ஜாவர் சீதாராமன் என் அபிமான எழுத்தாளர். ராணிமுத்து நாவல் வரிசையில் அவரின் 'நானே நான்' படித்திருக்கிறேன் மர்மக்கதை போன்று அருமையாக இருக்கும். ஏழை படும்பாடு எனும் திரைப்படத்தில் ஜாவர் என்ற பாத்திரத்தில் நடித்ததால் சீதாராமனுடன் ஜாவர் என்பது ஒட்டிக்கொண்டது.
வானம்பாடிக்கு ஒரு விலங்கு
குடும்ப நாவல்கள் எழுதுவதில் லஷ்மி தனித்துவம் பெற்றவர். குடும்பத்தின் ஆணிவேரான பெண்ணுக்கு குடும்ப உறவுகளே கொடுக்கும் குடைச்சல்கள் அதை ஒட்டிய பெண்ணின் போராட்டங்கள், அதிலிருந்து விடுபட உதவும் சில நல்ல இதயங்கள் இதை அடிப்படையாக வைக்கப்பட்ட கதைகள்.