(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
குமார், சசி, ராஜ் , மோகன் நால்வரும் டீக்கடையின் உள்ளே சென்று உட்கார்ந்தார்கள்,
” மாஸ்டர் நாலு டீ”
குமார் ஆரம்பித்தான், ” ஒரு பேஸ் புக் குழுமத்ல ஒரு சிறுகதைப் போட்டி. ஒரு பாழடைந்ந பங்களா படத்தை் போட்டு அதுக்கு கதை எழுதனுமாம். அத்தோடு “சத்தம் அங்கிருந்துதான் வருவது போல் தோன்றியது” என்ற வரிகளும் அதில் இருக்கனுமாம். வழக்கம் போல் இந்த போட்டிக்கும் நான் கதை எழுதப் போறேன்”
” ப்ரோ, நீ தான் தொடர்ந்து எழுதுறாயே” இது சசி.
“இந்த முறை கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தோட எழுதலாம்னு இருக்கேன்”
அதற்குள் டீ வந்து சேர்ந்தது. டீயை உறிஞ்சிக் கொண்டே மீண்டும் குமார் தொடர்ந்தான்,
” ஆற்றங்கரைக்கு போற வழியில இருக்கற பாடைந்த பழைய பண்ணையோட பங்களாவுக்கு போய் அந்த அனுபவத்த எழுதலாம்னு பார்க்கறேன். சசி யும் என் கூட வர்ரான்”
அன்றைய தினம் பௌர்ணமியாக இருந்ததால் வழியிலும் பங்களா வெளியிலும் நிலவொளி பிரகாசமாக இருந்தாலும், மேகக் கூட்டத்தால் சந்திர ஔி லேசாக மங்கலாகத்தான் இருந்தது; அது பார்வையில் மயக்கத்தைத் தந்தது. அதனால்தான் சங்ககாலக் காதலர்கள் நிலவொளியில் சந்தித்து மயங்கிக் கிடந்தார்களோ.
மணி இரவு பதினொன்று.
ஒருவன் கையில் டார்ச் லைட், மற்றவன் கையில் சார்ஜபிள் எமர்ஜென்சி விளக்கு. முதுகில் தொங்கிய பையில் பெரிய அளவு மெழுகு வர்த்திகள்; தீப் பெட்டி , தண்ணீர் பாட்டில் இருந்தன.
மண்டிக்கிடந்த புதரை விலக்கிக் கொண்டு பங்களாவின் போர்டிக்கோவுக்கு வந்தார்கள். கதவே இல்லாமல் திறந்தே கிடந்தது. குமார் உள்ளே டார்ச் லைட் அடித்துப் பார்த்தான்; வௌவால்கள் மேலே மோதுவது போலப் பறந்தன. சார்ஜபிள் விளக்கை ஔிரவிட்டான் சசி. பெரிய விஸ்தாரமான கூடம்; எந்த ஆசனங்களும் இல்லை ; மெல்ல முன்னேறினார்கள். ஏதோ ஒன்று அவர்கள் மேல் பாய்ந்து ஒடியது, பெருச்சாளியோ? திடீரென பெண்ணின் அழுகுரல் பலமாகக் கேட்டது. சிகரெட் நாற்றம் அடித்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“சத்தம் உள்ளிருந்தா” குமார் கிசுகிசுத்தான்.
“சத்தம் அங்கிருந்துதான் வருவது போல் தோன்றியது.” சசி வாய் குளறினான். பெண்ணின் அழுகுரல் நின்றது; ஆர்ப்பரிக்கும் ஆணின் சிரிப்பொலி கேட்டது. சசிக்கு வாய் உலர்ந்து உதடு ஒட்டிக் கொண்டு பேச வரவில்லை.
கத்திக் கொண்டே வெளியே ஓடிய காட்டுப் பூனைகளுக்கு வழிவிடப் போன குமார் தடுமாறிக் கீழே விழுந்தான். டார்ச் லைட் தள்ளிப் போய் விழுந்தது. எடுக்கப் போன சசி பயந்து பின்வாங்கினான். ஓர் உருவம் உள் அறையில் சுருட்டு புகை பிடித்துக் கொண்டிருந்தது; நாற்றம் குடலைப் புரட்டியது. உள்ளே போவதா வேண்டாமா என யோசிக்கையில் மாடிப்படிகளில் ஏதோ உருண்டு வந்த சத்தம். அவர்கள் இருவரும் டார்ச் லைட்டையும் மறந்து தெருப்பக்கம் பாய்ந்தார்கள்.
“ஹாஹ்…ஹாஹ்…ஹா” என்று ஆணின் சிரிப்பொலி அவர்களை இன்னும் விரட்டியது. வேகமாக ஓடி வந்து காம்பவுண்டு கதவருகில் வந்து திரும்பிப் பார்த்தால் ராஜுவும் மோகனும் டார்ச் லைட்டுடன் வந்து கொண்டிருந்தார்கள்; மோகன் கையிலிருந்த கைபேசியில் பெண்ணின் அழுகுரல் ; மறு கையில் ச.சுருட்டு புகைந்தது. அவன் கேட்டான்,
“ப்ரோ கதைக்கு அனுபவம் போதுமா”
திகிலில் ஆரம்பித்து
கிண்டலில் முடிந்த கதை
நன்றாக இந்தது.
LikeLike
நன்றி
LikeLike