எம் ஆருயிர் நண்பர் திரு.அரசு-தமிழ்ப் பேராசிரியர் அவர்கள் தந்த குறிப்பின் அடிப்படையில் தேடியவை. அன்னாருக்கு நன்றி.
முல்லை நிலம்
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.
காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது.
கார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
கருப்பொருள்
- தெய்வம்: திருமால்
- மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையர் , இடைச்சியர்
- விலங்கு: மான், முயல்
- உணவு: வரகு, சாமை, நெய், பால்.
- பறவைகள்:காட்டு கோழி, கருடன்
- தொழில்: கால்நடை வளர்ப்பு , விவசாயம் செய்தல்
- குல விளையாட்டு: ஏறுதழுவுதல்
- புலவர்: பேயனார்
உரிப்பொருள்
- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
முல்லை நிலத்தினர் உணவு
தொண்டைநாட்டு முல்லை நில மக்கள் பால்,திணையரிசிச் சோறு உண்டனர். முல்லை நில மக்கள் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த “கும்மாயம்” எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். மலைநாட்டு முல்லை நில மக்கள் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைக்கப்பட்ட உலையிற்போட்டு குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். நுண்ணிய ஒரே அளவுடைய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய சோற்றையும் திணை மாவையும் உண்டனர்.
முல்லை. நில மக்கள் ஆநிரை வளர்த்தலும், வேளாண்மையும் முக்கிய தொழிலாக செய்து வந்தார்கள். இம்மக்களின் முதன்மை உணவு வரகு. சாமை ஆகும். தினையும் உண்டு வந்தார்கள் எனலாம். ஆநிரை வளர்த்தல் தொழிலானதால் பால் பொருட்களும் உணவாகின எனலாம்.

சாமை ஆங்கிலத்தில் லிட்டில் மில்லட் என்று அழைக்கப்படுகிறது..
இது ஒரு புன்செய் நிலப் பயிர்.
மருத்துவக் குணங்கள்
எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
சாமையில் இயற்கையாகவே சுண்ணாம்பு சத்து உள்ளது. புரதமும் நிறைந்துள்ளது. இது எலும்பு முறிவு மற்றும் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. தளர்ச்சியை போக்கி எலும்புகளுக்கு ஊட்டம் அளிக்க செய்கிறது. முதுகெலும்பை பலப்படுத்துகிறது
சாமை மலச்சிக்கலைப் போக்க வல்லது.
இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும். அதிக நார்ச்சத்துக்களை உள்ளடக்கியுள்ளதால் மலச்சிக்க லை தடுப்பதோடு உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றவும் செய் யும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடியது
நீரிழிவு நோயாளிகள் சாமை உணவை உண்ண வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் நார்ச்சத்து மிகுந்த சாமையை எடுத்து கொள்ளும் போது இது செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் சுரப்பை தூண்டி விடுகி றது. இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்திருக்கவும் செய்கிறது
பெண்களுக்கு சாமை அரிசி
ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பெண்கள் மாதவிடாய் கோளாறுகள், அதிக உதிரப்போக்கு அல்லது குறைந்த உதிரபோக்கு, அதிக வலி, உடல் சோர்வு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.. சாமையினால் போதுமான ஊட்டச்சத்து சரியான முறையில் சேரும் போது மாதவிடாய் கோளாறுகள் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதோடு கருப்பை ஆரோக்கியமும் வலுப்படும்.
ஆண்களுக்கு நன்மை செய்யும் சாமை
சாமை அரிசியை உணவாக எடுத்துகொள்ளும் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். தினசரி ஒரு வேளை சாமையை உணவாக எடுக்கலாம். இ வை எல்லா வயதினருக்கும் ஏற்றவை. சுலபமாக ஜீரணிக்க கூடியவை. சிறிதளவு எடுத்துகொண்டாலும் வயிறு நிரம்ப கூடும்
இரத்த சோகை தடுக்கும் சாமை
சிறுதானியங்களில் சிறந்தது சாமை என்று சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம். இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சோகை வராமல் காக்கப்படுகிறது. ஒரு கப் சாமை நாள் ஒன்றுக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்து தேவையில் மூன்றில் ஒரு பங்கு கொடுத்துவிடும்.

வரகு அரிசி நன்மைகள்
சிறுநீரகம் கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் வரகரிசி கொண்டு செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தாகம் தணிவதோடு, சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். –
வரகரிசி ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்திம், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே ரத்த சுத்தி ஏற்பட விரும்புபவர்கள் அடிக்கடி வரகரிசி உணவுகளை சாப்பிடுவது நல்லது.
வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். ஊட்டச்சத்து நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது.
தினமும் காலை அல்லது மதியம் வேளையில் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் வெகு சீக்கிரத்திலேயே ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்..
வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது.
நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் வரகரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை அல்லது மதியம் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.
வரகரிசி உணவுகளை தினமும் அல்லது இரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது.
வரகரிசியில் புரத சத்து அதிகம் உள்ளது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும்
வரகரிசியில் இருக்கும் சத்துக்கள் உடலில் ஏற்பட்டிருக்கும் புண்கள், வெட்டுக்காயங்கள், அதனால் ஏற்பட்ட தழும்புகள் போன்றவற்றை விரைவாக ஆற்றுகிறது. மேலும் பாதத்தில் ஏற்படும் பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது.
பழந்தமிழர் உணவுகளான சிறுதானியங்கள் பயன்படுத்தி உணவுப் பண்டங்கள் செய்முறைகள்
யு டியூப் வலைத்தளங்களில் ஏராளமாக பதிவிடப் படுகின்றன. எனவே அவற்றை பார்த்து நாமும் வித விதமான நலம் தரும் உணவுகளை செய்து உண்டு நலம் பெறுவோம் .
அடுத்ததாக விரைவில் மருதம் திணையின் உணவு பற்றி பார்ப்போம்