சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …3 ( 25 மலர்கள்)

சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) பகுதி 2 .(20.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 3 இன்று பதிவிடப்படுகிறது. அன்பர்கள் சுவைத்து இன்புறுக.

பகுதி ..1 இன் இணைப்பு காண்க.

பகுதி ..2 இன் இணைப்பு காண்க.

51.a. வள்ளி – Slide1. Common Name: Yam , Botanical name: Dioscorea Sp.

51 b. Common Name: Five Leaf Yam , Botanical name: Dioscorea pentaphylla
வள்ளி என்பது கொடித்தவாரம் ; நீரின்றேல் வாடிவிடும். இப்பூவின் மேற்பகுதி சுருண்டு காணப்படும். வள்ளிப்பூ இளமஞ்சள் நிறத்தில் இளவேனில் பருவத்தில் பூக்கும்.கடம்ப மலர் மாலையின் இடையே வைத்து அழகு படுத்தி தொடுப்பர் .

52.நெய்தல் – Common Name: Red and blue water lily, Botanical name: Nymphaea stellata Willd. ஆம்பல், கொட்டி, நீலம் , நெய்தல் செங்கழுநீர், குமுதம் என்று பெயர் கொண்ட மலர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. நீண்ட காம்புகள் உள்ள நெய்தல் சுனைகளிலும்,குளங்களிலும் பூக்கும். உவர்நீர் மலர்களாக  கடலோர உப்பங்கழிகளில் பூக்கும் காரணம் பற்றியே இந்நிலப் பகுதிக்கு நெய்தல் எனப் பெயர் வந்தது 

53.தாழை –  Common Name:Coconut , Botanical name: Cocos nucifera L.
தாழை எனப்படும் தென்னையின் மலர் நைட்ரஜன்  பற்றக்குறை உள்ளபோது மின்னலுடன் மழை பெய்கையில் தனக்கான ஊட்டச் சத்தை எடுத்துக்கொண்டு உடனடியாக மலர்கிறது. குறுந்தொகையில் இந்த அறிவியல் விளக்கம் இடம் பெற்றது வியப்பே . மற்ற நாட்களைவிட இடி மின்னல் நாட்களில் அதிகம் பூக்கும். 
54.தவளம் – 1. Common Name: Red Kunda India , Botanical name: Jasminum elongatum (P. J. Bergius) Willd.

54.தவளம் – Common Name: Pink Jasmine , Botanical name: Jasminum polyanthum Franch.

 முல்லை குலத்தில் கொடிப்பூ வகையை சார்ந்தது.முல்லை வெண்மை நிறைத்தது எனில் தவளம் செம்மை நிறத்தது; அதனால் செம்முல்லை எனப்பட்டது. இதன் தோற்றம் மீன் கொத்திப்பறவையின் அலகு போல கூர்மையானது.

