பண்டைய தமிழர்களின் முக்கிய தொழில் வேளாண்மை. நீர் ஆதாரங்கள் பல இருந்தாலும் அனைத்துக்கும் ஆதாரம் மழையே ஆகும். மழை பொழிவதை கணக்கிட்டு உழவிற்கு நம் முன்னோர்கள் தயாராவார்கள். மழை பொழிவை கணக்கிட ஆட்டுக்கல்லை பயன் படுத்தினார்கள். தமிழ்நாட்டில் ஆட்டுக்கல் பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் காணக்கிடைப்பதுதான். தமிழர்களின் விருப்பமான இட்லி, தோசைக்கான இயந்திரம் இதுவே.
மாவு அரைப்பதையும் தாண்டி உரல் பயன் பட்டது. பண்டைய காலத்தில் அதுதான் நமது மழைமானி. நேராக பெய்து, ஆட்டுக்கல் குழியில் நீர் நிரம்பினால்தால் மழை பெய்ததாக கூறப்படும். இல்லையேல் அது தூறல், சாரல் என்றாகி விடும். எல்லா வீடுகளின் முற்றத்திலும் ஆட்டுக்கல் இருக்கும். முன்நாள் இரவில் மழை பெய்திருந்தால் ஆட்டுக்கல் குழிக்குள் நீர் நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை முடிவு செய்வர். மழைப் பொழிவினை “செவி” அல்லது “பதினு” என்ற முறையில் கணக்கிட்டார்கள்.
இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவிற்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்று கூறினார்கள். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது என தெரிந்து கொண்டு முதல் உழவுக்கு நம் முன்னோர்கள் தயாராவார்கள்
மழைக்கு பெயர்
“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.
“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
”பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.
”அடைமழை” – ஐப்பசியில் பெய்வது
”கனமழை” – கார்த்திகையில் பெய்வது..
இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:
மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.
அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.,
4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின் விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.
ஓருழவு மழை :
கிராமப்புறங்களில் 5 செ.மீ அளவுக்கு மழை பெய்தால் அதை ஓர் உழவு மழை என சொல்வது உண்டு. பூமியில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஓர் உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குதண்ணீர் இறங்கியிருக்கும்..
உரல் குழி மழை நீரால் நிரம்பி இருந்தால் அது ஓர் உழவு மழை ஆகும். அதாவது பெய்து முடித்த மழையானது உழவு செய்து விதைக்கப் போதுமானதாகும் என்று பொருள். ஏர் கலப்பையை கொண்டு இலகுவாக மண்ணில் ஓர் அடி ஆழத்துக்கு உழவு செய்யலாம். நிலத்தை உழும் போது ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அதுதான் உழவு மழை.
மழையின் அளவைப் பொறுத்து ஈருழவோ, ஐந்து உழவோ, பத்து உழவோ என கணக்கிடுவார்கள். ஐந்து உழவிற்கு மேல் மழை பெய்தால் நதிகளில் நீர் கரை புரண்டு நகரும். படிப்பறிவு இல்லாமல் நம் முன்னோர்கள் தெரிந்து வைத்திருந்த அனுபவ அறிவு, பழமையான விவசாய முறை மூலம் அனைவர்க்கும் உணவளித்தார்கள்.
மழை பற்றிய செய்திகள்
மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீ குறைவாக இருந்தால் அது தூறல்.
விட்டம் 0.5 மி.மீ மேல் இருந்தால் அது மழை.
ஒரு உழவு மழை என்பது சுமார் 2.5 மி.மீ.
வாசத்தண்ணி மழை என்பது 10 மிமீ.
அரைக்கலப்பை மழை என்பது 12 மிமீ
20 உழவு மழை பெய்தால் கிணறுகள் நிரம்பும்.
4-6 மி.மீ மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்
மழையை சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அது 100மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200மிமீ(8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழைமானி கண்ணாடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளமான உருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0மிமீ முதல் 25மிமீ (0.98 அங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செலுத்துமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.
அளவிடும் முறை
பொதுவாக ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லிலிட்டர் அளவில் எடுக்கவேண்டும். நீர் ஒரு திரவம் என்பதால் மில்லி லிட்டர்என்ற அளவைவிட லிட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவிடும் SIஅலகு மில்லி லிட்டர் ஆகும்.
“ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம்.”
எனவே,10மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ளவேண்டும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட,அந்த ஊரின் பரப்பளவு(சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும்.சென்னையின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் (174×10,00,000 சதுர மீட்டர்). எனவே சென்னையில்1mm மழைஎன்பது 17,40,00,000 லிட்டர்மழை பெய்ததாகக் கொள்ளலாம்.
நீர் வளம் காப்போம்
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்…
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்…ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..
இதனை கவனித்த அவர்கள் குளத்தை சுற்றிலும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்…

இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.
அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.
இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜீவ நதியாக ஓட வழிவகை செய்யும்…
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது உண்மை.
நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்ப்பதே இந்த நேரத்தில் நம் கடமையாகும். தமிழக அரசு பனை மரங்களை வெட்டிட தடை விதித்திருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.
பனை மரங்களே இயற்கையான மழை நீர் சேகரிப்பு அமைப்பாக விளங்குகின்றன.
Leave a Reply