சங்க இலக்கியங்களில் மலர்கள் பகுதி..1 (25 மலர்கள்) கடந்த 17.05.21 அன்று பதிவிட்டதைத் தொடர்ந்து பகுதி..2 (25 மலர்கள்) இன்று பதிவிடப்படுகிறது.
தொடர்ந்து பகுதி..3 விரைவில் பதியப்படும்.கண்டு இன்புறுக.

நீல நிற மலர்கள். திருமாலின் மேனி வண்ணத்திற்கு உவமையானது. இம்மலர் காய்ப்பது இல்லையாம். மனமுள்ள இம்மலரால் வாசனை திரவியங்கள் செய்கிறார்கள்.

27.ஆவிரை – Tanner’s senna , (Botanical name: Cassia auriculata L.
ஆவாரம்பூவே ஆவிரையாகும்.தைப்பொங்கலில் முக்கியத்துவம் பெறும். நீரிழிவு முதலான நோய்களுக்கு மருந்தாகிறது.

சிறு மூங்கில் இனமே வேரல் எனப்படுவது. சங்க காலத்தில் பலா மரங்களுக்கு அடியில் வேலியமைக்க பயன்பட்டது.

29. சூரல் – Wild Jujube , Botanical name: Ziziphus oenoplia (L.) Mill.
இது முள் உள்ள காட்டுப் புதர்ச் செடி. கிராமங்களில் இதை வெட்டி எடுத்து கவைக் கொம்புகளால் தூக்கி வந்து வேலி அமைப்பர்.

தேங்காய்ப்பூ கீரை, சிறு பீளை எனவும் கூறுவர்.பொங்கலின் போது காப்புக் கட்டவும், விலங்குகளுக்கு மாலை கட்டவும் பயன்படுத்துவர். மருத்துவ குணம் நிறைந்தது.

குண்டுமணி,குன்றிமணி,குன்றி ஆகிய பெயர்களும் உண்டு. கருஞ்சிவப்பில் கருப்பு நிற மரு உடைய விதையுடையது.

ஒரு வகையான அத்தி. வசந்த கால மல்லிகை என்பர்.
மழை பொழியும் இடி முழக்கத்தால் குருகிலை தளிர்க்கும். குருகிலை என்னும் பூ மகளிர் புன்னகை பூப்பது போல வெண்மையாகப் பூக்கும்.

சமவெளிகளிலும்,ஆற்றங்கரைகளிலும் காணப்படும். மருத மரத்தில் வெண்மருது கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது. பூமருது என வழங்கப்படுவதில் ஊதா நிறம் சிறிது கலந்து இளஞ்சிவப்பில் பெரிய இதழ்கள் கொண்ட மலர்களை உடையது. Pride of India

இக்காலத்தில் கோங்கு என்கிறோம். கோங்கின் மகரந்தப் பொடியை மகளிர் மேனியில் பூசிக் கொள்வர். கோங்குப்பூ குடை போன்றும் மீன் போன்றும் இருக்கும்.

உயரமான மரம். இது போங்கம், குனி, குன்னி, மலமஞ்சடை, கல்மாணிக்கம் உள்ளிட்ட பெயர்களில் வழங்கும். மலர்கள் இளஞ்சிவப்பாகவும், கனி நீள்வட்ட வடிவிலும், விதைகள் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

இதை நச்சினார்க்கினியர் மஞ்சாடி, மரப்பூ என்பார். பொன்னை நிறுக்கும் ஒரு அளவை ஒன்று ‘மஞ்சாடி’ எனப் பெயர் கொண்டது. இதன் விதை இரண்டு குண்டுமணி எடைக்கு நிகரானது.

பாதிரிப்பூக்கள் வேனிற்காலத்தில் மலரும். பாதிரி மலர் சிறிது வளைந்து இதழ் வட்டம் குழாய் போன்று வளைந்து உள்ளதால் ‘வேனிற் பாதிரி கூன் மலர்’ என இலக்கியங்கள் கூறும்.

