“அப்பா, ரமாமணியும் நானும் வெளியில் போறோம் ;என்னோட யு ஜி சர்டிபிகேட்டை லேமினேஷன் செய்யவேண்டும்.” என்றாள் பவானி.
“நான் வேண்டுமானால் ஆபீஸிலிருந்து வரும் போது லேமினேட் செய்துகொண்டு வரட்டுமா” எனறார் அப்பா.
“வேண்டாம் நானே பார்த்துக்கறேன் அப்பா”
சிறிது நேரத்தில் பிஜி இரண்டாமாண்டு ரமாமணி வந்தாள்; பவானியிடம் கொடுத்திருந்த முதலாண்டு பாடப்புத்தகத்தை வாங்கிக் கொண்டு, “சரியா பத்து மணிக்கு வந்திடு, பவானி”என்றாள்.
‘உம்., சரி’ என்ற பவானி எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அப்பாவுக்கு போன் செய்தாள்.
“அப்பா கேட்காம டிகிரி சர்டிபிகேட்டை லேமினேசன் செய்ய எடுத்துக்கிட்டு போய்டீங்களா”
“நீதான் வேண்டாம்னு சொன்னியே, நான் எடுத்து வரலை பவானி” அப்பா ராம்.
“அப்போ இந்த அம்மாதான் எடுத்து ஔிச்சு வச்சிருக்கனும்”
“அம்மா, என்னோட டிகிரி சர்டிபிகேட் இங்க டேபிள் மேல வச்சிருந்தேன் பார்த்தியா”
“இல்லடா, நீ அப்பாக்கிட்ட பேசுனதுதான் தெரியும்; நீதான் இதுவரை சர்டிபிகேட்டை என்னிடம் காட்டவே இல்லையே”
“அதனால எடுத்து ஔிச்சு வச்சிட்டியா”
“நான் ஒன்னோட அம்மா, அப்படிச் செய்வேனா”
“எனக்குத் தெரியாது எனக்கு அது இப்ப வந்தாகனும்”
“ஐயோ பகவானே, அதக் கண்ணாலக்கூட நான் காணலியே”
பவானி இரண்டு வயதாக இருக்கையில் ராமுவுக்கு இரண்டாம் தாரமாக வந்தவள் அகிலா. பவானியை தானே பெற்ற மகள் போலவே கவனித்துக் கொண்டாள். பவானியும் இன்றுவரை அம்மாவென்றுதான் கூப்பிடுவாள்.
தொலைக்காட்சி தொடர்களில் பார்க்கும் மாற்றாந்தாய்க் கொடுமைகள் பவானி மனதில் பதிந்துவிட்டது ; அது அடிக்கடி இப்படி வந்து சாமியாடும் .
அந்த நேரத்தில் குப்பை சேகரிப்பவரிடம் குப்பைகளை போட்டுவிட்டு வந்த தம்பி இந்த உரையாடல்களைக் கேட்டு தயங்கியபடி வந்தான். இவன் அகிலாவுக்கு பிறந்திருந்தாலும் அக்கா பவானிமேல் கொள்ளைப் பாசக்காரன்; கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறான்.
கோபக்கனல் தெறிக்க அவன் பக்கம் திரும்பினாள். ஒரே பாய்ச்சலில் வெளியேறினான்.
அவனுக்கு குப்பை மூட்டைக்குள் அது ஏன் இருக்கக்கூடாது? என்ற எண்ணம் தலைதூக்கியது
தெரு முனையிலேயே குப்பை வண்டியைப் பிடித்துவிட்டான். குப்பைவண்டிக்காரர் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக்கொண்டிருந்தார்.
குப்பை சேகரிப்பவரோடு சேர்ந்து எல்லா குப்பைகளையும் கிளறி சர்டிபிகேட்டை தேடினான்.
