வாசித்தது:- வாழ்க்கை அழைக்கிறது
ஆசிரியர்:- த.ஜெயகாந்தன்.
ராணிமுத்து வரிசையில் சிறுவயதில் படித்தது. ஒரே ஒரு கதாப்பாத்திரன் பெயர் மட்டுமே நினைவிருந்தது. தற்போது கிண்டிலில் படித்தேன். முதல் அத்தியாயத்தை படித்து முடிக்கும்போது ஆமாம் இப்படித்தானே இந்த அத்தியாயம் முடியும். இந்தகாட்சிக்கு ஜெயராஜின் படம் இப்படித்தானே இருக்கும் அடடே! கதை ஞாபகம் வருகிறதே என மனம் மகிழ்ச்சியில் துள்ள.
அடுத்த அத்தியாத்தை படிக்கும் போது…பழைய படம் புதிய காப்பி அளவில்தான் கதையைப் பற்றி எனது ஞாபகம் என்று தெரிந்தது.
பதிவு:- பெயரில் ராஜா நன்மை, தீமையை உணரும் பட்ட(அனுபவ) படிப்பு மட்டுமே. அதனால் எங்கு வேலைக்குச் சென்றாலும் முதலாளியுடன் சண்டைவர எந்த வேலையிலும் நிலைக்காமல் “உருப்படாதவன்” பட்டம் கிடைக்கிறது. தாய் லட்சுமி அப்பளக்குழவியோடு தேய்ந்து, ஆட்டுக்கல்லை கரைத்து அவனை வளர்க்கிறாள். “பொறுப்பற்ற பிள்ளை” என்றும் வயிறு இருக்கிறதே என்றும் தாய் வேதனைப் பட வீட்டிலிருந்து இலக்கின்றி கிளம்பும் ராஜா ஒரு சத்திரத்திற்கு வந்து சேருகிறான்.
ரௌடி சாரங்கன், தம்பி சபாபதி மீது பாசம் கொண்டவன். சபாபதியால் மனம்மாறி அவனோடு மனைவிபோல் வாழ்கிறாள் காமாட்சி. தம்பியின் வாழ்வில்(!) குறிக்கிடாமல் விலகுகிறான் சாரங்கன். போலீசில் மாட்டியும் அண்ணனைக் காட்டிக்கொடுக்காமல் சிறையில் இறந்துவிடுகிறான் சபாபதி.
சத்திரக்காரன் ரெசாக், அவனோடு வாழும் ரஸியா, சாரங்கன் துணைகொண்டு!? அபலையாய் வரும் பெண்களை (காமாட்சியும்)
ஊர் புள்ளிகளுக்கு…..வயிறு வளர்கின்றனர். தாய்மாமன் தன்னை தாரமாக்க நினைக்க, தங்கம் தனக்கு பிடித்தவனுடன் ஓடிவர, அவனோ அவளை விட்டு ஓடிவிடுகிறான். அவள் சத்திரத்திற்கு வரும் அதே நாளில்தான் ராஜாவும் வந்து சேர்கிறான். ஊர்பெருசு சிதம்பரத்திற்காக தங்கத்தை சாட்டையால் அடித்து பணியவைக்க முயற்சிக்கிறான் சாரங்கன். தன் தம்பி இருந்திருந்தால் என்று சொல்வதும், சிம்பரத்தின் மகன் சோமு வருவது என எல்லாவற்றையும் ராஜா ஔிந்திருந்து பார்த்து கேட்டு தெரிந்துகொள்கிறான்.
மறுநாள் சாரங்கனை சந்திக்கிற ராஜா தனக்கு வேலை வேண்டுமெனக் கூற, அவனைப் பார்த்ததும் சபாபதி போல் தோன்ற தம்பியாகவே நினைக்கிறான். சாரங்கன், ராஜாவிடம் தங்கத்தை வழிக்கு கொண்டுவரச் சொல்கிறான். தங்கத்தை சந்திக்கும் ராஜா, காதலிப்பதுபோல் நடிக்கும்படியும் தப்பிப்பதற்கு தான் உதவுவதாகவும் சொல்கிறான். அவனை உண்மையிலேயே விரும்புவதை அவள் வெளிப்படுத்துகிறாள். ராஜாவுக்கு அது உடன்பாடில்லை. இருவரும் தப்பும் நாளில் (சினிமாவிலும் கதையிலும் மட்டும் எப்படி?) தப்பாமல் மழை பெய்கிறது. சாரங்கனிடம் சிக்கிக்கொள்ளும் தங்கம் உண்மைையைச் சொல்லிவிடுகிறாள்.
ஓடி வரும் ராஜா ஒதுங்குமிடம் – எதற்கெடுத்தாலும் வேதாந்தம் பேசும் வேதாந்தியான அவன் மாமா வீடு. பருவ வயது, உறவு முறை, உருவத்தில் ராஜா. அவனுக்கு ராணியாக விரும்புகிறாள் மாமன் மகள் கீதா.
ராஜாவின் பார்வை ராணி கீதாவின் பக்கம்.(அன்பே வா).
சாரங்கன் ராஜாவை சந்திக்கும்போது தங்கம் உனக்கானவள் என்கிறான். தான் அவளை காதலிப்பதாக நடிப்பதாகச் சொன்னால் தங்கத்திற்கு என்னவாகுமோ எனக் குழம்புகிறான் ராஜா.
சிதம்பரம் தன்மகன் சோமுவுக்கு கீதாவைப் பெண் கேட்டு வரும்போது இருவரும் பார்த்துக்கொள்ள ராஜா அங்கிருந்து மீண்டும் அம்மாவிடமே வந்து சேருகிறான். சிறிது நாட்களில் அம்மா இறக்க அடுத்தடுத்த நிகழ்வுகளால் அவனறியாமலே அவன் கால்கள் மாமா வீட்டிற்குவர அன்றைய தினம் கீதாவின் திருமணம். மணமேடை ஏறுமுன்னே மண்மேடு ஆகிவிடுகிறாள் கீதா.
தன்னை தாங்கிய தாய், காலமெல்லாம் தன்னை தழுவியும் தாங்கியும் வாழ நினைத்த காதலி… அவன் மனமுடைந்து நிற்கும் அதே நேரத்தில் ராஜா தங்கத்திற்காக எனும் சாரங்கன். தங்கத்தை சுற்றி வரும் சிதம்பரத்துக்கும் இடையே பகை முற்ற
போலீசால் சுடப்பட்டு சாரங்கன் இறக்கிறான்.
அழும் தங்கத்திடம் ராஜா அவன் இறக்க வேண்டியவன் தான் என்கிறான். சிதம்பரம் என்கிறாள்? சாரங்கன் செய்த பாவத்திற்கு தான் இறக்கு முன்பாக தங்கத்திற்கு நல்ல துனணயைக் கொடுத்து நல்ல சம்பளத்தை பெற்றுவிடுகிறான். சட்டப்படி குற்றவாளியாகிறான்.
சிதம்பரத்தின் முடிவுக்கு இன்னொரு சாரங்கன்!!?
கால்பந்தில் இருஅணி வீரர்களிடமும் படாதபாடுபடும் பந்து இலக்கை அடைந்ததும் கோலாக மாறுகிறது.
வெறுப்பு , இழப்பு, சலிப்பு என மாறிமாறி உதைபடும் ராஜாவுக்கு மனவைி என்ற பொறுப்பான கோல்(டு) வாழ்(க)க்கையில் கிடைத்துவிட்டது ! இனி(ய) அவன் பயணம் தொடங்கிவிட்டது!!
ரசித்தது:-
தங்கமும் ராஜாவும் படித்தவர் படிக்காதவர் பற்றி பேசிக்கொள்வது, பணத்தைத் திரும்பக் கேட்கும் சிதம்பரத்திடம் சாரங்கனி்ன் நக்கல் பேச்சு , ராஜாவைத் தம்பியாக்கி அவன் காட்டும் பாசம், வேதாந்தி மாமா, காமாட்சியின் கோபம் என ஈர்த்து ஜெயித்துவிடுகிறார். ஜெய காந்த(ம்)ன் சார்.
அழகாக தொகுத்தருக்கிறீர
கள், அருமையான உவமைகள். வாழ்த்துக்கள்.
LikeLiked by 1 person
நன்றி
LikeLike