குடும்ப நாவல்கள் எழுதுவதில் லஷ்மி தனித்துவம் பெற்றவர். குடும்பத்தின் ஆணிவேரான பெண்ணுக்கு குடும்ப உறவுகளே கொடுக்கும் குடைச்சல்கள் அதை ஒட்டிய பெண்ணின் போராட்டங்கள், அதிலிருந்து விடுபட உதவும் சில நல்ல இதயங்கள் இதை அடிப்படையாக வைக்கப்பட்ட கதைகள்.
நாயகி ஸ்வேதா,நோயாளிஅம்மா தம்பி தங்கை பார்த்துக்கொள்ள வேண்டி பட்டதாரியான போதும் வேலைக்குச் செல்ல இயலாதவாளாக கிராமத்திலேயே இருக்கிறாள்.
ஊரில் நாட்டுவைத்தியம் செய்யும் சந்திரமௌலி தாத்தாவின் பெயரன் அருணும் ஸ்வேதாவும் விரும்புகின்றனர். அருண் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறான்.
வீட்டுத் தலைவன் தவறிட,தலைமகன் தண்ணீரோடு சென்றிட ,மூன்றுவேளை உணவுக்கு உத்திரவாதம் என்ற நிலையில், மூன்று குழந்தைகளுக்குத் தகப்பனான வரனுக்கு , மாமியார் மாமனார் ,நாத்தனார் என்ற கூட்டுக் குடும்பத்தில் மூத்தமகளை திருமணம் செய்துகொடுக்கின்றனர்.
இரண்டாம் தாரமாக மணமுடித்தது, தன்னை தங்கை போல் பட்டதாரி ஆக்கவில்லை என்று பிறந்தவீட்டுக்கு வரும்போதெல்லாம் அம்மாவிடம் தன்பக்க நியாயத்திற்காக பவித்ரா சண்டையிடுகிறாள். முதல்மனைவியை இழந்து ஊர்சுற்றியாக இருக்கும் நாகமணி சூழ்நிலையை சாதகமாக்கிக் கொண்டு ஸ்வேதாவை மறுதாரமாக்கிக்கொள்ள முயல, ஸ்வேதா முகத்திலடித்தாற் போல் மறுத்துவிடுகிறாள். ஊரோடு மாப்பிள்ளை, வேறு தொந்தரவுமில்லை அவனுக்கு என்ன குறை திருமணம் செய்து கொள் என்று கூற எரிச்சலாகி ஸ்வேதா தனக்குத் திருமணமே வேண்டாம் மென்கிறாள்.
அருணமிடருந்து ஆரம்பத்தில் வந்த ஒரிரு கடிதங்களைத் தவிர ஏதும் தகவலில்லையே என குழப்பத்தில் இருக்கிறாள். பள்ளிப்படிப்பு கூடமுடிக்காத பெண்பித்தனான ராமஸ்வாமி என்பவன் (சென்னையில் வசதியான நிலையில் இருப்பவனைப் போன்ற தோரணை ) தன்கடனுக்காக கிராமத்தில் இருக்கும் பூர்வீக வீட்டை விற்க வரும்போது ஸ்வேதாவைப் பார்த்து மயங்க , நாகமணி, பவித்ராவிடம் தூபம் போட, ஸ்வேதா தவிர அத்தனைபேரின் சம்மதத்துடன் ராமஸ்வாமியுடன் திருமணம் நடந்துவிடுகிறது.
ஊருக்கு கிளம்பும் நேரத்தில் தனியே இருக்கும் ஸ்வேதாவிடம், திருமணத்தை நிறுத்தச்சொல்லி ஸ்வேதா கேட்டபடி, அருண் அனுப்பிய தந்தியும் ,தான் வரும் நாளின் தேதிகுறிப்பிட்டு எழுதிய கடிதத்தையும் (தபால்காரரிடம் தன் அத்தைவீடுதான் என்று சொல்லி வாங்கியதை) கொடுக்கிறான்.
