ஆசிரியர்:- ல.ச .ராமாமிர்தம் (La Sa Ramamirtham)
சிறுகதைகளின் தொகுதியாக உள்ளது. முழுமையான புத்தகமாய் என்னிடத்தில் இல்லை. எத்தனைக் கதைகள் தெரியவில்லை. ஜ்வாலாமுகி, ஜனனி, த்வனி, அமலி, தோடு, பிரியதர்ஷினி, தாஷாயிணி, உச்சி வெயில், என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு எனபெரும்பாலான கதைகளிலும் பெண்களை சக்தியின் ரூபமாக, ராக சங்கீதமாக, ஔிரும் ஜோதியாக உருவகப்படுத்தி நம் உள்ளத்தில் உயர்ந்துவிடுகிறார்.எனக்கு அவரின்ஒருகதையைப்பற்றி ஒரேயொரு பதிவைப்போடுவது நியாயமாகப்படவில்லை.
ரசித்தகதை:- (பிரியமுள்ள சிநேகிதனுக்கு என்ற தொகுப்பிலும் உள்ளது) உச்சி வெயில் கதையில் தன்வருமானதத்தில் குடும்பம் நடத்த முடியாது என, திருமணத்தை ஒத்திவைத்து வெளியூரில் வேலை பார்க்கும் மகன் சேதுவுக்கு வாய் ருசிக்க சமைத்துப்போட வரும் தந்தை. மகன் வர நேரமாக பாறை ஒன்றின் மேல் இரவில் பனியின் குளிரில் அமர்ந்து பாதையில் விழி வைத்திருப்பார். அந்த பாசத்தில் அவர் அமர்ந்திருக்கும் குன்று நெகிழ்ந்து தனக்கு முதல்மூச்சு வந்ததாகச் சொல்லி, பார்வையாளனாகவும் கதைநாயகமாகமவும் கதையை ஆரம்பிக்கும்.

கரிசனத்துடன் கடிந்து கொள்ளும் மகன் அவரை தூக்காத குறையாக அழைத்துச் சென்று கதவை சாத்த, அதற்கு சாட்சியாக “நிற்கிறேன் அல்ல உட்கார்ந்திருக்கிறேன் அல்ல இருக்கிறேன்” என்கிறது பாறை.
அதன்மீது மென்மையாக தொட்டுச்செல்லும் காற்று, தன்னை சகோதரனாக (!) ஏற்கசொல்லி, அதே உரிமையில் “நீதான் விழித்துக் கொண்டாயே உன்னைச் சுற்றிலும்பார்” என்கிறது. சகோதரன் சொன்னதும் கேட்காமல் இருக்க முடியுமா? அடிவாரத்தில் புள்ளியாய் தெரியும் வீடுகள், கட்டையான வயல்கள், புல்வெளிகள், பாம்பாய் நெளிந்தோடும் பாதை என்றெல்லாம் சுற்றி பார்க்கிறது நாயகம்.
இதுவரை மோட்ச மென்ற (அசைவற்றிருக்கும் பாறையை இப்படி யோசித்திருக்கிறார் லா.ச.ரா) மோனநிலையில் இருந்து, முதல்முறையாக விழிப்பும் உணர்வும் வந்ததால், விழித்துக் கொண்டேயிருக்க, தங்க தாம்பாளமாய் தகதகத்து சூரியன்வர பொழுது விடிகிறது. மெல்ல கிரணங்கள் வெளிவரவர மதிய பொழுதாக, இதுபோன்ற ஒரு பகல் பொழுதில் சேது தன் அப்பாவை ஊருக்கு அனுப்பிவிட்டு வாசலிலேயே அமர்ந்து அழுவதைப் பார்க்கும் பாறை என்னால் என்ன முடியும் என்று நினைக்கிறது.
ஒருபிற்பகலில் இரண்டு வாண்டுகள் வந்து, “டேய் இந்த குன்றினுள் இருக்கும் குகைக்கு நீ போயிருக்கிறாயா?” என ஒருவன் கேட்க. “என் தலைமேலே கையவச்சு சொல்றேன்” என்று சொல்லி இஷ்டத்துக்கு அளந்துவிட, அவர்கள் சென்றபின் இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே புரியவில்லை என்று பாறைக் குழம்(பா) புகிறது.
காலையில் சற்று அதிக நேரம் கண்ணயரும் சேது வெளியில் வரும்போது குன்றின் மீது நிற்கும் கூட்டத்தைப் பார்த்து நெருங்கிவருகிறான், சுனையில் பெண்ணொருத்தி மானத்தை மறைக்கும் சேலை மலையை நோக்கிபறக்க தண்ணீரில் நிற்பதைக் காண்கிறான்(சகோதரன் காற்றின் விளையாட்டா என்ன இது என கூசி குறுகுகிறது பாறை)அவர்களை அறைகிறாற் போல் உங்கள் குடும்பத்து பெண்ணாக இருந்தால் என்று சொல்லிக்கொண்டே அரை (இடுப்பு) யிலிருக்கும் வேட்டியை உருவி அவளின் மானத்தைக் காக்கிறான்.
புடவையை தொலைத்தற்காக சித்தாத்தாள் ஒன்றும் சொல்ல மாட்டாள் நயினா திட்டுவார். என்னை இப்படி நாலுபேர் பார்த்துவிட்டார்களே யார் கட்டிப்பா என்கிறாள். தன்னையறியாமல் நா கட்டிக்கறேன் என்கிறான் சேது. ரீமிக்ஸோ ஒரிஜினலோ அவரவர் விருப்பத்திற்கு ஏற்றபடி பாட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
சூரிய பகவானே குழந்தைகளுக்கு அருள் புரியுங்கள் எனவேண்டுவது நமதுபாறையன்றி வேறுயார்?
எல்லாவற்றுக்கும் சாட்சியாக உள்ள பாறை அதன்பார்வையில் கதை சொல்லியாக வருவது. விருது வாங்கிய குறும்படம் பார்த்த நிறைவைத் தருகிறது.
என்னில் சிறியதான கல்லும் பாட்டுக்கு கரைந்துருகும், பெரியதான நான் (பாறை) பாசத்தில் நெகிழ்ந்து இழைந்து மூச்சுவிடுகிறேன்.
மனிதர்களே இனி நீங்கள் உங்களின் தொடர் தோல்விகள் கஷ்டங்கள் நஷ்டங்கள் இழப்புகளால் மனம் பாறையாய் இறுகியது என்று சொல்லாமல் புது உதாரணம் தேடிக்கொள்ளுங்கள். என்ன சரிதானே!!!
லா.சா.ரா அவர்கள் பாறையை நாயகமாகவும், காற்றை சகோதரனாகவும் ஆக்கியிருப்பது அழகு. அன்புமோழி அவர்கள், இந்த கதையில் தான் ரசித்தவற்றை அழகாக தொகுத்தருப்பதும், முத்தாய்ப்பாக பாறையை பற்றிய நம் பார்வையை அசைத்திருப்பதும் நன்று.
LikeLiked by 1 person
நன்றிகள்
LikeLike