பொறமை , எளிமை ,சுயநலம்,தேடல், நம்பிக்கை ,பிறப்பு ,மாணவர்கள் போன்ற பல தலைப்புகளில் உள்ள விளக்கங்கள் ,கருத்துகளும் சிறப்பாக உள்ளன. முடிவெடுக்க முடியாது தடுமாறுவர்க்கு இந்த புத்தகத்தை படிப்பது சிறப்பாக உதவும்.
மீண்டும் ஜீனோ
முதல் பதிப்பு1986.என்னிடம் இருப்பது 8-ஆம்பதிப்பு 2014. பத்து வருடங்கள் கடந்த நிலையில் இப்போது இ்ன்னும் எத்தனைபதிப்பு வந்துள்ளதோ தெரியவில்லை. இயந்திரமனிதன் (ரோபோட்) மெல்ல மெல்ல மருத்துவம், விளையாட்டு, உணவகம் என உள்நுழைந்து கொண்டிருக்க, அதன் அடுத்த கட்ட தொழில் நுட்பமாக (சாட்Gஜிபிடி) செயற்கை நுண்ணறிவு . வருங்காலத்தில் மக்கள் இயந்திரமாக செயற்கை முறையில் மாற்றப்பட்டு, கருத்து சுதந்திரம் தடுக்கப்பட்டு , அடிமைகளாக ஆளப்பட்டு, இயந்திரங்களே ஆளும் நிலைவந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ததன் விளைவே இந்தக் கதை. ஒருமாற்றமாக திரைப்படம் போல் இந்த விமர்சனத்தை பார்ப்போமே!