செருந்தி மலர் பொன் போல பூக்கும். வண்டு குடிக்கும் தேன் உள்ளது. நீளமாக வளர்வதால் நெட்டுக் கோரை, இலை ஓரங்கள் வாள் போல் இருப்பதால் வாட் கோரை என கூறுகின்றனர்.வயல் வரப்புகளில் வேலிபோல் வளர்க்கலாம்

மரத்தில் படரக்கூடிய கொடி இனமாகும். பூக்கள் பூனைப் பற்கள் அளவில் காணப்படுகின்றன. புனலிக் கொடி, காட்டு மல்லிகை, மோசி மல்லிகை என உரையாசிரியர்கள் கூறுவர்.

நறுமணம் மிக்கது. வாசனை திரவியங்கள் தயார் செய்கிறார்கள். சிவாலயங்களில் காப்பு மரமாக விளங்குகிறது. ஆண்மை குறை போக்கும் மாமருந்து.

கரந்தையை அடையாளம் காண்பதில் அறிஞர்கள மாறுபடுகின்றனர். கவரப்பட்ட ஆனிரை மீட்க கரந்தை சூடி ஆனிரை மீட்பது பண்டைத் தமிழரின் போர் முறையாகும்.

42.b. குளவி – Common Name: Patchouli , Botanical name: Pogostemon cablin Benth.
கார்காலம் தொடங்கி முதல் மழை பெய்தவுடனேயே மொட்டு விட்டு பூத்துக் குலுங்கும். மிகுந்த மணமுடையதால் வாசனை திரவியம் தாயாரிக்கப் பயன்படுகிறது.

காய்கள் புளிப்பானவை. மரம் இலகுவான உறுதித் தன்மையுடையதால் கடினமானவற்றுக்கு உபயோகப்படுவதில்லை. இதன் பட்டை வயிறு தொடர்பான நோய்களுக்கு மருந்தாகிறது.

மலர்கள் நறுமணமிக்கவை. முன்னர் தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் சிதம்பரம் தில்லை எனப்பட்டது. தில்லை காய்கள் முனிவர்களின் சடைமுடி போல் காய்த்துத் தொங்கும். ஆண்பூவும், பெண்பூவும் உண்டு.

45.b.பாலை – Wongat plum , Botanical name:Mimusops Kaui L வகைகள்:உலக்கைப் பாலை, குடச பாலை, வெப்பாலை, ஏழிலைப் பாலை, முசுக்கைப் பாலை. ஒரேகாம்பில் ஏழு இலைகளைக் கொண்ட ஏழிலைப் பாலை மரத்தில் கரும் பலகை செய்வார்கள்.பாலை அதிகம் பூத்தால் அதிக மழையாம்.

46.b.முல்லை- Common Name: Juhi , (Botanical name: Jasmnum auriculatum Vah)
இன்றளவும் முல்லையில் பல வகைகள் நாமறிவோம். முல்லைக் கொடி படர தேர் தந்த பாரியின் கொடைத்திறம் போற்றுவோம்.

நாய்த்துளசி, புனத்துளசி, கஞ்சங்குல்லை, குல்லை எனும் பெயர்கள் உள்ளன. வெள்ளை அல்லது லாவெண்டர் நிற பூக்களைக்கொண்ட மூலிகைச் செடி..இது துளசியை ஒத்திருக்கும் கஞ்சாச் செடி.

கார்கால முதல் மழையின் போதே பூக்கும்; மறுநாள் கொட்டி விடும். இலையில்லாமல் பூக்கும். பூக்கள் வெண்மை நிறுத்தில் நறுமணத்துடன் இருக்கும்.

செங்கருங்காலி அல்லது மரோடம் எனப்படும். நறுமணம் மிக்க இம்மலரை அதிரல், பாதிரி மலர்களோடு சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் சூடிக் கொள்வர்.

இன்றளவும் வாழையை அறியாதவர் யாருமில்லை. பூத்தண்டு தாவரங்களைக் கொண்ட பேரினம் ஆகும்.
பகுதி 3 இல் அடுத்த 25 மலர்களைக் காணலாம்….