ஆசிரியர்:-ஆல்பர்ட் லாமொரிஸ்
தமிழில்:-கொ .மா. கோ. இளங்கோ
வகை:-சிறார் சிறுகதை
பதிப்பகம்:-பாரதி புத்தகாலயம் புத்தகம் பேசுது
பக்கங்கள்:-37
“ரெட் பலூன்” சிறார் வகை நாவல்.
இது படமாக்கப்பட்டு கேன்ஸ் திரைப்படவிழாவில் தங்கப்பதக்கம் விருதையும், ஆஸ்கார் விருதையும், பிரிட்டிஷ் அகாதெமி விருதையும் பெற்றிருக்கிறது.
கொ.ம.கோ.இளங்கோவின் தமிழ் மொழிபெயர்ப்பில் சிறுவர்கள் படிக்கும் வகையில் எளிமையான நடையில் கதை எழுதப்பட்டிருக்கிறது நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இந்த கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
பாரிஸ் நகரில் வசிக்கும் பாஸ்கலுக்கு(கதையின் நாயகன்) கிடைக்கும் சிவப்பு நிற பலூன் உயிருள்ள ஜீவனைப்போல அவனிடம் நடந்துகொள்கிறது. இது மற்ற சிறுவர்களின் பொறாமைப் பார்வையில் பட அவனையும் பலூனையும் துரத்துகிறார்கள். ஒருநாள் அதுபோல துரத்த பலூனும் பாஸ்கலும் சிக்கிக்கொள்கிறார்கள்.
முடிவில் பலூன் சிதைக்கப்படுகிறது. அடுத்து ….? கதையைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
ரசித்தது:- கண்ணாமூச்சி ஆட்டம் போல் பலூனுடன் ஔிந்து விளையாடுவது, சொன்ன பேச்சைக்
கேள் ஆபத்தில்மாட்டிக்கொள்ளாதே என அறிவுரை கூறுவது, குட்டி நண்பன் பள்ளியில் தன்னால் தண்டனைக்கு உள்ளாகிறான் என்பதை அறிந்த பலூன் செய்யும் உதவி நமக்கு புன்னகையை முகத்தில் தூவுகிறது.
“கிழவனும் கடலும்” கதையில் எர்னஸ்ட் ஹெமிங்வே முயற்சிக்கு வயது தடையல்ல என்று காட்டியிருப்பார்.
ஆல்பர்ட் லாமொரிஸ்”ரெட் பலூன்” கதையை குழந்தைகளுக்கான கதையாக கொண்டு சென்றிருந்தாலும், உண்மையில் பெரியவர்களுக்கான கதையாகவும் இந்த கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கதையின் வழியே சிறுவயதில் பசுமரத்தாணியாக, பொறுமை, விடாமுயற்சி, இழப்பை தாங்கிக்கொள்ளும் மனநிலை, உதவும்குணம் என நல்ல குணங்களையும் மனதில் பதிக்கிறோம். வளர்ந்து பெரியவர்களான போதும் இது போன்ற கதையைப் படிப்பது மறந்த குணங்களை மறக்காமல் மறைக்காமல் இருக்க உதவுகின்றன என்றே சொல்லாம்.
கதையின் ஆரம்பத்தில் தெருவில் தனியே திரியும் நாய்குட்டி, பூனையை பாஸ்கல் காப்பானாக வீட்டுக்கு கொண்டுவர, “அநாதை மிருகங்கள்” எனஅம்மா அதனை வெளியில் தூக்கியெறிய அழுதபடியே தூங்கிவிடுகிறான்.
அறை நிறைய பொம்மைகள் இருந்தாலும் அவனுடன் கூடி விளையாட தோழமை இல்லை அது அவனுக்கு வருத்தத்தை தருகிறது.
பின்பு பள்ளி செல்லும் ஒருநாளில் பாஸ்கலுக்கு பலூன் கிடைக்கிறது.
அவனது மனதில் ஏக்கமாக பதிந்திருக்கும் விளையாட்டுத் தோழன் இல்லாத குறையை பறக்கும் பலூன் ஏதோ ஒருவகையில் அவனுக்கு ஈடுசெய்கிறது. மனதின் ஆழத்தில் தோன்றுவது மற்றொரு வகையில் நிறைவேறுகிறது. கதையின் கரு இதுதான் என்றே தோன்றுகிறது.
பள்ளியில் பாஸ்கலுக்கு பலூன் செய்யும் உதவியால் நம் முகத்தில் தூவும் புன்னகை கதையின் கடைசியில் நடக்கும் அதிசய நிகழ்வை ஆல்மொரிஸ் நம் மனதில் ஆல் (சுவீட் ) மெமரிஸ் ஆக்கிவிடுகிறார் என்பதே உண்மை!!!!
Leave a Reply