அந்நேரம் ரமாமணியின் தம்பி, இவன் நண்பன் அங்கு வந்து சேர்ந்தான். விவரம் அறிந்து அவனும் சேர்ந்து தேடினான். மூன்று பேர் தேடியும் சர்டிபிகேட் கண்ணில் படவில்லை.
“ஹலோ ரமாமணி, சர்டிபிகேட் காணவில்லை; நான் வரவில்லை” பவானி போன் செய்தாள்
“பவானி, நீதான் அதை நான் வாங்கிவந்த புத்தகத்தில் வைத்து கொடுத்துவிட்டாயே, நீ மட்டும் வந்தால் போதும்”என்று ரமாமணி பதில்.
பவானி துள்ளிக்கொண்டு ரமாமணி வீட்டுக்குக் கிளம்பினாள்.
“ரமாமணி, அந்த சர்டிபிகேட்டைக் கொடு, நான் வைத்துக் கொள்கிறேன்”
“சரி” என்று சொல்லியபடியே புத்தகத்தில் தேடினால் சர்டிபிகேட் இல்லை. அரைமணிக்கு முன் பார்த்தது எங்கே போயிருக்கும். பவானி இடிந்து போய் உட்கார்ந்து விட்டாள். எப்படி யோசித்தாலும் எதுவும் புலப்படவில்லை; இருவருமே அமைதியாகத் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார்கள்.
அப்போது வீட்டினுள்ளே பாய்ந்த தம்பிகளிருவரும்
சர்டிபிகேட்டை கொடுத்தார்கள்.
பவானியும் ரமாவும் திகைத்து நின்றார்கள்.
“ரமாவின் புத்தகத்தை புரட்டியபோது சர்டிபிகேட்டைப் பார்தேன், இதைத்தானே தேடினோம் என்று கொண்டு போய் பவானி தம்பியிடம் கொடுத்து அக்காவிடம் கொடுத்து நல்ல பேர் வாங்கிக்கோ என்றேன்.” என்றான் ரமாவின் தம்பி.
எப்படியோ தம்பிகள் அக்காள்களுக்கு வயிற்றில் பால் வார்த்துவிட்டார்கள்.
இரண்டு பேரும் போய் இதர வேலைகளோடு லேமினேஷன் வேலையையும் முடித்தக் கொணடு வந்தார்கள்.
வீட்டுக்கு வந்த பவானி , அம்மாவின் சிவந்த கண்களையும், அழுததால் சுரந்திருந்த முகத்தையும் பார்த்து அதிர்ந்து போனாள். பாய்ந்து சென்று அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு சொன்னாள்,” அம்மா சர்டிபிகேட் கிடைத்துவிட்டது;லேமினேட் செய்துவிட்டேன்”
இத்தனை நாளாகக் காட்டாத சர்டிபிகேட்டை இப்போது அம்மாவிடம் காட்டினாள்.
சர்டிபிகேட் கிடைத்ததைவிட அம்மா அகிலாவுக்கு மகள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொஞ்சியதுதான் செம்ம சந்தோசம்.
சந்தோசம்

உறவுகளில் முன்கூட்டியே முடிவுக்கு வந்துவிடும் மனோபாவம், சுற்றத்தாரது மனத்தை ஆழமாகப் புண்படுத்திவிடுவதைக் கதாசிரியர் நன்கு சித்திரிக்கிறார்.
LikeLike
சில அம்சங்களிலோ, சில சூழ்நிலைகளிலோ, சில நிகழ்வுகளிலோ முன்கூட்டியே முன் முடிவு செய்துவைத்திடும் (Pre judgement) பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட நமது நடவடிக்கைகள், நம் அன்பிற்குரியவர்களை எந்த அளவுக்குக் கடுமையாகப் பாதித்திவிடுகிறது என்பதைச் சித்திரித்திருக்கிறார் கதாசிரியர்.
LikeLike
உடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலரைத்தான் பார்க்கிறோமே!
LikeLike