சங்க இலக்கியத்தில் மலர்கள் பகுதி 1.(17.05.21) , பகுதி 2 .(20.05.21), பகுதி 3.(23.05.21) பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி 4 இப்பொழுது பதிவிடப்படுகிறது. இத்துடன் குறிஞ்சி பாட்டில் உள்ள 99 மலர்களையும் கண்டுவிட்டோம்.

நீல நிறத்தில் பூக்கும் கருவிளம் மலர் போல் பகன்றை வெண்மை நிறத்தில் பூக்கும். கொடி சிவப்பாக இருக்கும். வயலில் தழைக்கும் ; சேற்றில் வளரும். பசுமையான புதரில் மலரும்.

77.பலாசம்.Common Name:Flame of the Forest Botanical name: Butea frondosa Roxb.ex Willd
இதற்கு பரசு, பொரசு, புரசை என்று வேறு பெயர்களும் உண்டு. செம்மஞ்சள் நிறத்தில் பூங்கொத்தாக பூக்கும். இந்த தாவரத்தின் பூ,விதை,பட்டை, பிசின் அனைத்தும் மருத்துவ பயன் உள்ளவை. இதனை கிளிமுக்குப்பூ என்பார்கள். ஜார்கண்ட் மாநிலத்தின் மநில மலராக உள்ளது.

பிண்டி ஒரு செந்நிற மலர். மகளிர் காதில் குழை போல அணிந்து கொள்வர். ஆடவர் இந்த மலர்களையும், தளிர்களையும் காதில் அணிந்து கொள்வர். இக்கால அசோக மரம் என்பார்கள்.

வஞ்சியை பிரம்பு மரம் என்கிறார்கள் இதன் மலரே வஞ்சி மலர். மேலும் சீந்தில் கொடியையும் வஞ்சி என்கிறார்கள். பண்டை காலத்தில் எதிரி நாட்டு படையை முற்றுகை இடும்போது வீரர்கள் சூடும் பூ.

80.பித்திகம் Common Name: Wild Jasmine Botanical name: Jasminum angustifolium (L.) Willd.
காட்டு மல்லிகையான இது பித்திகை என்றும் பெயர் பெறும்.இதன் அரும்புகள் சிவப்பாக இருக்கும். கானல் வரி பாட்டால் கோவலன் பிரிந்து போக, மாதவி பித்திகம் அரும்பை எழுத்தாணியாகக் கொண்டு தன் மேனியில் பூசி இருந்த செம்பஞ்சுக் குழம்பால் மடல் எழுதினாளாம்.

இதை நச்சினார்க்கினியர் கருநொச்சி என்பர். சிறிய நீல நிற பூக்களாக இருக்கும் . முற்றுகையை தகர்த்தெழும் வீரர்கள் சூடும் பூ.நொச்சியில் கரு நொச்சி, மனைநொச்சி, மலைநொச்சி, வெண்நொச்சி என வகைகள் உள்ளன.மூண்றிலை, ஐந்திலை , ஏழிலை உள்ள நொச்சிகள் உள்ளன.


மூலிகை செடியான இது துளசி செடி ஆகும்.ஏறத்தாழ 50 செ .மீ உயரம் வரை வளரும் இதன் அணைத்து பாகங்களும் பயன்படும். துழாய் ( நீலத்துளசி ) துவளம், மாலலங்கல் ,என்ற பெயர்களும் , நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), காட்டுத் துளசி என்ற வகைகளும் உண்டு.



நறவம் பூ மணமிக்கது. கொத்து கொத்தாக பூக்கும். பூமாலையாக தொடுத்து அணிந்து கொள்வர். முல்லையோடு சேர்ந்து பூத்திருக்கும். நறவம் என்னும் சொல் பூவில் உள்ள தேனை குறிக்கிறது. நறவம் கொடியை புகைத்து மனம் பரப்புவர்.

புன்னை எனவும் பெயர் பெற்ற இது, அழகிய தோற்றம் கொண்ட மரங்களில் ஒன்று.வெண்ணிற பூவும்,மஞ்சள் நிற பூந்துகட் பகுதியும் கொண்டது.கடற்கரை பகுதியில் வளரும்;பூக்கள் நறுமணம் மிக்கவை .

