக்கைத் துளைக்கும் அரோமா காஃபியை டம்ளரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக டபராவில் ஊற்றி ஊற்றி உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு இடப்புறம் கொஞ்சம் தள்ளி மரப்பெஞ்சில் நான். அம்மாவோ அடுப்படியில், ஆனால் காதுகள் மட்டும் இங்கே. ஓசை யெழுப்பாமல் டிபன் வேலை நடக்கிறது. ஓசை வந்தால் நாங்கள் பேசுவது தெளிவாகக் காதில் விழாதல்லவா. சிறு சப்தம் கேட்டாலும் வேலையை நிறுத்திவிட்டு பேசுவதைக் கவனிப்பாள். ***** அன்று நான் , இன்று என் மகன். .
மானமிகு மணி (ரத்னராஜூ)
ஒரு நாயின் மனக் குமுறல்