நெஞ்சே எழு

வாசித்தது:  நெஞ்சே எழு
ஆசிரியர் :Sergio Bonelli
பதிப்பகம்: லயன் காமிக்ஸ்
பக்கங்கள்:  230
விலை:    150 ரூபாய்
வகை: சித்திரக்கதை
வெளியிடுவோர் :பிரகாஷ் பப்ளிஷர்ஸ்
தமிழில் :  S. விஜயன்
சித்திரம்: Villa

 ஒவ்வொருவர் வாழ்விலும்  குழந்தைப்பருவ கதைகேட்கும், படிக்கும்  பருவத்தில்  நிச்சயம் ஆரம்ப வாசிப்பாக சித்திரக்கதைகள்  படித்து மகிழ்ந்திருப்போம். ஒற்றைக்கை மாயாவி கதை படிக்காத குழந்தைப் பருவம் இருக்க முடியுமா?.
இந்தக் கதை அந்த கால  குழந்தைப் பருவத்திற்கே  அழைத்துச் சென்றுவிட்டதென சொல்லலாம்.
கதை:
 அரிசோனாவின் டக்சன் நகரில்  ஒரு காலைப் பொழுது அது!
டம்  …டம்…டம்  இப்படித்தான் கதை ஆரம்பமாகிறது.

தீவீரவாத கும்பலைச்சேர்ந்த  ஹாரி லோகன்  தூக்குத் தண்டனை  விதிக்கப்பட்ட கைதி. அவனை அடைத்து வைத்திருக்கும்  இடமோ ஒரு வங்கி.  சேப்டி லாக்கர் போன்று விநோதமாக அவனை அடைத்து வைத்திருப்பதை  வேலை செய்பவர்கள் பேசிக்கொள்கிறார்கள். டம்…டம் சத்தம் தூக்குமேடையைத் தயார் செய்யும்  வேலைஆட்கள், ஆணியை உளியால் அடிக்கும் சத்தமாகும். 

இந்த சத்தம்  தன் தவறுக்கு தண்டனை என்று அவனை தூங்கவிடாது என்றும் ஷெரிப் டாம் ரூபர்ட்,துணை ஷெரீப்  ஸ்டீவ், வயதான  டஃப்பி, இந்த மூவருக்கு இடையேயான உரையாடலில், டூம்ஸ்டோன் என்ற இடத்தில் உள்ள    வங்கியில் காசாளராக பணியாற்றிக் கொண்டிருந்த ஸ்டீவின் தங்கைக் கணவனை  ஹாரிலோகன் கொன்றுவிடுகிறான். ஸ்டீவிற்கு அதனால் தனிப்பட்ட முறையிலும்  அவன் மீது கோபம்,நாளைய தினம் அவனைத்  தூக்கிலிடுவது  தனக்கு எந்தவிதத்திலும் பரிதாபத்தை ஏற்படுத்தாது   என அனைத்து தகவல்களையும் அறிகிறோம்.

இரவுக்குள் அவனை தப்புவிக்க அவனது ஆட்கள் முயற்சிப்பார்களென காவல் அதிகமாகிறது. ரயிலில், குதிரையில் என்று நகருக்குள் வரும் ஒவ்வொருவரும்  சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.
ரயில் பயணியாக அப்போது மனுவேல் என்றுஒரு பாதர் வருகிறார் .’  உன் கடமையைச் செய்  மகனே என்னைச் சோதனை செய் ‘என்றுகூற  ,எங்கோ பார்த்தது போல் இருக்கிறதென ஸ்டீவ்  சொல்ல ,பாதர் தன் ஊரின் பெயரைக்  கூறியும் , பார்த்த ஞாபகம் இல்லை என ஸ்டீவ்   சொல்கிறார்.

சந்தேகத்தின் பேரில் மற்றொரு பயணியை அடித்துக் கீழே தள்ளிவிடுகிறார்.
இருப்பினும் எதிரி என்ன திட்டம்  வைத்திருக்கிறான் என்று தெரியாத நிலையில்,
டெக்ஸ் வில்லர், கார்சன்  என்ற ரேஞ்சர்கள்  பாலைவனத்தை அடுத்திருக்கும்  மோட்டலுக்கு  எதிரியை எதிர்பார்த்து வர,  நம்மையும் ஏமாற்றாது வருகின்றனர்.

அடுத்து என்ன  டமால் ,டுமீல் துப்பாக்கி  குண்டுகளின் சத்தம் ,அங்குள்ள குதிரை இலாயத்தில் கேட்க அனல் பறக்க அனலரசு சண்டைக்காட்சி அரங்கேற , தொடர்ந்து பாலைவனத்தை குறிவைத்து வேறுவழியில் எதிரியை சந்திக்க திட்மிட்டு  டெக்ஸ் வில்லரும் , கார்சனும்  செல்ல… திலீப்சுப்பராயன் சண்டைக்காட்சி 
மீதி காட்சிகளுக்கு யார் யார்  சண்டைக் காட்சி பொருத்தமாகும் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
அழுத்தமான கதையமைப்பு கதைகள், காதல் கதைகள் ,குற்றம் ,திகில் கதைகள் படிப்பதிலிருந்து விலகி இதுபோன்ற கதைகள் படிப்பதும் நெஞ்சே எழு என்று மனதை எழுப்புவது உண்மைதான் !
படியுங்களேன்!

ரசித்தது:
ஙஙீஙீ ஙீ? குதிரையின் சத்தம்.
டூமீல், சர்க்க்,தொபுக்,கும் , தொம்..இவை போன்ற சத்தங்களை எழுத்தில் படிப்பதுதான் சித்திரக்கதையின்  அழகே!!

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