(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு:
அத்யாயம் 1, அத்யாயம் 2, அத்யாயம் 3, அத்யாயம் 4
“பாப்பா மேல அம்மனை இறக்கி வச்சிருக்கோமே, போகிற வீட்டின் குல தெய்வம் இத ஏத்துக்குமா தெரியாது. அதனால பாப்பா ஒடம்புல இருந்து அம்மனை வெளிக் கொண்டாந்திடறது தான் உசிதம்” என்று கூறினார். அதை செய்வதற்கு நாள் குறித்து வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.
அன்றைக்கு ராத்திரி ஒன்பது மணிக்கு மேல உடுக்கை சத்தம் ஆரம்பித்தது.
பூசையில் வாணியை உட்கார வைக்கு முன் அந்த இடத்தில் வேப்பிலையை பரப்பி வைத்தார்கள். பத்தாம் நம்பர் நூல் கண்டைப் பிரித்து ஒருமுனையை வேப்பிலை பரப்பு மேல் இடியாப்பம் பிழிந்தது போல பரப்பி விட்டு , நூலை தரையில் படரவிட்டபடியே வந்து மறுமுனையை ஒரு எலுமிச்சம் பழத்தில் சுற்றி முடித்தார். இப்போது வாணியை வேப்பிலை பரவல் மீது உட்காரவைத்து உடுக்கடி பூசையை ஆரம்பித்தார் இளையான். அம்மனை கூப்பிட்டு , “உன் குஞ்சு திருமணம் நடக்கவேண்டும். அதனால நீ அருள் குடுத்து இந்த நூல் வழியே போய் அந்த எலுமிச்சம் பழத்தில் குடிகொள்ள வேணும்”என விண்ணபம் செய்யவே, அம்மனும் உடன்பட்டு அந்த நூல் வழியே போய் எலுமிச்சம் பழத்தில் இறங்கி வாணியை ஃப்ரீ பண்ணிவிட்டது. வேப்பிலை, பூ, பழம், குங்குமம், நூல், எ.பழம் எல்லாவற்றையும் ஒரு சிறிய மரப்பெட்டியில வைத்து மூடி குல தெய்வ கோவிலில் கொண்டுபோய் வைக்கச்சொல்லிவிட்டார்.
அவளவுதான். வெற்றிகரமாக பேய் ஓட்டும் நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இனி வாணியின் கல்யாணம்தான்.
இதில் இளையான் செய்ததெல்லாம் மனோத்துவ சிகிச்சை என்றே தோன்றுகிறது.
குணசீலம், குற்றாலம், ஏர்வாடி, திருவிடைமருதூர் போல மனநல வைத்திய கோவில்கள் போலவே பேய் ஓட்டிடும் கோவிலும் உண்டு. தாம்பரம் , செங்கல்பட்டு இடையில் உள்ளது சிங்கப்பெருமாள்கோவில். அதற்கு கிழக்கே ஆறு கிமீ தூரத்தில் அனுமந்தபுரம் என்றொரு ஊர். அங்கு சிவனின் வீரபத்திர சாமி கோவில் உள்ளது. அங்கு பேய்பிடித்தவர்கள் குணமடைவதாகக் கூறுவர். அங்கிருக்கும் குளத்தில் குளித்து விட்டு வந்து சன்னதி எதிரே அமர்ந்து தலையை முன்னும் பின்னும், வலம் இடம் மற்றும் வட்டவடிவில் சுழற்றிக் கொண்டு பெண்கள் பேயாடிக் கொண்டு இருப்பார்கள். தலை குளித்ததோடு துவட்டிக் கொள்ளாமலே இப்படி இருப்பார்கள். பெண்களின் தலைமுடி யெல்லாம் பழுப்பேறி செம்பு, பித்தளை நிறத்தில் கம்பி கம்பியாக இருக்கும். கோவிலிலிருந்து திரும்புகையில் பேயாடிய பெண்களைப் போன்ற ஒரு கூட்டத்தைப் பார்க்கலாம். அவர்களெல்லாம டியூட்டி முடிந்து குடியிருப்புக்கு திரும்பிப் போகிறவர்கள். இந்த தொழில்முறை பேயாடிகளை வைத்து பேய்பிடித்ததாக எண்ணிக்கொண்டு இருப்பவர்களை தூண்டிவிடும் வேலை இது.
இது போல்தான் எல்லா கோவில் களிலும் நடக்கும் போலும்.
ஒன்று மட்டும் உறுதி.
பேயோ, மனநல பாதிப்போ மனோதத்துவப்படியே குணமாகிறது என்பது என் துணிபு.
தெய்வம் குணமாக்கும் என்பவர் நம்பிக்கை பற்றி நானொன்றும் சொல்வதற்கில்லை.
முற்றும்.
பேய் சமர்த்தாக போய்விட்டது.
கணக்தகடுத்துப் பார்த்தால் பேய் பெண்களைத் தான் அதிகம் பிடித்திருக்கும்.
தன் மன அழுத்தத்தை வெளிப்படுத்த முடியாத பெண்களின் நடவடிக்கை அது.
தங்களின் கருத்து முற்றிலும் உண்மை.
அவரவர்கள் நம்பிக்கையில் அவர்கள் செயல்படுவது அவர்கள் விருப்பம்.
அடுத்தவர் மனதை புரிந்து செயல்பட்டால் இதெல்லாம் தேவையே இல்லை.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
குறுந்தொடர் நாளும் எதிர்பார்ப்புடன் இருந்தது.
LikeLike
பேய் சமர்த்தாக போய்விட்டது.
கணக்கெடுத்துப் பார்த்தால் பேய் பெண்களைத் தான் அதிகம் பிடித்திருக்கும்.
தன் மன அழுத்தத்தை வெளிப்படுத்த முடியாத பெண்களின் நடவடிக்கை அது.
தங்களின் கருத்து முற்றிலும் உண்மை.
அவரவர்கள் நம்பிக்கையில் அவர்கள் செயல்படுவது அவர்கள் விருப்பம்.
அடுத்தவர் மனதை புரிந்து செயல்பட்டால் இதெல்லாம் தேவையே இல்லை.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை
ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்.
குறுந்தொடர் நாளும் எதிர்பார்ப்புடன் இருந்தது.
LikeLike
எதிர்மறை விமர்சனம் இல்லாமல் தப்பித்தது மகிழ்ச்சி. நன்றி வேம்பு.
LikeLike
ஒரு வழியாக பேய் ஓடிவிட்டது.
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை.
பேய்க்கு பெண்களைத் தான் பிடிக்கும்.
ஆண்களுக்கு பேய் பிடித்து அதை ஓட்டியது அபூர்வம்.
மன அழுத்தத்தை வெளிப் படுத்த முடியாத நிலை பேயாக மாறும்.
அன்பும் ஆதரவும் எல்லாவற் றையும் விரட்டி விடும்.
குறுந்தொடர் நல்ல விறு விறுப்புடன் இருந்தது.
LikeLike
பேய் எங்கே இருந்தது; ஓடுவதற்கு? உங்கள் கருத்துப்படி மன அழுத்தம் போய்விட்டது. ‘விறு விறு’ப்பு என்பதைப் படிக்க மகிழ்ச்சி.
LikeLike
அத்தியாயம் 4 மற்றும் இரண்டையும் சேர்த்து இன்று படித்தேன்… பாரதிராஜா படத்தில் ஒரு சிறு பகுதி பார்த்தது போல இருந்தது….
LikeLike
மிக்க மகிழ்ச்சி.
LikeLike