55.தாமரை – Common Name: Lotus. Botanical name: Nelumbo nucifera (Gaertn.)
நாம் நன்கறிந்த தாமரை பல நிறங்களில் தடாகங்களில் பூக்கும் நீர்த்தாவரம்.  தாமரை மலர் காலையில் மலரும்.முளரி என்றும் கூறுவார். இந்தியாவின் தேசிய மலர் ஆகும். சித்த ,ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது.
56. ஞாழல் –  Botanical name: Caesalpinia cucullata Roxb.
நெய்தல் நிலப்பூயென்றாலும் எல்லா நிலங்களிலும் பூக்கும் .செந்நிறத்திலும், பொன்னிறத்திலும் பூக்கும். இதன் பூக்கள் ஐயவி என்னும் வெண்சிறுகடுகு போல் இருக்கும். மணிபல்லவ தீவில் கடலோரத்தில் இருந்த இலஞ்சியில் ஞாழலும் பூத்திருந்தது.
57.மௌவல் –  Common Name: Poet’s jasmine , Botanical name: Jasminum officinale L. மல்லிகைவகை சார்ந்த  இப்பூ இரவில் பூத்து சுற்றிலும் மனம் பரப்பிடும். மகளிரின் பற்களுக்கு அரும்புகளை உவமை கூறுவார். பெண்களின் சிரிப்பைப் போல பூக்கும்.
58.கொகுடி – Common Name: Indian Jasmine Botanical name: Jasminum pubescens (Retz.) Willd.
இக்காலத்தில் அடுக்கு மல்லி என்கிறோம் .முற்காலத்தில் கொகுட்டம் எனவும் கூறுவர்.நறுமணமும் குளிர்ச்சியும் மிக்கது. கொகுடி முல்லை என்பதே கொடிமுல்லை என்றானது. 
59.சேடல் –  Common Name: Coral Jasmine. Botanical name: Nyctanthes arbor-tristis L. இன்றைய பவழ மல்லிகையே சேடல் ஆகும். இது பவழ நிற காம்பையும் வெண்ணிற இதழ்களையும் உடையது.தனித்த நறுமணம் உடையது.பின்னிரவில் பூத்து காலையில் உதிரத்தொடங்கும்.
60.செம்மல் –  Common Name: Spanish jasmine Botanical name: Jasminum grandiflorum L. உதிர்ந்த பூக்களை செம்மலர் என்று குறிப்பிடும் மரபு உண்டு.நச்சினார்க்கினியர் சாதிப்பூ என்பர். சாதிப்பூ ஒரு வகை முல்லை.இது சற்று நீண்ட இதழ்களை உடையது.வெண்மை நிற கொத்துப்பூ.வாடினாலும் மனம் பரப்பிடும். அதனால் வாடற்பூ என பெயர் பெற்றது. 
61.சிறுசெங்குரலி – Common Name:Water Chest nut , Botanical name: Trapa bispinosa Roxb.
கருந்தமக்கொடி எனவும் கூறுவார். மலையில் படரும் ஒரு வகை கொடி .வேறு குறிப்புகள் இல்லை ; கிடைத்தால் பகிரப்படும்.
62.கோடல் –  Common Name: Yellow Malabar glory lily , Botanical name: Gloriosa superba L.
ஒண்காந்தல் என செங்காந்தள் மலரையும் கோடல் என்று வெண்காந்தள் மலரையும் காப்பியங்கள் குறிக்கின்றன. கோடல் மலர் வெள்ளையாக தலைப்புறத்தில் பசுங்கோட்டுடன் காட்சியளிக்கின்றன .செங்காந்தள், கோடல், தோன்றி  இவை மூன்றும் ஒன்றானவை அல்ல ;வெவ்வேறானவை.
63.கைதை – Common Name:Fragrant screw-pine Botanical name: Pandanus odoratissimus L. f.
கைதை பூவே முள்ளால் கையில் தைப்பதால் ‘கைதை ‘என பெயர் பெற்றது.கைதை மலர் தழை இனம்.இம்மலரை மகளிர் தலையில் கூந்தலுடன் வைத்து பின்னிக்கொள்வர். 
64.வழை –  Common Name: Surangi , Botanical name: Ochrocarpus longifolius (Wt.) Benth. ex T. Anders சுரபுன்னை;மேற்கு தொடச்சி மலையில் காணப்படுவது.வட்டமான  அழகிய மொட்டுக்கள் உடையது. நா ன்கு இதழ்கள் கொண்ட வெள்ளைப்பூக்கள்.இதழ்கள் வட்டமாகவும் அகலமாகவும் இருக்கும்.நறுமணம் அரை கி.மீ தூரத்திலிருந்தும் நாசியைத் துளைத்து அழைக்கும்.
65.காஞ்சி – Common Name: False White Teak , Botanical name: Trewia nudiflora L. வெள்ளை தேக்கு தவரவியல் குடும்பத்தை சேர்ந்தது.இரு வித்திலை தாவரமாகும்.போரிட வருபவரை எதிர் கொண்டு தக்க செல்பவர் காஞ்சி மலர் சூடிச்செல்வர்.செம்மருது எனவும் பெயர் உண்டு .
66.மணிக்குவை(கருங்குவளை) – Common Name: Red Water Lily Botanical name: Nymphaea rubra Roxb. ex Andrews நெய்தலில் ஒரு வகையாக கருதப்படுகிறது. குறுகிய காம்பு உடைய இது, வயல்வெளியில் பூக்கும். மணிக்குவை, நெய்தல் பற்றிய மயக்கம் உள்ளது. நெய்தல் நிலத்தில் பூப்பது நெய்தல் எனப்பட்டது; பின் கருங்குவளை எனப்பட்டது.
67.பாங்கர் – Common Name: Tooth-brush tree Botanical name: Salvadora persica முல்லை போல் தலையில் சூடும் பூக்களில் ஒன்று. பாட்டங்கால் எனப்படும் வீட்டு தோட்டத்திலும் வளர்க்கப்படும். இதிலிருந்து சிம்புகளை  பல் துலக்கும் குச்சியாக பயன்படுத்துவர். பல் சுத்தத்திற்கும் பாக்டீரியா நீக்கலுக்கும் சிறந்த “மிஸ்வாக்” எனப்படும் சிறிய மரம் அல்லது புதர்.
68.மராஅம் – Common Name: Lac tree, Jalari , Botanical name: Shorea talura Roxb. Known for its fragrance
சுண்ணாம்பு நீறு போல வெள்ளையாக பூக்கும். கூந்தலில் சூடும் பூ. கொற்றவைக்கு உகந்த மலர். மரத்தின் அடிப்பகுதி கருமையாகவும் கிளைகள் கொம்புகள் செம்மையாய் இருக்கும்.
69.தணக்கம் –  Common Name: Helicopter Tree Botanical name: Gyrocarpus americanus Jacq.
நுணா மரமே தணக்கம் ஆகும். மஞ்சணத்தி எனப்படும் இது சிறந்த மூலிகை. இதன் பூ வெள்ளை நிறத்தில் மல்லிகை போல் இருக்கும், ஆனால் சற்று தடித்த இதழ்களுடன் இருக்கும். 
70.ஈங்கை –  Common Name: Twisted Acacia Botanical name: Acacia caesia (L.) Willd.
இது ஒரு முட்புதர் செடி. ஈங்கை வெண்ணிறத்தில் பூக்கும். எந்த மரத்தையும் பற்றாத கொடி போன்ற புதர்ச்செடி.இதை மாமரத்திற்கு வேலியாக அமைப்பார்கள். 
71.இலவம் – Common Name: Red-flowered silk-cotton tree Botanical name: Bombax malabaricum
இது இலவம் பஞ்சு மரமாகும். இலவ மரம் காய்க்கும், பழுக்காது. நெற்றாகிவிடும். பூக்கள் செந்நிறமாக இருக்கும். இலவம் பஞ்சுக்கு தேனியில் பெரிய அளவிலான சந்தை உள்ளது. இந்தியாவில் இதற்கு விலை போடியில்தான் நிர்ணயிக்கபடுகிறது. 
72.கொன்றை – Common Name: Indian laburnum. Botanical name: Cassia fistula L.
கொன்றை அல்லது சரக்கொன்றை எனப்படும் மலர்கள் மஞ்சள் நிறத்தில் கண்ணை கவரும்படி பூக்கும். கேரளத்தின் மாநில.   மலராகும். கொன்றை சில சிவாலயங்களில் காப்பு மரங்களாக  வளர்க்கிறார்கள்.சிவனுக்கு உகந்த மலராகும் . 

