தீவுக்கோட்டை (DEVI COTTAH )

"இன்று மனித நடமாட்டமே இல்லாத ஊர் ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்தது என்பதறிய வியப்பாக உள்ளது..."

மணிமொழி நீ என்னை மறந்துவிடு

"சக பயணியாக கைக்குழந்தையுடன் இருக்கும்பெண் தன் பெயரை மணிமொழி என்று சொல்ல கதைநாயகி மணிமொழியைப் போல நாமும் விழிகள் விரிய..."

தமிழர் கட்டட விந்தை – 3 (TAMIL ARCHITECTURE)

"தமிழர்கள் எல்லா துறைகளிலும் அபரிமிதமான அறிவோடு இருந்திருக்கிறார்கள். அவ்வாறே  தேர்ந்த பொறியியல் நுட்பத்தோடு கட்டடக் கலையிலும் பிரம்மாண்டங்களை நிர்மானித் திருக்கிறார்கள். அவற்றை யெல்லாம் அறிகிற போது நாமும் தமிழன் என்றஎண்ணம் எழுந்து நம்மை இரும்பூது கொள்ளச் செய்கிறது. தமிர் கட்டட விந்தை பகுதி 3 இல்  சற்றே சிலவற்றைக் காண்போம்."

பேக் கிறவுண்ட் மியூசிக்

"என் கதைகளுக்கு ஒவியம் வரைந்திடும் ஆஸ்திரேலிய அன்பு நண்பர் கிரிஸ் நல்லரத்னம் அவர்களின் படைப்பு. வாழ்க்கையின் முரண் கதையின் கரு. தேர்ந்த எழுத்தாளரைப்போல் எழுதியது கண்டு நான் வியந்தது போல் நீங்களும் வியந்திட விரும்புகிறேன்."

லா.ச.ராமாமிருதம் சிறுகதைகள் (La Sa Ramamirtham)- பகுதி-1

"காலையில் சற்று அதிக நேரம் கண்ணயரும் சேது வெளியில் வரும்போது குன்றின் மீது நிற்கும் கூட்டத்தைப் பார்த்து நெருங்கிவருகிறான், சுனையில் பெண்ணொருத்தி மானத்தை மறைக்கும் சேலை மலையை நோக்கிபறக்க.."

என் இனிய புளிய மரம்

"புளிய மரமே, புளிய மரமே எனக்கு ஒரு புளியம் பழம் போடு " என்று மரத்தை அண்ணாந்து பார்த்து பாட்டாக சத்தம் போட்டு கேட்பார்கள்; என்ன ஆச்சரியம், சில புளியம் பழங்கள் விழும். அதே நேரம் ஒரு காக்காவோ, நார்த்தம்பிள்ளை குருவியோ ஒரு கிளையிலிருந்து பறந்து போகும். அல்லது வாலைத் தூக்கிக் கொண்டு ஒரு அணில் கத்தியபடியே கிளையில் ஓடும்."

துளசி – Thulasi – By Bhadrakali Maharishi

"காதலன் கால்முறிந்ததால் பழிவாங்க நினைக்கும் துளசி ஞானசம்பந்தத்திற்கு போன் செய்து தந்திரமாகப் பேசி அவனது அறையிலேயே சந்திக்கிறாள். அப்போது...."

தமிழக நாட்டுப் புறக்கலைகள்4(TAMIL TRADITIONAL FOLK ARTS) – பகுதி…4

"துர்க்கையை கொல்ல அவளின் எதிரிகளானவர்கள் கொடிய விஷமிகு பாம்பாகவும், தேளாகவும் உருமாறி வந்த போது, அவர்களை அழிக்க தன் கால்களில் மரத்தால் ஆன பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடியதாகவும், அந்த கணமான கட்டையினால் தாக்கப்பட்டு அந்த நச்சு உயிர்கள் உயிர் இழந்ததாகவும் புராண கதைகள் வழங்கப்படுகின்றன. "

நண்பனின் தந்தை [Nanbanin thanthai] – அசோகமித்திரன் [Ashokamitran]

பிளாஷ்பேக்காக சிறுவயதில் ஹார்மோனியம் கற்றுக் கொண்டதாகவோ, பரிசாக கிடைத்ததாகவோ, தன் காதலுடன்  சம்பந்தப்படுத்தியோ இருக்கலாம் என நாம்  நினைத்தால்  ஹா..... என்று சொல்லவைக்கிறார் அசோகமித்திரன்.

சங்க கால மகளிர் தொழில் முனைவோர்

"பழந்தமிழக மகளிர் தொழில் முனைவோர் தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்து சுற்றத்தைக் காத்ததோடு , சமூகப் பொருளாதாரத்தை காப்பதிலும் முக்கியப் பங்காற்றியமை தெளிவு."

சிதைந்த கூடு

"ரவீந்திரநாத் தாகூர் என்ற பெயரைப் பார்த்ததுமே புத்தக கண்காட்சியில்(2020) வாங்கிவிட்டேன். மொழிபெயர்ப்பிலேயே   அருமையாக இருக்கிறது. வங்க மொழியிலேயே படித்திருந்தால் அவரின் நடையை, எழுத்தோவியத்தை நன்கு ரசித்திருக்கலாமே என்ற ஆதங்கம் மனதுக்குள்  தோன்றுகிறது."

Create a website or blog at WordPress.com

Up ↑