பாரம் என்பது பருத்தியை குறிக்கும். இலேசான பொருளை பாரம் எனல் மங்கள வழக்கு.கொடிய நஞ்சுள்ள பாம்பு நல்லபாம்பு, கருப்பு நிற ஆடு வெள்ளாடு என வழங்கப் படுகிறது. கொடி பருத்தியே பாரம் என்றொரு கருத்தும் உண்டு.


குருக்கத்தி என்பது ஒரு மலர்க்கொடி.இது மாதவி, குருகு, கத்திகை என்றும் அழைக்கப் படும். வசந்தமல்லி என்றும் மக்கள் வழங்குவர். .நீண்ட, கூரிய, கரும் பச்சை இலைகளையும், கொத்தான மனமுள்ள மலர்களையும் உடையது. இம்மலர் வெண்ணிறமானது,ஓர் அகவிதழ் மஞ்சள் நிறமாக இருக்கும். கண்கவர் மலராகும்..


இது அகில் பூ எனப்படுகிறது. அகில் கட்டைகள் எரிக்கப்படும் போது நறுமணப்புகை எழும். மகளிர் குளித்தபின் கூந்தலை உலர்த்த அகிற்புகை பயன்படுத்துவர்.

கடற்கரை ஓரத்திலும் , சிறிது தள்ளி கானலிலும் வளரும். கருமையான கிளைகளை கொண்டிருக்கும். .பூக்களை போலவே இலைகளும் அழகானவை. புன்னையின் மொக்கு, பூ, காம்பு அனைத்தும் வெண்ணிறமாக இருக்கும்.


பார்வைக்கு மிக அழகானப் பூ. இதன் இதழ்கள் வெளிர்ந்த வெண்மை நிறத்தைக் கொண்டிருக்கும். உட்புறத்தில். இளம் மஞ்சளாக காணப்படும். ஏராளமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

இருவாட்சி எனப்படும் பூவே இதுவாகும்.. அனங்கம் என்றும் அழைக்கப்படும் அரேபிய மல்லிகை. கருமுகை என்றும் அழைக்கப்படும். இரவில் மலரும் மனம் மிக்க சிறு வெண்ணிறப் பூ.

குவிந்த வெண்மை நிறப் பூக்கள்.; நறுமணம் மிக்கது. இலைகள் பச்சையும் வெளிறிய வெள்ளையும் கலந்து காணப்படுகிறது. இது குரா , குரவு, குறுந்தம் என்று அழைக்கப்படுகிது. திருப்பெருந்துறையில் சிவன் குருந்த மரத்தின் கீழிருந்து அறிவு விளக்கம் தந்ததாக மாணிக்கவாசகர் கூறியுள்ளார்.

தேக்கு மரத்திற்கும், தோதகத்திற்கும் அடுத்து தரமான மரமாக கருதப்படுகிறது.வேங்கை மரத்தின் கீழ்தான் இறுதியாக கண்ணகி வந்து நின்றாள்.முற்காலத்தில் வேங்கை பூப்பதை வைத்து புத்தாண்டை கணக்கிட்டார்களாம். மஞ்சள் நிறத்தில் மாலை மாலையாக பூத்து நிற்கும். சிவப்பு நிறத்திலும் பூக்கள் உண்டு.

செந்நிறமுள்ள மலை எருக்கு . குறிஞ்சி நிலத்து கோட்டுப்பூ. அரக்குச் செம்மையில் ..பேரழகானது. பூக்கள் கொத்தாகவும்,மிருதுவாகவும் இருக்கும். ஒவ்வொரு பூவும் ஐந்து முனை இதழ்களாகவும் நடுவிலிருந்து உயர்ந்த சிறிய அழகிய கிரீடத்தையும் கொண்டு மகரந்த கேசரத்துடன் காணப்படும். இதன் தண்டில் பால் வரும்..
மீதமுள்ள சங்க இலக்கிய மலர்களை பின்னர் பார்ப்போம்.
Leave a Reply