கண்ணுக்குத் தெரியாத மனிதன்

வாசித்தது:- கண்ணுக்குத் தெரியாத மனிதன்
ஆசிரியர்: ஹெர்பர்ட் ஜார்ஜ் வெல்ஸ்(H.G.WELS)
வகை:- உலக இலக்கியம்
பதிப்பகம்:- சேதுஅலமி பிரசுரம்
தமிழ் மொழிபெயர்ப்பு:- சிவன்
பக்கங்கள்:- 240
விலை :-ரூபாய் 125

ஹெச் .ஜி.வெல்ஸ் தன் வீட்டினரால் பெர்ட்டி என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். மூன்றுவயதிலேயே தன் அம்மாவால் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேற்கொண்டவர். ஏழாம் வயதில் காலொடிந்து மாதக்கணக்கில் படுக்கையில் இருக்கவேண்டிய நிலையில் அவனின் அப்பா அவருக்கு தாவரவியல், உயிரியல் , விண்வெளியியல் ஆகிய புதத்தகங்களை அறிமுகப்படுத்த பின்னாளில் இதனை  குறிப்பிட்டு வாழ்வில் முக்கியமான தருணம் என்று சொல்லியிருக்கிறார். இந்த புத்தகத்தில் உள்ள 2 வது கதையான உலகங்களின் போராட்டம் என்ற கதையில் அதன் தாக்கம் இருக்கும்.

கதை பழைய கால விட்டலாச்சாரியார் படம்பார்த்தது போல இருக்கிறது. சுஜாதாவின் விஞ்ஞானத் தொழில்நுட்பம் கலந்த கதையைத் படித்த நமக்கு ஒருஎறும்பு கடித்த அளவுக்கு கூட  (அந்தகாலத்தில் பிரபலமாக இருந்திருக்கலாம்.) எந்த பாதிப்புமில்லை. புகழ், பணம்,  மண்ணாசை, பெண்ணாசை, அகங்காரம், ஆணவம் இப்படி எந்த ஒன்று ஒருவனின் புத்தியைஅடிமை கொள்கிறதோ அதுவும் போதைதான்.

கண்(ணுக்குத்) தெரியாதவன் கிரிஃபின்:-
மனித உயிர்களைக் காக்கும் மருத்துவ படிப்பை உதறிவிட்டு அவனே சொல்வது போல  ஒளியியல் என்ற ஆராய்ச்சி  போதையில்  இறங்க,
1.முதல் தவறாக தன்அப்பா மற்றவர்களுக்குகொடுக்க வைத்திருந்த பணத்தைத் திருடிவிட
2.அதனால் ஏற்பட்ட  மனஉளைச்சலில் அவர் இறந்துவிடுகிறார். அவனோ எந்த குற்ற உணர்வுமின்றி அவரின் இறுதிச்சடங்கில் கூட யாரோ ஒருவர் என்ற மனநிலை கொண்டவனாக இருக்கிறான். என்ன மனிதன் இவன்!
3.தன்ஆராய்ச்சியில் எதிர்பாராவிதமாக  கண்ணுக்குத் தெரியாது மாறலாம் என்பதைக் கண்டுபிடிக்க எதிர்விளைவை யோசிக்காமல் அதைத் தன் மீதே  அவன் செயல்படுத்த  …
4.எதைத் தொட்டாலும் பொன்னாக வேண்டுமென்று  வரம் கேட்ட மைதாஸ்போல
கிரிஃபின் வெளியில் நடமாடமுடியாதவனாக உணவு உண்ணக்கூட முடியாமல் போக
5.அதனால் ஏற்படும் பிரச்சனை, மனைவுளைச்சலால்   அவனின் தவறின் அளவுகள் கூடிட
6. ஒருமுறைகூட தவறு தன்னுடையது என்று எண்ணவோ, அதைசரிசெய்து கொள்ளவோ முயற்சிக்காமல், தன்னைஎதிர்ப்பவர்களை தனக்குக் கீழ்படியாதவர்களை  பிறரின் கண்ணுக்குத் தெரியாதவனாக இருப்பதனால்  மற்றவர்களை தாக்கி தான் வெற்றி பெற்றதாக நினைத்து கொக்கரிக்கிறான் கோழை.|
7.அவன் மாறுவதற்கான நல்வாய்ப்பாக இறுதி வாய்ப்பாக தான் படித்த கல்லூரியி்ன் சீனியரும் , ஆராய்ச்சியாளரும் ,டாக்டருமான  கெம்ப் எனும் நல்ல மனிதரை சந்திக்கிறான்.
அவனே அவரை சந்தித்தது தன் அதிர்ஷடம் என்கிறான்.ஆனால் தன்னுடன் சேர்ந்தால் நிறைய சம்பாதிக்கலாம் என கெம்ப்புக்கு ஆசை காட்டுகிறான் . தன்னைப் பற்றிய உண்மைகளை  நுணலும் தவளையாகி அவரிடம்  சொல்ல
தேடப்படும் குற்றவாளியாக அவனைப் பற்றிய செய்திகளை, தங்கியிருந்த விடுதியை கொளுத்தியது ,காவலரைத் தாக்கியது இன்னும் பலவற்றை செய்தித்தாள்களால் அறிய  அழிவுசக்தியின் மறுஉருவாக இருக்கும் அவனை அவன் போக்கிலேயே சென்று போலீசில் மாட்டிவிட திட்டமிடுகிறார்.. ..
8.அதைத்தெரிந்துகொள்ளும் அவன் அவரைக் கொல்ல முயல
திருப்பம் எதிர்பாரா திருப்பம் முடிவு …?
புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கிரிஃ பின் அழிவுக்கு வீணாக்கிய தன் மூளையை மருத்துவ சேவை புரிந்து மலையாக( கிரி) உயர்ந்திருக்கலாம்.
ஆனால்ஆணவம் (பின்)என்ற குப்பைத் தொட்டியை சுமந்து  கரிபின் ஆகிறான்.

ரசித்தது:- கிரிஃ பின் வருகையை அவன் செயல்பாடுகளை கிராமத்தினர் ஒவ்வொருவரும் அவரவர் வேலைக்கு ஏற்ப கருத்து சொல்வது.
தைத்தது:- சூரபத்மன், மகிஷாசுரன், இரணியன் கடும்முயற்சியாக தவம் செய்து ,அதனால் வாங்கிய வரத்தை ஆணவத்தினால்  இழப்பதாக அறிகிறோம்.
கிரிஃபின் என்றுபெயர் மாறுகிறதே தவிர… புராணகதைகளை கட்டு கதைகள் எனத் தள்ளினாலும் உலக வரலாற்றில் அதிகாரத்தின் உச்சியில் ஆணவத்தில் ஆடியவர்களின் இறுதி….
மரணத்திலும் திருந்தாத கிரிஃபின்கள் பெயர் மாற்றத்துடன் இன்றும்  இருக்கிறார்கள் தானே!
இந்தபுத்தகத்தை படித்து முடித்து கிட்டதட்ட ஒருமாதம் சென்றிருக்கும். இரண்டுமுறை பதிவு எழுதியும் என்னுடைய இயல்பில் அந்த பதிவுகள் இல்லை. அப்பாடா! இந்த பதிவுதான் என்னுடைய  எழுத்தில் சரியாக இருப்பதாக  உணர்கிறேன்.
கற்றனைத்தூறும் கிணற்றுக்கு (WELLSக்கு) நன்றிகள். 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: