இன்றைய வேகமான உலகில் பணம் பணம் என்று பணத்தை துரத்தியே பலரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தில் ஒரே பாடலில் மூன்றே நிமிடத்தில் பல வேலைகள் செய்து பணக்காரனாக ஆவதுபோல் நிஜ வாழ்க்கையில் முடியாதென்பதை உணர்ந்திருப்போம் . உண்மையில் பங்குச்சந்தையின் நுட்பம் தெரிந்தவர்க்கு இது சாத்தியமாகலாம்.
இலக்கியம்
உலகின் பல பகுதிகளில் மக்கள் நிலையான வாழ்வு தேடி அலைந்த கொண்டிருக்க , நிலையான அரசு சமுதாய ஒருமைப்பாடு என்பதைத் தாண்டி இலக்கிய வளமும் பெற்று திகழ்ந்தது நம் தமிழ் சமூகம்.
நெஞ்சின் அலைகள்
அகிலாண்டம் என்ற தன் பெயரை அகிலன் என மாற்றிக்கொண்டவர். ஞானபீட விருது பெற்றவர். என் அபிமான எழுத்தாளர். ஒவ்வொருமுறை பள்ளி விடுமுறையின் போதும் அப்பா சேகரித்து வைத்திருக்கும் ராணிமுத்து நாவல்கள் தான் என் உலகம். அதனால் ஒவ்வொரு நாவலையும் பலமுறை படித்திருப்பேன். அப்படி படித்ததில் மிகப்பிடித்த நாவல் அகிலனின் நெஞ்சின் அலைகள் . எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது. காலங்கள் மாற இருக்குமிடத்தில் நூலகத்திலிருந்து என்உலகத்தை தொடர்ந்துகொண்டேன். சென்ற ஆண்டு புத்தகத்திருவிழாவில் நாவலை (புதையலைக் கண்டதுபோல்)வாங்கியபின் மூன்று முறை படித்தாகிவிட்டது.
சேரமான் காதலி
பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு? என்பார்கள் அதன்பொருள் அதன் மணமே காட்டிக் கொடுத்துவிடும் என்பதாகும். அதுபோல இன்றும் தொலைக்காட்சியில் நடத்தும் பாட்டுப் போட்டிகளில் கவிஞரின் பாடல்கள் பாடப்படுவதும் கொண்டாப்படுவதும் அவை வாடாத பூக்களாய் என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருப்பதே சாட்சியாகும்.
தொல்காப்பியப் பூங்கா
ஆசிரியரைப்பற்றி ஒரேவரியில் சொல்வதானால் இலக்கியத்திலிருந்து இலக்கணம் என்பார்கள் அதுபோல முத்தமிழறிஞர் என்ற அவருடைய பெயரே அவரின் சிறப்பை சொல்லி நிற்கிறது.
தம்பையா பிள்ளை
வாழ்க்கையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் சுவாரசியமாக அப்போதைக்கு இல்லாதவை பின்நாளில் மிக சுவாரசியமாக இருக்கும்; சில நேரங்களில் புன்முறுவலையும், வெடிச் சிரிப்பையும், நெகிழ்ச்சியையும் தரும்.