தன் அம்மாவிடம் அதனைக்காட்டி அழுது ,அந்த அதிர்ச்சியில் மயக்கமாகி விழும் அவள் தலையில் அடிபட்டிட, இருவாரங்களுக்கு அவள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுரைக்க, ராமஸ்வாமி கோபமாகக் சென்னைக்கு கிளம்பிச் செல்ல, தாய் தான் தவறுசெய்தோமே?என்று கரைகிறாள். இருப்பினும் அவளை அனுப்பும்போது (அந்தக்காலத்) தாயாக உனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் எக்காரணம்கொண்டும் தனியே திரும்ப வராதே எனக்கு தாங்கும் சக்தியில்லை என்று கூறியனுப்புகிறாள்.
சென்னைக்கு வந்ததும் அவனி்ன் வண்டவாளம் பெண்கள், குடி , வருமானமின்மை என அவளுக்குத் தெரிய வருகிறது. அவன் வளர்க்கும் நாய் மார்க் எஜமானி வந்த அன்றே அவளுடன் நட்பாகிறது. அவனின் நடத்தை பற்றியும் அவன் செய்யும் வியாபாரம் என்ன என்பது பற்றியும் பெண்கள் பலரிடம் இருந்து போன் வருகிறது. மார்க்கை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஸ்வேதா ஒரு முதிய தம்பதியுடன் நட்பாகிறாள்.
இதற்கிடையில் சமந்தா என்பவள் ராமஸ்வாமியின் மனைவி என்று கூறிக்கொண்டு வருகிறாள். ஸ்வேதா சம்பளமில்லா வேலைக்காரியாகிறாள்.
ராமஸ்வாமியும், சமந்தாவும் ஒருநாள் காலையிலேயே கிளம்பிட, இரவு உட்சபச்சமாக வீட்டிற்கு வரும் ஒருவன் தான்தான் வீட்டின் முதலாளி என்றும் ,அவர்கள் ஊரைவிட்டே சென்றுவிட்டார்கள் என்றும், வாங்கிய கடனுக்கு அவளை விட்டுச் சென்றதாகவும் கொக்கரித்து அவளை நெருங்க மார்க்கின் உதவியுடன் தப்பித்து முதிய தம்பதியிடம் வந்து அடைக்கலமாகிறாள்.
வானம்பாடிக்கு தந்திரமாக வலுவில் பூட்டப்பட்ட விலங்கை அதே தந்திரத்துடன் நல்ல இதயங்களின் ஒத்துழைப்போடு உடைக்கப்பட விடுதலையாகிறாள்.
கதை இத்துடன் முடியாது.
வானம்பாடி (ஸ்வேதா) பறக்க மறு(ந்)த்திட அது மீண்டும் தன் சிறகை விரித்து பறந்ததா இல்லையா? பத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள் .
ரசித்தது:
ஸ்வேதாவை நெருங்கும் வில்லனை மார்க் ஹீரோ போன்று செயல்பட்டு அவளைக் காப்பாற்றுவது.
முகம் சுளித்தது:
ஸ்வேதா பற்றிய உண்மைகளை அவளின் தாய்க்குக் கடிதம் எழுதித் தெரியப்படுத்த துடித்து போகிறாள்.
பவித்ராவைக் கூப்பிட்டு அந்தக்கடித்தைக் காட்ட, அந்த நிலையில் கூட உலகத்தில் நடக்காததா? என எந்த பதற்றமுமின்றி அலட்சியமாக கூறுகிறாள். தானும் அதற்குக் காரணம் என்ற குற்ற உணர்வு சிறிதுமின்றி
வாடிய பயிரைக் கண்ட து பெரிய மகான் உள்ளம். அடிபட்டால் தனக்கு வலிப்பதுபோல்தான் மற்ற உயிருக்கும் வலிக்கும் என்பது சாதாரண மானிட உள்ளம். காட்டிலிருக்கும் சிங்கத்திற்கு கூட தன்னை வளர்ப்பவரின் அன்பு புரிகிறது. ஆறறிவான மனிதனுக்கு அதுதான் (கொஞ்சம்) குறைகின்றதா?
Leave a comment