ராமன் எல்லாருக்கும் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.” போலீஸ் வண்டி நம்ப ஆட்களுடன் விடிகாலை ஐந்து மணிக்கு வேலூரில் கிளம்பி கிருஷ்ணகிரி போவுது. நான் ரோடுல போடுற குதிரை லாடத்தால நிச்சயம் வண்டி பங்சர் ஆகி பாலத்திலேயே நிற்கும். என்னோட விசில் சத்தம் கேட்டதும் எல்லாரும் எழுந்திரிச்சி வண்டில பாய்ஞ்சிடனும். இப்போ தூங்கறது போல படுத்துக்குங்க “
பாலத்தின் பக்கவாட்டில் படுத்து தூங்கும் ஊர்க்காரர்களுடன் ராமனின் ஆட்கள் போய் படுத்துக் கொண்டார்கள்.
வந்து கொண்டிருந்த காவல் வண்டி வலது முன்புற சக்கரத்தில் பங்சர் ஆகி பாலத்தில் நின்று விட்டது. ஓட்டுனர் ஸ்டெப்னி மாற்றும் வேலையில் இருந்தார். காவலர்கள் துப்பாக்கியுடன் கிழிறங்கி நின்று சுற்றுப் புறத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது
படுத்திருந்தவர்களில் ஒருமுனையில் இருந்து எழுந்த ஒருவன் கையிலிருந்த மூன்றடி நீள குச்சியால் படுத்திருந்த எல்லாருடைய காலிலும் படும்படி கோடு போட்டபடியே நடந்து சென்றான். இவன் ஏனிப்படி செய்கிறான் என காவலர் சந்தேகத்தோடு பார்க்கும் போதே விசில் சத்தம் கேட்டது. அவ்வளவுதான் உருட்டுக் கட்டைகளுடன் ஆட்கள் ‘திபுதிபு’ வென பாய்ந்து வந்து வண்டியில் ஏறினார்கள்; ஏறிய வேகத்தில் கூட்டாளிகள் இல்லாததால் திரும்பி இறங்கப் பார்த்தார்கள். காவலர்கள் துப்பாக்கி முனையில் அவர்களை உள்ளே தள்ளி கதவை தாழிட்டார்கள்.
வண்டி கிளம்பி வேக மெடுக்கையில் கொள்ளை குற்றவாளிகளை ஏற்றியவண்டி வேகமாக பின் தொடர்ந்தது.
பலே காவல் திட்டத்தால் குதிரை லாடம் போட்டு பங்சர் செய்து கொள்ளை குற்றவாளிகளை மீட்க நடந்த ஒரு முயற்சி தோற்கடிக்கப் பட்டதுடன், மொத்த கூட்டமும் பிடிபட்டது.
கதை , நச்.
LikeLiked by 1 person
நன்றி…
LikeLike