சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 3 இன்று பதிவிடப்படுகிறது. அன்பர்கள் சுவைத்து இன்புறுக.

51 b. Common Name: Five Leaf Yam , Botanical name: Dioscorea pentaphylla
வள்ளி என்பது கொடித்தவாரம் ; நீரின்றேல் வாடிவிடும். இப்பூவின் மேற்பகுதி சுருண்டு காணப்படும். வள்ளிப்பூ இளமஞ்சள் நிறத்தில் இளவேனில் பருவத்தில் பூக்கும்.கடம்ப மலர் மாலையின் இடையே வைத்து அழகு படுத்தி தொடுப்பர் .

52.நெய்தல் – Common Name: Red and blue water lily, Botanical name: Nymphaea stellata Willd. ஆம்பல், கொட்டி, நீலம் , நெய்தல் செங்கழுநீர், குமுதம் என்று பெயர் கொண்ட மலர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. நீண்ட காம்புகள் உள்ள நெய்தல் சுனைகளிலும்,குளங்களிலும் பூக்கும். உவர்நீர் மலர்களாக கடலோர உப்பங்கழிகளில் பூக்கும் காரணம் பற்றியே இந்நிலப் பகுதிக்கு நெய்தல் எனப் பெயர் வந்தது

தாழை எனப்படும் தென்னையின் மலர் நைட்ரஜன் பற்றக்குறை உள்ளபோது மின்னலுடன் மழை பெய்கையில் தனக்கான ஊட்டச் சத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக மலர்கிறது. குறுந்தொகையில் இந்த அறிவியல் விளக்கம் இடம் பெற்றது வியப்பே . மற்ற நாட்களைவிட இடி மின்னல் நாட்களில் அதிகம் பூக்கும்.

54.தவளம் – Common Name: Pink Jasmine , Botanical name: Jasminum polyanthum Franch.
முல்லை குலத்தில் கொடிப்பூ வகையை சார்ந்தது.முல்லை வெண்மை நிறைத்தது எனில் தவளம் செம்மை நிறத்தது; அதனால் செம்முல்லை எனப்பட்டது. இதன் தோற்றம் மீன் கொத்திப்பறவையின் அலகு போல கூர்மையானது.

55.தாமரை – Common Name: Lotus. Botanical name: Nelumbo nucifera (Gaertn.)
நாம் நன்கறிந்த தாமரை பல நிறங்களில் தடாகங்களில் பூக்கும் நீர்த்தாவரம். தாமரை மலர் காலையில் மலரும்.முளரி என்றும் கூறுவார். இந்தியாவின் தேசிய மலர் ஆகும். சித்த ,ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது.

நெய்தல் நிலப்பூயென்றாலும் எல்லா நிலங்களிலும் பூக்கும் .செந்நிறத்திலும், பொன்னிறத்திலும் பூக்கும். இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறுகடுகு போல் இருக்கும். மணிபல்லவ தீவில் கடலோரத்தில் இருந்த இலஞ்சியில் ஞாழலும் பூத்திருந்தது.


இக்காலத்தில் அடுக்கு மல்லி என்கிறோம் .முற்காலத்தில் கொகுட்டம் எனவும் கூறுவர்.நறுமணமும் குளிர்ச்சியும் மிக்கது. கொகுடி முல்லை என்பதே கொடிமுல்லை என்றானது.



கருந்தமக்கொடி எனவும் கூறுவார். மலையில் படரும் ஒரு வகை கொடி .வேறு குறிப்புகள் இல்லை ; கிடைத்தால் பகிரப்படும்.

ஒண்காந்தல் என செங்காந்தள் மலரையும் கோடல் என்று வெண்காந்தள் மலரையும் காப்பியங்கள் குறிக்கின்றன. கோடல் மலர் வெள்ளையாக தலைப்புறத்தில் பசுங்கோட்டுடன் காட்சியளிக்கின்றன .செங்காந்தள், கோடல், தோன்றி இவை மூன்றும் ஒன்றானவை அல்ல ;வெவ்வேறானவை.

கைதை பூவே முள்ளால் கையில் தைப்பதால் ‘கைதை ‘என பெயர் பெற்றது.கைதை மலர் தழை இனம்.இம்மலரை மகளிர் தலையில் கூந்தலுடன் வைத்து பின்னிக்கொள்வர்.





சுண்ணாம்பு நீறு போல வெள்ளையாக பூக்கும். கூந்தலில் சூடும் பூ. கொற்றவைக்கு உகந்த மலர். மரத்தின் அடிப்பகுதி கருமையாகவும் கிளைகள் கொம்புகள் செம்மையாய் இருக்கும்.

நுணா மரமே தணக்கம் ஆகும். மஞ்சணத்தி எனப்படும் இது சிறந்த மூலிகை. இதன் பூ வெள்ளை நிறத்தில் மல்லிகை போல் இருக்கும், ஆனால் சற்று தடித்த இதழ்களுடன் இருக்கும்.

இது ஒரு முட்புதர் செடி. ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும். எந்த மரத்தையும் பற்றாத கொடி போன்ற புதர்ச்செடி.இதை மாமரத்திற்கு வேலியாக அமைப்பார்கள்.

இது இலவம் பஞ்சு மரமாகும். இலவ மரம் காய்க்கும், பழுக்காது. நெற்றாகிவிடும். பூக்கள் செந்நிறமாக இருக்கும். இலவம் பஞ்சுக்கு தேனியில் பெரிய அளவிலான சந்தை உள்ளது. இந்தியாவில் இதற்கு விலை போடியில்தான் நிர்ணயிக்கபடுகிறது.

கொன்றை அல்லது சரக்கொன்றை எனப்படும் மலர்கள் மஞ்சள் நிறத்தில் கண்ணை கவரும்படி பூக்கும். கேரளத்தின் மாநில. மலராகும். கொன்றை சில சிவாலயங்களில் காப்பு மரங்களாக வளர்க்கிறார்கள்.சிவனுக்கு உகந்த மலராகும் .

73.அடும்பு – Common Name: Goat’s foot vine Botanical name: Ipomoea pes-caprae (L.) R. Br.
கடற்கரையிலும் வறண்ட மேட்டுப் பகுதியிலும் வளரும். இதன் இலைகள் ஆட்டின் குளம்பு போல இரு கிளைகளாக இருக்கும். கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வளரும். இதன் பூக்கள் செந்நீல நிறத்தில் காணப்படும்.

74.ஆத்தி -2. Common Name: Yellow Orchid Tree. Botanical name: Bauhinia tomentosa L.
ஆத்தி சிறிய அடர்த்தியான மரம் ஆகும். சிவன் ஆத்தி மலரை தலையில் சூடி இருப்பதால் ஆத்தி சூடி எனப் பெயர் வந்தது. இதை இடிதாங்கி மரம் என்றும் கூறுவார்கள். ஆத்தி மலர் மாலையை சோழர்கள் சூடியிருப்பார்கள்.

இது ஒரு கொடி வகைத் தாவரம். இதன் காயே அவரைக்காய். காயின் எடையில் 25% புரதச் சத்து உள்ளது. வெளிர் நீல நிறம் அல்லது வெண்மை நிறத்தில் பூக்கள் பூக்கும்.
பகுதி 4 இல் அடுத்த 24 மலர்களைக் காணலாம்….