73.அடும்பு – Common Name: Goat’s foot vine Botanical name: Ipomoea pes-caprae (L.) R. Br.
கடற்கரையிலும் வறண்ட மேட்டுப் பகுதியிலும் வளரும். இதன் இலைகள் ஆட்டின் குளம்பு போல இரு கிளைகளாக இருக்கும். கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வளரும். இதன் பூக்கள் செந்நீல நிறத்தில் காணப்படும்.
74.ஆத்தி – Ātti can either be Bauhinia racemosa or Bauhinia tomentosa. ஆத்தி.1.Common Name: Maloo Creeper Botanical name: Bauhinia racemosa Lam.

74.ஆத்தி -2. Common Name: Yellow Orchid Tree. Botanical name: Bauhinia tomentosa L.

ஆத்தி சிறிய அடர்த்தியான மரம் ஆகும். சிவன் ஆத்தி மலரை தலையில் சூடி இருப்பதால் ஆத்தி சூடி எனப் பெயர் வந்தது. இதை இடிதாங்கி மரம் என்றும் கூறுவார்கள். ஆத்தி மலர் மாலையை  சோழர்கள் சூடியிருப்பார்கள். 
75.அவரை – Common Name: Lablab Bean. Botanical name: Dolichos lablab L.
இது ஒரு கொடி வகைத் தாவரம். இதன் காயே அவரைக்காய். காயின் எடையில் 25% புரதச் சத்து உள்ளது. வெளிர் நீல நிறம் அல்லது வெண்மை நிறத்தில் பூக்கள் பூக்கும்.

பகுதி 4 இல் அடுத்த 24 மலர்களைக் காணலாம்….

Advertisement

One thought on “சங்க இலக்கியங்களில் மலர்கள் FLOWERS IN SANGAM LITERATURE: பகுதி …3 ( 25 மலர்கள்)

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: