வாசித்தது:- என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு
ஆசிரியர்:- லா.ச.ராமாமிர்தம் (La Sa Ramamirtham)
என்அண்ணன் முதுகலை தமிழ் படிக்கும் போது லா.ச. ராவின் “பச்சைக்கனவு” கதைத்தொகுதியைக் கொண்டுவந்தார்கள். பச்சை கனவு, பாற்கடல், அபூர்வ ராகம் உள்ளிட்ட ஓரளவு நினைவில்..
இனி நான் தற்போது பதிவிட நினைத்த என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு கதைத்தொகுதியிலுள்ள பிரியதர்ஷினி கதைப்பற்றி:-
பைக் துடைக்கும் மகனைக் பார்த்து “எங்கே சவாரி” அப்பா கேட்க, அவனோ “உன்னிடம் எதுவும் மறைக்கவில்லை” என்பதோடு “ஸசைட் அடிக்க பஸ் ஸ்டாண்டுக்கு போகிறேன்” என சகஜமாகச் சொல்லி சிரிக்கிறான்.
“நெருப்போடு விளையாடதே” என அப்பா எச்சரிக்கிறார்.
“எத்தனை விதமாக பெண்கள் வருகிறார்கள் அப்பா, லைஃப் இஸ் வொண்டர் ஃபுல்” என சொல்லும் மகனிடம் “நெருப்போடு விளையாடாதே” என மீண்டும் சொல்கிறார். பைக்கில் அவன் கிளம்பிவிடுகிறான். உறவுமுறையில் அப்பா மகன். பழகுவதில் நேர் மூத்த சகோதரர்களாய் இருக்கின்றனர். தன்மகன் அழகன் எந்தப் பெண்தான் அவனை விரும்பமாட்டாள் என வெகு இயல்பாய் அப்பா பெருமைப்படுகிறார். சந்தோஷமாய் சிலிர்த்துக்கொண்டு வளைய வருவதைப் பார்த்து பஸ் ஸாண்டில் அவன் கொடி பறக்கிறது போலும் என்று ரசிக்கிறார்.
திடீரென மகன் காலேஜ் பஸ் தேடிப் பஸ் ஸாடாண்டுக்கு போகமல் இருப்பது, வேலைக்குச் சென்று வேளை தப்பி வருவது, சரியாக சாப்பிடாமல் இளைத்துப்போக சராசரி தந்தையாக காதல் தோல்வி என யோசிக்கிறார். ஒருநாள் அப்பாவிடம் ஏதோ சொல்ல வந்து சொல்லாமல் திரும்பிவிடுகிறான்; மகனைக் கேட்க மனம் தயங்குகிறது.
ஒருநாள், “என்னை மன்னியுங்கள். எங்களைஆசிர்வதியுங்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டோம்” என்று அதிரடியாய் கூறி பெற்றவர்கள் காலில் விழ திகைத்து நிற்ககின்றனர். நல்ல தாழம்பூ நிறமாய் நமஸ்காரம் செய்யத் தெரியாமல் நீண்டஜடை தரையில் புரள மண்டியிட்டு வணங்கி திரும்ப மண்டியிட்டு எழும் பெண்ணின் பெயரைச் சொல்ல அடுத்த கட்ட அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர் பெற்றோர்கள். எனக்கும் ஷாக்.
ஞாயிற்றுக் கிழமை இரவு படுத்துக்கொண்டு பிரியதர்ஷினியைத் தொடங்க அவரின் வழக்கமான பாணியில் கதை இல்லாதிருக்கவே ஹெட்போனுக்கு காதைக் கொடுத்து பாட்டை ரசித்தபடியே இந்த கதையை படித்துவிட்டு தூங்கிவிடலாம் என யோசித்தேன்; கண்களைத் தூக்கம் .வ…ரு…ட விடாப்பிடியாக கடைசிவரியைப் படிக்கவும் திடுக்கிட்டு நாம் படித்த கதைதானா, தூக்க கலக்கத்தில் பக்கத்தை மாற்றினோமா, வரிகளை வார்த்தைகளை விட்டுவிட்டோமா, என ஹெட்போனை எடுத்துவிட்டு, நிதானத்துடன் பக்க எண்களை தேட சரியாக இருந்தது. இருப்பினும் முதலிலிருந்து பார்வையை ஓட்டி கடைசி ஒன்றிரண்டு பாராவையும் திரும்ப திரும்ப படித்தேன்.
அந்தக் காலத்திலேயே எப்படி இப்படி ஒரு கதையை ல.ச.ராவால் எழுத முடிந்தது! கதையின் தாக்கம் தூக்கமில்லாமல் போனது. இனி லா.ச.ராக்கதை (இரவில் ) படிக்கக்கூடாது. பகலில் மட்டுமே படிக்க வேண்டும்.
Leave a Reply