வாசித்தது:ஏழாம் சுவை
ஆசிரியர்:மருத்தவர் கு.சிவராமன்
பக்கங்கள்:104
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
விலை: 80ரூபாய்
வகை: மருத்துவக் கட்டுரைகள்
மருத்துவர் சிவராமனைப் பற்றி தனியே சொல்லத்தேவையில்லை.
பராம்பரிய உணவுகளுக்குத் திரும்பச் சொல்லும் அவரின் ஏதாவது ஒரு பேச்சையாவது நாம் நிச்சயம் கேட்டிருப்போம். ஒருசிலர் அதனை செயல்படுத்தியும் இருப்போம்.
இந்த புத்தகத்தில் முதல் கட்டுரையின் தலைப்பு ‘வாதம், பித்தம் கபம்- திரிதோட உணவு’.
நம் உடலில் அடிப்படையாக உள்ளவை பற்றியது.
புத்தகத்தின் கடைசித் தலைப்பு ‘காதல் தரும் உணவு’.
நம் மனதோடு தொடர்புடையது.
உடலும் மனமும் ஒருங்கே ஒழுங்காக அமைந்துவிட்டால் வியாதி விடையாற்றிச் சென்றுவிடும்.
உடல் ஆரோக்கியத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியமே பழைய மொழியான சுவர் இருந்தால்தன் சித்திரம் என்பது போல உடலும் மனமும் சுவரும் சித்திரமுமாக அமைய வேண்டும் .ஒன்றைவிட்டு ஒன்றில்லை இந்த கருத்தையே இந்த புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையிலும் மருத்துவக் குறிப்புகளுடன் ஆசிரியர் சிவராமன் அளித்திருக்கிறார்.
உதாரணத்திற்கு,
‘அரிசிச்சோறு ‘
ஆசிரியரின் எழுத்தில் இருப்பதை அப்படியே தருகிறேன்.
அரிசிதான் உடல் எடை கூடும் என்றால் பத்தாயிரம் வரலாறு எத்தனை குண்டர்களைச் சந்தித்திருக்கும். சித்தன்ன வாசல் குகை ஓவியங்களிலோ , எந்தக்கோயில் சிற்பங்களிலோ உழைக்கும் கூட்டம் செல்லத் தொப்பையுடன் இருப்பதைப் பார்த்திருப்போமா?.சர்க்கரை வியாதி குறித்த சங்கதிகள் இலக்கியத்தில் ஏராளம் இருந்ததுண்டா?.பின் எப்போது வந்தது இந்தத் தொப்பை?.
சில்கி பாலிஷ் போட்ட வெளுத்த அரிசியை அளவறியாமல் தின்று, டி20மேட்ச் போன்ற பரபரப்பு வாழ்க்கையில் ,கனவில் மட்டுமே உடற்பயிற்சி செய்யும் கனவான்கள் மெல்ல வளர்க்கும் தொப்பைக்கு , கடைசியில் கண்டறிந்த மட்டாள் காரணம் அரிசி.பிரச்சனை நம் வாழ்வியலிலும் பரபரப்பிலும் உள்ளதே ஒழிய அரிசியில் ஔிந்திருக்கவில்லை என்பதை அவர்கள் இன்னும் அறியவில்லை.
விளைந்த நெல்லை , மழலைப் பேரக்குழந்தைக்குக் கஞ்சி, வளரும் பிள்ளைக்கு பச்சரிசி, வீட்டுப் பெரியோருக்குக் கைக்குத்தல் புழுங்கல், மாலைச்சிற்றுண்டியாக பொரி,இரவில் ஞவரை அரிசிக் கஞ்சி என ஒரே பருவத்தில் விளைந்த நெல்லை தேவைக்கு ஏற்றபடி , தேவைப்படும் நபருக்கு ஏற்றபடி தயாரித்தது நம் பாரம்பரியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைவிட எப்படி நம் பராம்பரியத்தையும் பரிவையும் பிரியத்தையும் விளக்க முடியும்
ஒருபானை சோறுக்கு ஒருசோறு பதமாக இந்த ஒருகட்டுரையே சான்றாகும்.
மருத்துவருக்கும் மருத்துவத்திற்கும்
மீதிக் கட்டுரைகளைப் படித்து கடைபிடித்து, அறிவில் தெளிந்து, ஆரோக்கியத்தில் திளைத்திடுங்கள். .
Leave a comment