பிசிராந்தையார்

வாசித்தது: பிசிராந்தையார்
ஆசிரியர்: பாவேந்தர் பாரதிதாசன்
வகை: நாடகம்

புரட்சிக் கவிஞர் தன்’ புரட்சிக் கவி ‘ கதையில் அருமையாக தன் சிந்தனைகளை  வெளிப்படுத்தியிருப்பார் .’குடும்ப விளக்கு’ கவிதையில் ஒரு சிறப்பான குடும்பம் எப்படி இருக்க வேண்டுமென காட்டியிருப்பார் .’அழகின் சிரிப்பு’ இயற்கை,  அழகான  காடு, மலை ,அருவி கடல் , பறவைகள் ஒவ்வொன்றிலும் தன் சிந்தனைகளைப் புகுத்தி  வர்ணித்திருப்பார்.

கதை:
பிசிராந்தையார் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது கோப்பெருஞ் சோழனும் இவர்கள் இருவருக்குமான   நட்புமே. கதையும் அந்த வரலாற்று நிகழ்வை  வைத்தே  பின்னப்பட்டுள்ளது.
வரலாற்று நாவல்கள்  சுவைக்காக   உணவுக்கு  சேர்க்கும்  உப்பு போல அளவாக கற்பனை கலந்து வரலாற்று நாயகர்களின்  பெருமை குறையாது      கதை படைப்பது . உப்பின்  அளவு கூடினாலோ   உணவு உண்ண முடியாததாகிவிடுகிறது.

புலவர்    பிசிராந்தையார்  பாண்டிய நாட்டில்  இருக்கிறார். சோழ மன்னன் கோப்பெருஞ்சோழனும்    புலவர் பெருமானும்  ஒருவரை ஒருவர் நேரில் கண்டதில்லை  இருப்பினும் ஒருவரைப் பற்றி ஒருவர்  செவிவழியாக கேள்வியுறும்  செய்திகளால்  இருவரும் ஒருவர்மீது ஒருவர்  அன்பும் மரியாதையும்  கொள்கின்றனர். 
பாண்டிய நாடு  சோழநாட்டின்மீது     படையெடுத்து வருவதாக  பொய்யாக வலுவில் சோழன் மகனே இல்லாத குளறுபடிகள் செய்து மன்னன் (தந்தையை)   பதவி விலக வேண்டுமென்றும்  தனக்கு அரியணையைத் தரவேண்டும்  என்றும் குழப்பம் விளைவிக்கிறான்.

மகன் செய்யும்  குழப்பங்களால் கோபமுறும் மன்னன் அவன் தலையை சீவிடுகிறேன் என கோபத்துடன்  புறப்பட  புலவர், அமைச்சர் , மனைவியின்  எடுத்தியம்புதல்களால் மனம் (மாறி)வெறுத்து வடக்கிருந்து உயிர்விடத் துணிவதுடன்  உள்ளத்தால் நட்பான பிசிராந்தையார்  நிச்சயம் என்னைத்தேடி வருவார் எனவே அவருக்கும்  பக்கத்தில்  இடம்  தயார் செய்யுங்கள் என மன்னன் கூற , மற்றவர்களோ புலவரென்றால்  பாடி பரிசில் பெற   வருவார். வடக்கிருந்து உயிர்விட வருவாரா ? என்று பேசுகின்றனர்.

இதற்கிடையே  பாண்டியமன்னனின் செவிகளுக்கு செய்தி  எட்ட மன்னன்  உண்மையிலேயே  படையெடுக்க ஆலோசிக்க,   அப்போது புலவர்  ,    சோழ  நாட்டை பற்றியும் , நண்பனான  கோப்பெருஞ்சோழனைப் பற்றியும்  பாடும் பாடலை  பாண்டிய மன்னன் கேட்க நேர்கிறது. பகைவனைப் பாடுகிறாரே என கோபமுறாது,  மன்னன் மனம் மாறி ,  பிசிராந்தையாரையும்  அழைத்துக்கொண்டு செல்ல  சோழனை நண்பனாக  சந்திக்க   எண்ணி புலவரைத்தேட…மீதியை பாவேந்தரின் எழுத்தில் படித்துக்கொள்ளுங்கள்.

கதையின் முடிவு தெரிந்ததாயினும்  அவரின்  நடையில் படிப்பதுதானே   அழகு!

ரசித்தது  :  ஆங்காங்கு  நிகழ்வுக்கு ஏற்ப  நாடகத்தினை கவிதையாக  கொடுத்திருக்கிறார். படித்து மகிழுங்கள்.
நட்புக்கு இலக்கணமாகச் சொல்லப்படும்  பிசிராந்தையார்  கோப்பெருஞ்சோழன் வரலாற்று நிகழ்வை ,  பாரதியின் மீது கொண்ட பற்றால் பாரதிதாசனாக  மாறிய கனகசுப்புரத்தினம்  எழுதியது மிகப் பொருத்தம் தானே! 

Leave a comment

Create a website or blog at WordPress.com

Up ↑